Published:Updated:

ஊட்டி ரோஜா கண்காட்சி ஸ்பெஷல்: 30,000 ரோஜாக்களில் ட்ரீ ஹவுஸ்; 50,000 ரோஜாக்களில் பியானோ, பனி மனிதன்!

ஊட்டி ரோஜா கண்காட்சி

பல வண்ணங்களில் சுமார் ஒரு லட்சம் ரோஜாக்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள அலங்காரங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாகக் கவர்ந்து வருகின்றன.

ஊட்டி ரோஜா கண்காட்சி ஸ்பெஷல்: 30,000 ரோஜாக்களில் ட்ரீ ஹவுஸ்; 50,000 ரோஜாக்களில் பியானோ, பனி மனிதன்!

பல வண்ணங்களில் சுமார் ஒரு லட்சம் ரோஜாக்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள அலங்காரங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாகக் கவர்ந்து வருகின்றன.

Published:Updated:
ஊட்டி ரோஜா கண்காட்சி

கோடை சீசனில் நீலகிரியை காண்டு ரசிக்க வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலைத்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் மே முழுவதும் கோடை விழாக்கள் நடத்தப்படுவது வழக்கம். கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கோடை விழாக்கள் ரத்து செய்யப்பட்டன.

ஊட்டி ரோஜா கண்காட்சி
ஊட்டி ரோஜா கண்காட்சி

நடப்பு ஆண்டுக்கான கோடை விழா கடந்த 7ம் தேதி கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறிக் கண்காட்சியுடன் துவங்கியது. கோடை விழாவின் ஓர் அங்கமாக ஊட்டியில் உள்ள ரோஜா பூங்காவில் 17வது ரோஜா கண்காட்சி மூன்று ஆண்டுகளுக்கு பின் நேற்று துவங்கியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த ரோஜா கண்காட்சியை தமிழக வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் துவக்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவர் கலிபா பின் ஷயத் அல் நயான் மரணம் காரணமாக நேற்று ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்பட்டது. இதனால் கொண்டாட்ட விழாக்கள் இன்றி எளிமையாக ரோஜா கண்காட்சி துவங்கியது. இந்த கண்காட்சியை தமிழக வனத்துறை அமைச்சர் ராமசந்திரன், காங்கிரஸ் எம்.எல்.ஏ (ஊட்டி) கணேஷ், மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

ஊட்டி ரோஜா கண்காட்சி
ஊட்டி ரோஜா கண்காட்சி

இன்றும் நடைபெறும் இந்த ரோஜா கண்காட்சியைக் காண ஏராளாமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். பல வண்ணங்களில் சுமார் ஒரு லட்சம் ரோஜாக்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள அலங்காரங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாகக் கவர்ந்து வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கண்கவர் ஊட்டி ரோஜா கண்காட்சி குறித்து நம்மிடம் பேசிய நீலகிரி தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், "சிறப்பு வாய்ந்த ஊட்டி ரோஜா பூங்காவில் 4,202 ரகங்களில் ரோஜா செடிகள் உள்ளன. மொத்தம் சுமார் 40,000 ரோஜா செடிகள் தற்போது பூத்துள்ளன. மொத்தப் பூங்காவும் வண்ணமயமாகக் காட்சியளிக்கிறது. மேலும், இந்தக் கண்காட்சிக்காக 31,000 ரோஜாக்களைக் கொண்டு 15 அடி ட்ரீ அவுஸ் அமைக்கப்பட்டுள்ளது.

ஊட்டி ரோஜா கண்காட்சி
ஊட்டி ரோஜா கண்காட்சி

50 ஆயிரம் ரோஜாக்களைக் கொண்டு பியானோ, படச்சுருள், பனி மனிதன், கார்ட்டூன் உருவங்கள் மற்றும் மீண்டும் மஞ்சப்பை போன்ற வடிவங்களை உருவாக்கிருக்கிறோம். இவை தவிர திருநெல்வேலி, திருப்பூர், தருமபுரி, திண்டுக்கல், மதுரை, கிருஷ்ணகிரி, ஈரோடு, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தோட்டக்கலைத்துறையினர் ரோஜா மலர்களைக் கொண்டு பல்வேறு அலங்காரங்களைச் செய்திருக்கிறார்கள்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism