Published:Updated:

மீண்டும் தடதடத்த `நீலகிரி குயின்'... மலைப்பாதையில் தொடங்கியது சோதனை!

mountain train
mountain train

'நீலகிரி குயின்' என்ற நீராவி இன்ஜினுடன் நான்கு பயணிகள் பெட்டி மற்றும் ஒரு தளவாட பெட்டியை இணைத்து, பராமரிப்பு ஊழியர்கள் 10 பேர் பயணம் செய்து,குன்னுாரில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு சோதனை ஓட்டம் பார்த்தோம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கொரோனா பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால், சுற்றுலா தொழில் அதலபாதாளத்தில் வீழ்ந்தது.

Ooty Botanical Garden
Ooty Botanical Garden

சுற்றுலா வருவாயைச் சார்ந்துள்ள பல ஆயிரக்கணக்கான வணிகர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். பலரும் மாற்று தொழிலுக்கே சென்றுவிட்டனர்.

தற்போது, ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுவரும் நிலையில், சுற்றுலாத் தலங்கள் கட்டுப்பாடுகளுடன் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன.

Ooty Rose Garden
Ooty Rose Garden
Arun.K

நீலகிரியைப் பொறுத்தவரை ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட தோட்டக்கலை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத்தலங்கள் தற்போது மக்கள் பயன்பாட்டில் உள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத்தலங்கள் இன்னும் திறக்கப்படாமல் உள்ளன. இ-பாஸ் முறை இன்றளவும் அமலில் உள்ள, நீலகிரியில் மலை ரயில் சேவையும் துவக்கப்படாமல் உள்ளது.

Nilgiri mountain train
Nilgiri mountain train

யுனஸ்கோவின் பாரம்பர்ய அங்கீகாரம் பெற்ற நூற்றாண்டு பழைமை வாய்ந்த நீலகிரி மலை ரயில் சேவை 8 மாதங்களுக்கு மேலாக முடக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அளவிலான பயணிகளையாவது அனுமதித்து மலை ரயிலை இயக்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில், 8 மாதங்களுக்குப்பின் முதல் முறையாக குன்னுார் - மேட்டுப்பாளையம் இடையே நீராவி இன்ஜின் இயக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.

mountain train
mountain train

இது குறித்து ரயில்வே அதிகாரிகள், "மேட்டுப்பாளையம் - குன்னுார் இடையே நீராவி இன்ஜினும், குன்னுார் - ஊட்டி இடையே டீசல் இன்ஜினும் இயக்கப்படுகிறது. கொரோனா முடக்கம் காரணமாக மார்ச் முதல் மலை ரயில் இயக்கப்படாமல் உள்ளது. தற்போது 'நீலகிரி குயின்' என்ற நீராவி இன்ஜினுடன் நான்கு பயணிகள் பெட்டிகள் மற்றும் ஒரு தளவாட பெட்டியை இணைத்து, பராமரிப்பு ஊழியர்கள் 10 பேர் பயணம் செய்து, குன்னுாரில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு சோதனை ஓட்டம் பார்த்து வருகிறோம். இன்ஜின் நிலைப்பாடு குறித்து ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் மலை ரயில் இயக்குவதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு