Published:Updated:

இளங்காற்றில் ஓர் இனிய உலா! - அழகு... ஆர்மீனியா... பயணம்

ஆர்மீனியா
பிரீமியம் ஸ்டோரி
News
ஆர்மீனியா

சுமிதா ரமேஷ் (துபாயிலிருந்து)

தத்தேவ்... ஸூயினிக் பிரதேசத்திலுள்ள மலைப்பகுதியின் படர்ந்த சமவெளியில் 9-ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட மடாலயத்துடன் கூடிய சர்ச். 11-வது நூற்றாண்டின் ஆரம்பத்தில் 1,000 துறவிகளுடன் பல மாணவர்களைக் கொண்டிருந்த இந்த மடாலயம், கி.பி 1044-ல் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த படை வீரர்களால் சேதப்படுத்தப்பட்டு, மீண்டும் சீரமைக்கப்பட்டது. கி.பி 1170-ல் மீண்டும் துருக்கியப் படையினரால் கைப்பற்றப்பட்டு அங்கிருந்த 10,000-க்கும் மேற்பட்ட நூல்கள், எழுத்துருக்கள் அழிக்கப்பட்டன. மீண்டும் கி.பி 1796-ல் பெர்ஷிய படையால் சூறையாடப்பட்டது. 1936-ல் நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டது. எத்தனை தாக்குதல்கள்... எத்தனை சீரமைப்புகள்...

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

14 மற்றும் 15-ம் நூற்றாண்டில் இங்கு ஒரே நேரத்தில் 500 மாணவர்களும், 500 துறவிகளும் தங்கிப் படித்ததாகப் பதிவுகள் உள்ளன.

இளங்காற்றில் ஓர் இனிய உலா! - அழகு... ஆர்மீனியா... பயணம்

மேம்படுத்தப்பட்ட அறிவியல், மதம், உளவியல் சம்பந்தப்பட்ட பாடங்கள் போதிக்கப்பட்டிருக்கின்றன. மிக மோசமான படையெடுப்புகளால் மொத்த தேசமும் உலுக்கப்பட்டிருந்தபோதிலும்,கோட்டை போல தனிமைப்படுத்திக்கொண்ட இந்தப் பகுதிக்குள்ளேயே தங்களுக்கு வேண்டிய பொருள்களைத் தயார்செய்துகொண்டு, சுற்றியுள்ள மலைவாழ் மக்களுக்கும் வேண்டிய பொருள்களைத் தந்ததை பெருமிதத்தோடு சொல்கிறார்கள்.

எதிரிகளின் குதிரைக் குளம்படிச் சத்தங்களைக் கேட்டு அவர்களின் படையெடுப்பைத் தடுத்து ஆர்மீனியாவுக்குள் நுழையவிடாமல் செய்ததில் இங்கிருந்த துறவிகள் பெரும் பங் காற்றினார்களாம். ஒருகாலத்தில் பெகன் கோயில் இருந்த இடமே இந்த மடாலயமாக உருமாறியுள்ளதாம். `தத்தேவ்’ என்ற வார்த்தைக்கு `பறக்க இறக்கை களைக்கொடு’ என்று பொருளாம்.

இங்கு நான்கு சர்ச்சுகள் உள்ளன. பால்கனி போன்ற பகுதியிலிருந்து பார்க்கையில் பரந்து விரிந்த பள்ளத்தாக்கு பகுதி பச்சைப் பசேலென காட்சியளிக்கிறது. ஜில் காற்று முகத்தில் அறைந்து அழைக்கிறது. நாமும் கைகளை விரித்துக்கொண்டு பறவையாகப் பறக்க ஆசைப்படுகிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

1995-ல் யுனெஸ்கோவால் பழம்பெரும் இடமாக அங்கீகரிக்கப்பட்ட இந்த மடாலயம் தன்னுள் கொண்டுள்ள கோட்டை போன்ற பகுதிகள் அப்படியே இன்றும் பராமரிக்கப்படுகின்றன. குறிப்பாக 13-வது நூற்றாண்டின் சமையலறை, உணவு உண்ணும் பகுதிகள், தங்குமிடங்கள்... வெளியே வெயில் அடித்தாலும் உள்ளுக்குள் ஏசி போல மென்காற்று தவழ்கிறது.

