Published:Updated:

‘5G தொழில்நுட்பம், பேப்பர் லெஸ் செக் இன்’… சீனாவில் திறக்கப்பட்ட அதிநவீன விமானநிலையம்!

இதன் மூலமாக, பெய்ஜிங்கில் ஏற்கெனவே இருக்கும் விமான நிலையத்தின் சுமை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Daxing Airport
Daxing Airport

பெய்ஜிங்கில் டாக்ஸிங் சர்வதேச விமான நிலையத்தை, சீன அதிபர் ஜி ஜின்பிங் திறந்துவைத்தார். இதுவே, உலகின் மிகப்பெரிய சிங்கிள் டெர்மினல் விமான நிலையமாகும்.

Daxing Airport
Daxing Airport

11 மில்லியன் சதுர அடியில், நட்சத்திர வடிவிலான இந்த விமான நிலையத்தை இராக்-பிரிட்டிஷ் கட்டடக் கலைஞர் ஜஹா ஹதீத் வடிவமைத்துள்ளார். ஆண்டு ஒன்றுக்கு 72 மில்லியன் பயணிகளைக் கையாளும் விதமாய் உருவாக்கப்பட்டுள்ளது இந்த விமான நிலையம். இது, சுமார் 17 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் ஐந்து ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது.

வாவே நிறுவனமும் 5 ஜி ஸ்மார்ட் டிராவல் சிஸ்டத்தை இந்த விமான நிலையத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதிலிருக்கும் facial recognition மூலமாகப் பயணிகள் எளிதாக பேப்பர் லெஸ் செக் இன் செய்துகொள்ள முடியும்.

Daxing Airport
Daxing Airport

பிரமாண்டமான தொடக்க நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, இந்த விமான நிலையத்தின் முதல் வணிகப் பயணமாக சீனாவைச் சேர்ந்த 'சதர்ன் ஏர்லைன்ஸ்' விமானம், சீனாவின் தெற்கு பிராந்தியமான குவாங்டாங்கிற்குப் புறப்பட்டுச்சென்றது.

இந்தப் புதிய விமான நிலையம் செயல்பாட்டுக்கு வந்திருப்பதால், ஏற்கெனவே பெய்ஜிங்கில் இருக்கும் விமான நிலையத்தில் மக்கள் கூட்டம் கட்டுப்படுத்தப்படும் என்றும், வேலைப் பளு குறையும் என்றும் கூறப்படுகிறது. பெய்ஜிங் விமான நிலையம் உலகின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையமாகக் கருதப்படுகிறது.

Daxing Airport
Daxing Airport

பரிசோதனையின்போது 5G வேகமானது, ஒரு விநாடிக்கு 1.2 GB வேகத்தைத் தாண்டி சென்றுள்ளது, இது 4ஜியை விட 100 மடங்கு வேகமானது என வாவே நிறுவனம் தெரிவித்திருக்கிறது.