Published:Updated:

நீலகிரி 2-ம் சீசன்: லட்சக்கணக்கில் பூத்துக்குலுங்கும் மலர்கள் - படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்!

ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா

தோட்டக்கலைத்துறை, வனத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் சுற்றுலாத் தலங்கள் அனைத்துமே சுற்றுலாப் பயணிகளின் விருப்பத்துக்குரிய தேர்வாக இருந்து வருகின்றன.

நீலகிரி 2-ம் சீசன்: லட்சக்கணக்கில் பூத்துக்குலுங்கும் மலர்கள் - படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்!

தோட்டக்கலைத்துறை, வனத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் சுற்றுலாத் தலங்கள் அனைத்துமே சுற்றுலாப் பயணிகளின் விருப்பத்துக்குரிய தேர்வாக இருந்து வருகின்றன.

Published:Updated:
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா

சுற்றுலாப் பயணிகளின் விருப்பத்திற்குரிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக விளங்கி வரும் மலை மாவட்டமான நீலகிரியில் எண்ணற்ற சுற்றுலாத் தலங்கள் உள்ளன. அதிலும் குறிப்பாகத் தோட்டக்கலைத்துறை, வனத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் சுற்றுலாத் தலங்கள் அனைத்துமே சுற்றுலாப் பயணிகளின் விருப்பத்துக்குரிய தேர்வாக இருந்து வருகின்றன. நீலகிரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் முதல் சீசனும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் இரண்டாம் சீசனும் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா

கோடை சீசன் நிறைவடைந்த சில மாதங்களுக்குப் பின் துவங்கும் பனிக்கால இரண்டாம் சீசனக்கும் சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் புதுப்பொலிவு படுத்தப்பட்டு லட்சக்கணக்கான மலர்களால் வண்ணமயமாகக் காட்சி அளிக்கும். இவற்றைக் கண்டு ரசிக்க வெளிமாநிலங்கள் மட்டும் அல்லாது வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது வழக்கம். நடப்பு ஆண்டுக்கான இரண்டாம் சீசனை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். தொடர் விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்துச் செல்கின்றனர்.

இரண்டாம் கட்ட சீசன் ஏற்பாடுகள் குறித்து நம்மிடம் பேசிய தாவரவியல் பூங்கா அதிகாரிகள், "இரண்டாம்‌ பருவ சீசனுக்காக கொல்கத்தா, காஷ்மீர்‌, பஞ்சாப்‌, புனே போன்ற பகுதிகளிலிருந்து 70 வகை மலர் நாற்றுகளின் விதைகளைப் பெற்று நடவு செய்து பராமரித்து வந்தோம். தற்போது இவை அனைத்தும் பூத்துக் குலுங்குகின்றன. அவற்றைச் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்குக் காட்சிப்படுத்தியுள்ளோம். மேலும் டேலியா, சால்வியா, இன்காமேரிகோல்டு, பிரஞ்ச் மேரிகோல்டு, பிகோனியா, டெய்சி, காலண்டுலா, டயான்தஸ்‌, கிரசாந்திமம்‌, ஆஸ்டர்‌, ஃபிரிமுலா, பால்சம்‌, அஜிரேட்டம்‌, சைக்ளமன்‌, டியூப்ரஸ்பிகோனியா, ஜெரேனியம்‌ போன்ற மலர்ச் செடிகளை 10,000 மலர்த்தொட்டிகள்‌ மலர்க்காட்சி திடலில்‌ அடுக்கிக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா

நீலகிரி இயற்கை வேளாண்மை மாவட்டமாக மாற விழிப்புணர்வு ஏற்படுத்தும்‌ வகையில்‌ 'இயற்கை வேளாண்மையை நோக்கி' என்ற வாசகம்‌ 2,000 மலர்த்தொட்டிகளால்‌ மலர்க்காட்சித் திடலில்‌ வடிவமைக்கப்பட்டுக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாது பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்கும் நோக்கில் மஞ்சப்பை குறித்து 1000 மலர்த்தொட்டிகள்‌ சுற்றுலாப் பயணிகளுக்காகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பயணிகளுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இதமான காலநிலையை இந்த இரண்டாம் பருவத்தில் கண்டு ரசிக்கலாம்" என்றனர்.