Published:Updated:

வாகனம் ஓட்டுவதற்கு உலகிலேயே மோசமான இடம் மும்பை... சிறந்த இடம் எது?

டிரைவிங் மீது உங்களுக்கு ஆர்வம் இருந்தால், மும்பை பக்கம் சென்றுவிடாதீர்கள் என்கிறது, 'மிஸ்டர் ஆட்டோ' ஆய்வு.

டிரைவிங்
டிரைவிங்

உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஐரோப்பிய  நிறுவனமான 'மிஸ்டர் ஆட்டோ' சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தி, உலகில் வாகனம் ஓட்டுவதற்குச் சிறந்த மற்றும் மோசமான நகரங்களைப் பட்டியலிட்டுள்ளார்கள். இதில், வாகனம் ஓட்டுவதற்குத் தகுதியற்ற நகரங்களில் மும்பை முதலிடம் பிடித்துள்ளது.

மும்பை
மும்பை

100 நகரங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், கனடாவில் உள்ள கல்கரி எனும் நகரம், வாகனம் ஓட்டுவதற்குச் சிறந்த நகரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. வாகன நெரிசலும் விபத்துகளும் குறைவாக இருப்பது மற்றும் வாகன பயன்பாட்டுச் செலவு உள்ளிட்ட 15 காரணிகளின் அடிப்படையில் இது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆய்வு முடிவில், ஜப்பானின் ஒசாகா நகரம் மிகக் குறைவான சாலை இடையூறுகள் கொண்ட நகரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 100 நகரங்களின் பட்டியலில், மும்பை 100-வது இடத்தில் உள்ளது. வாகனம் ஓட்டுவதற்கு மோசமான சூழல் கொண்ட நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது, மும்பை. பெட்ரோல் விலை, சாலை வரி, அதிக வாகன விபத்து உயிரிழப்புகள், வாகன நெரிசல், கார்களின் சராசரி வயது மற்றும் சிட்டியின் ஆவரேஜ் வேகம் போன்ற விஷயங்களைக் கணக்கிட்டதில், 100 மதிப்பெண்களுக்கு 1 மதிப்பெண் மட்டுமே வாங்கி கடைசி இடத்தைப் பெற்றுள்ளது மும்பை. இந்த வரிசையில், கொல்கத்தா 3-ம் இடத்தில் உள்ளது. கொல்கத்தா பெற்ற மதிப்பெண் 29.99.

வாகனம் ஓட்ட சிறந்த டாப் 10 நகரங்கள்
வாகனம் ஓட்ட சிறந்த டாப் 10 நகரங்கள்
வாகனம் ஓட்ட தகுதியற்ற டாப் 10 நகரங்கள்
வாகனம் ஓட்ட தகுதியற்ற டாப் 10 நகரங்கள்

பெட்ரோல் விலை, நார்வேயில் இருக்கும் ஓஸ்லோ எனும் நகரத்தில் அதிகமாக இருப்பதாக இந்த ஆய்வு சொல்கிறது (இங்கே எலெக்ட்ரிக் கார்களின் பயன்பாடு அதிகம்). இந்த நகரத்தில், ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 1.91 டாலர் (137 ரூபாய்). பெட்ரோல் விலை குறைவான இடமாக நைஜீரியாவில் இருக்கும் லகோஸ் நகரம் உள்ளது. இங்கே, பெட்ரோல் விலை 0.40 டாலர்/லிட்டர்(29 ரூபாய்).

ஆய்வின் அடிப்படை மற்றும் முடிவுகள் இங்கே - https://www.mister-auto.co.uk/driving-cities-index-usd/