Published:Updated:

திருமணநாள்.. கேட்ஜெட்ஸ்.. ஷாப்பிங்.. இவற்றை விடவும் பரவசமான `ஒன்று’! - அசத்தலான ஆய்வு முடிவுகள்

பயணம் ( Pixabay )

உடற்பயிற்சி செய்யும்போது இந்த இரண்டு ஹார்மோன்களின் சுரப்பு அதிகரிக்கும். புதிய விஷயங்களை அனுபவிக்கும் பயணமும் இந்த ஹார்மோன்களின் சுரப்புக்குக் காரணமாக அமைகிறது. இதனால்தான்..

திருமணநாள்.. கேட்ஜெட்ஸ்.. ஷாப்பிங்.. இவற்றை விடவும் பரவசமான `ஒன்று’! - அசத்தலான ஆய்வு முடிவுகள்

உடற்பயிற்சி செய்யும்போது இந்த இரண்டு ஹார்மோன்களின் சுரப்பு அதிகரிக்கும். புதிய விஷயங்களை அனுபவிக்கும் பயணமும் இந்த ஹார்மோன்களின் சுரப்புக்குக் காரணமாக அமைகிறது. இதனால்தான்..

Published:Updated:
பயணம் ( Pixabay )

ஏராளமான கனவுகள், எதிர்பார்ப்புகளுடன் வாழ்க்கைத் துணையின் கரம்பிடித்த தருணத்தை நினைத்து, இன்றும் வயிற்றில் பட்டாம்பூச்சி சுழலும் நினைவலைகளில் மூழ்கியிருப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால், அந்தத் திருமண நாளைவிட சந்தோஷம் தருவது பயணமே என்று கூறுகிறது ஓர் இணையம் நடத்திய ஆய்வு முடிவுகள். அதன் தொகுப்பு இதோ...

Couple Goal
Couple Goal
Pixabay

1. 17 நாடுகளைச் சேர்ந்த 17,000 பேர்களிடம் ஓர் இணையம் நடத்திய ஆய்வில், திருமண நாளைவிடப் பயணமே உண்மையான மகிழ்ச்சியின் ரகசியம் என்று முடிவுகள் பதிவாகியுள்ளன.

2. இந்த ஆய்வில் பங்குபெற்றவர்களில், 49 சதவிகிதம் பேர் தங்கள் திருமண நாளைவிட விடுமுறை நாள்களில் சந்தோஷமாக உணர்வதாகத் தெரிவித்திருக்கின்றனர்.

3. காதலி/காதலனோடு வெளியே செல்லும் முதல் நாளில் ஏற்படும் மகிழ்ச்சியைவிட, 45 சதவிகிதம் பேர் பயண நேரத்தில் மிகுந்த சந்தோஷத்துடன் இருக்கின்றனர் என்று பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

4. ஏறக்குறைய 29 சதவிகிதம் பேர், பெற்றோராக இருப்பதைவிடப் பயண நேரம் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று பதிலளித்துள்ளனர்.

Shopping
Shopping
Pixabay

5. வித்தியாசப் பொருள்களை வாங்குவதைவிடவும் தொலைதூரப் புதிய இடங்களுக்குச் செல்வதே மகிழ்ச்சியளிப்பதாக 70 சதவிகிதம் பேர் என்று குறிப்பிட்டிருக்கின்றனர்.

6. புதிய கேட்ஜெட்ஸ் மற்றும் ஆடைகளைத் தேடித்தேடி வாங்கும் மக்கள் அதிகரித்து வரும் இந்தக் காலகட்டத்தில், 56 சதவிகிதம் பேர் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தால் ஷாப்பிங் செய்வதைத் தியாகம் செய்யவும் தயார் என்று பதிலளித்திருக்கின்றனர்.

7. 48 சதவிகிதம் பேர், `பயணத்துக்காக வீட்டு மேம்பாட்டுத் திட்டங்களை ஒத்திவைப்பதற்கு கூடப் பொருட்படுத்த மாட்டோம்' என்று கூறியுள்ளனர்.

Travel
Travel
Pixabay

8. எண்டார்பின்ஸ் மற்றும் ஆக்ஸிடோசின் ஆகிய ஹார்மோன்கள்தான் நம் வெவ்வேறு மனநிலைக்குக் காரணம். உடற்பயிற்சி செய்யும்போது இந்த இரண்டு ஹார்மோன்களின் சுரப்பு அதிகரிக்கும். புதிய விஷயங்களை அனுபவிக்கும் பயணமும் இந்த ஹார்மோன்களின் சுரப்புக்குக் காரணமாக அமைகிறது. இதனால்தான் திருமண நாளைவிடப் பயணம் சுறுசுறுப்பையும் உற்சாகத்தையும் தருகிறது.