Published:Updated:

'மக்களின் காலணிகளைச் சுத்தம் செய்யும் கோடீஸ்வரர்கள்- அமிர்தசரஸ் ஆச்சரியங்கள் #VikatanDiwaliMalar2019

அமிர்தசரஸ்
அமிர்தசரஸ்

கோயிலில் வழங்கப்படும் சாப்பாடுதானே என்று சாதாரணமாக நினைக்க வேண்டாம். அந்தச் சப்பாத்தியின் சுவை ஐந்து நட்சத்திர ஓட்டலில்கூடக் கிடைக்காது.

பஞ்சாப் மாநிலத்துக்குப் பயணம் செல்பவர்களை, 'ஒரு எட்டு பொற்கோயிலுக்கும் போய்விட்டு வரலாமே...' என எண்ணவைத்து, சுண்டியிழுக்கும் தங்க நகரம் அமிர்தசரஸ். 24 காரட் சொக்கத் தங்கத்தால் ஜொலிக்கும் இந்தப் பொற்கோயில்தான் சீக்கியர்களின் புனிதத் தலம். அமிர்தசரஸ் பஸ் ஸ்டாண்டைவிட்டு வெளியே வந்தால் ஆட்டோ, சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டுநர்கள் 'அமிர்தசரஸ், ஜாலியன் வாலாபாக், வாகா...' எனக் கூவிக் கூவி அழைக்கிறார்கள்.

நெருக்கடியான தெருக்களையும், வாகனங்களின் அழுக்கையும் பார்க்கும்போது, ஏதோ வேறு நாட்டுக்குள் போனதுபோல இருந்தது. அங்கிருந்து கூப்பிடும் தூரத்தில்தான் பாகிஸ்தானையும் இந்தியாவையும் பிரிக்கும் 'வாகா' எல்லை. முதலில் அமிர்தசரஸ் பொற்கோயிலை தரிசிக்கலாம் என சைக்கிள் ரிக்‌ஷாவில் ஏறி உட்கார்ந்தோம். சில கிலோமீட்டர் தூரத்திலிருந்த பொற்கோயிலுக்குச் செல்ல, 'முக்கால் மணி நேரம் பிடிக்கும்' என்றார் ரிக்‌ஷாக்காரர். அதற்குள், பொற்கோயில் வரலாற்றைக் கொஞ்சம் அசைபோட்டுப் பார்த்தோம்.

அமிர்தசரஸ்
அமிர்தசரஸ்

> விகடன் தீபாவளி மலர் 2019... அப்படி என்ன ஸ்பெஷல் > க்ளிக் செய்க > http://bit.ly/2BhbND1

> பொற்கோயில் வளாகத்தில் நுழையும்போதே தலையில் கர்ச்சீப்பால் மூடிக்கொண்டும், கை கால்களைச் சுத்தம் செய்துகொண்டும்தான் செல்ல வேண்டும் என அன்பாகச் சொல்கிறார்கள். தூரத்திலிருந்து பார்க்கும்போதே, கண்களைக் கூசச் செய்யும் அளவுக்கு ஜொலித்துக் கொண்டிருந்தது பொற்கோயில். கோயிலைச் சுற்றிலும், அகழியிலிருந்த நீரிலும் சொக்கத் தங்கத்தின் ஒளி, நீரையும் பொன்னிறமாகக் காட்டியது. நீண்ட வரிசையில் நின்று, தள்ளு முள்ளு இல்லாமல் உள்ளே சென்று, வாழும் குருவாக வழிகாட்டிவரும் 'குரு கிரந்த சாகிப்' நூலை தரிசித்துவிட்டு வெளியில் வந்தால், கை நிறைய கோதுமையால் செய்யப்பட்ட இனிப்பு மாவைக் கொடுத்துக்கொண்டிருந்தார்கள்.

> சுத்தமான உணவு அருந்தும் கூடம், தரையில் பாயை விரித்துப் போட்டு உட்காரவைத்தார்கள். ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் சாப்பிடும் அளவுக்குப் பரந்து விரிந்திருந்தது கூடம். கோயிலில் வழங்கப்படும் சாப்பாடுதானே என்று சாதாரணமாக நினைக்க வேண்டாம். அந்தச் சப்பாத்தியின் சுவை ஐந்து நட்சத்திர ஓட்டலில்கூடக் கிடைக்காது. நெய் தடவிய சப்பாத்தி, சூடான அரிசி சாதம், பருப்புக் கடைசல், பஞ்சாபி சப்ஜி, கோதுமைப் பாயசம் என விருந்துபோல அமுது படைத்தார்கள்.

அமிர்தசரஸ்
அமிர்தசரஸ்

> இரண்டு நாள்கள் அமிர்தசரஸ் பொற்கோயில் வளாகத்திலே சுற்றித் திரிந்தோம். நாள் முழுக்க மக்கள் வருவதும் செல்வதுமாக இருந்தார்கள். புழுதிபடிந்த ஷூக்களைக் கொடுத்தால், திரும்பப் பெறும்போது அவை பளபளவென மின்னுகின்றன. இலவசக் காலணிப் பாதுகாப்பகத்தில் எட்டிப் பார்த்தால், கோட்டு சூட்டு போட்ட சர்தார்ஜிகள் ஷூக்களுக்கு பாலிஷ் போட்டுக்கொண்டிருந்தார்கள். அங்கிருந்த சேவகரிடம் பேசினோம். ''மக்களின் காலணிகளைச் சுத்தம் செய்யும் இவர்களில் பலர் கோடீஸ்வரர்கள். அமெரிக்காவில் சாஃப்ட்வேர் கம்பெனியில் சி.இ.ஓவாக இருப்பவர்கூட இன்று இந்தச் சேவையில் ஈடுபட்டிருக் கிறார்...'' எனச் சொல்லி ஆச்சர்யப்படுத்தினார்.

> அமிர்தசரஸ் பொற்கோயிலிலிருந்து, நடந்து செல்லும் தூரத்தில்தான் ஜாலியன்வாலா பாக் பூங்கா இருக்கிறது. பொற்கோயிலுக்கு வருபவர்கள், இந்தப் பூங்காவையும் பார்வையிடத் தவறுவதில்லை.

- ரம்மியமான சூழல், இனிமையான இசை, சுவையான உணவு, நேசமான மனிதர்கள் என... அன்பும் கருணையுமாக அமைந்தது அமிர்தசரஸ் பயணம். இந்த அனுபவத்தை நம் மனத்திரையில் விரிக்கும் விரிவான பயணக் கட்டுரையை, விகடன் தீபாவளி மலரில் தவறவிடாதீர்கள்.

> விகடன் தீபாவளி மலர் 2019... அப்படி என்ன ஸ்பெஷல் > க்ளிக் செய்க > http://bit.ly/2BhbND1

'மக்களின் காலணிகளைச் சுத்தம் செய்யும் கோடீஸ்வரர்கள்- அமிர்தசரஸ் ஆச்சரியங்கள் #VikatanDiwaliMalar2019

> விகடன் தீபாவளி மலர் 2019... அப்படி என்ன ஸ்பெஷல் > க்ளிக் செய்க > http://bit.ly/2BhbND1

அடுத்த கட்டுரைக்கு