இளங்காற்றில் ஓர் இனிய உலா! - அழகு... ஆர்மீனியா... பயணம்

இங்கு `காவஸான்' எனப்படும் ஸ்தூபி நினைவுத் தூணாக அமைக்கப்பட்டுள்ளது. எட்டு மீட்டர் உயரமுள்ள இதன் தலையில் ஆர்மீனியர்களின் பாரம்பர்ய கச்சகர் சிலுவை பொருத்தப்பட்டுள்ளது. 10-வது நூற்றாண்டில் அமைக்கப்பட்ட இந்தச் சின்னத்துக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. சிறிய அளவிலான பூகம்பம், நில அதிர்வுகள் நிகழும்போது சாய்ந்து எச்சரிக்கை சிக்னல் தருமாம். நில அதிர்விலிருந்து மீண்டபின், மீண்டும் தனது செங்குத்தான நிலைக்குத் திரும்பிவிடுமாம்... சூப்பர்ல!

இந்த ஸ்தூபியிலும் ஒரு சூரிய கடிகாரம் உள்ளது. சூரியக்கதிர்கள் இதன் மேல் விழும்போது நிழல் படும் கோட்டை அளந்து நேரம் கணக்கிடுகிறார்கள்.

சுத்துப்பட்டு கிராம மக்கள் கொண்டுவரும் எண்ணெய் வித்துகளிலிருந்து எண்ணெய் எடுத்துத்தரும் மெகா சைஸ் கல்லினால் ஆன சுத்தி, இழுவை இயந்திரங்கள் இன்றும் அப்படியே பாதுகாக்கப்பட்டு, கூடவே அது இயங்கிய விதம் காட்சிப்படுத்தப்பட்டு வீடியோ வாக ஒளிபரப்பப்படுகிறது.

இந்த மடாலயத்துக்குச் செல்லும் நடைபாதையில் நம்மை `நமஸ்தே' என்று கைகூப்பி வரவேற்கும் பெண்கள் சிறிய கடைகள் வைத்துள்ளனர். பூச்சற்ற பளிச் ஆப்பிள் நிற கன்னங்களுடன் புன்னகைக்

கிறார்கள். உலர்பழங்கள், தேன் மற்றும் இந்தப் பிரதேசத்துக்கே உரிய தின்பண்டங்கள் கிடைக்கின்றன. ஆர்மீனியரால் தயாரிக்கப் பட்ட பாரம்பர்ய பொம்மைகள், வால்நட்ஸ் போன்றவற்றை வாங்கிக்கொண்டோம்.

இளங்காற்றில் ஓர் இனிய உலா! - அழகு... ஆர்மீனியா... பயணம்

தத்தேவ் மடாலயத்தைக் கண்டு லயித்து மீண்டும் `ட்ராம் வே' வழியாகப் பயணித்து ஹாலிஸ்டார் வந்து சேரலாம். இல்லையெனில் மலைப்பகுதியிலிருந்து கீழே இறங்கிச்செல்லும் பாதையில் அமைதியான கிராமங்களின் வழியே இரண்டு நாள்கள் பயணித்து சாலை வழியாகவும் தலைநகரை அடையலாம்.

இந்த தென்கிழக்குப் பகுதியிலிருந்து 280 கிலோமீட்டர் பயணித்தால் யெரவானை அடையலாம். வழியில் அன்றைய கௌபாய் போன்றவர்களை இன்றும் காண முடிவது ஆச்சர்யம். வறண்ட குளிரால் விரைத்துப்போன சிவந்த எலும்பு துருத்தும் முகங்களுடன், அதே தொப்பி... குதிரையின்மேல் சென்றவாறு ஆடுகளைக் குச்சியினால் தட்டித்தட்டிச் செல்கின்றனர்.

இந்தப் பகுதியில் மேம்படுத்தப்பட்ட இருவழிச் சாலைகள் பயணத்தை இனிதாக்குகின்றன. ஆங்காங்கே பக்கவாட்டில் குதிரைகள் நிறுத்தப்பட்டுள்ள, தலையில் இரும்புத் தகடுகளைக் கவிழ்த்துக்கொண்ட சாதாரண வீடுகள் நமக்கு கையசைத்து வழியனுப்புவதாகத் தோன்றுகிறது.

வழியெங்கும் பெரிய பெரிய ஒயின் தொழிற்சாலைகளும் காணக்கிடைக்கின்றன.

குடிசைத்தொழிலாக மது தயாரிக்கும் மக்களும் உண்டு. அவர்கள் பழைய பழுப்பேறிய பானை போன்ற குடுவைகளை வீடுகளின் முன்வைத்து விற்பனை செய்கின்றனர். விருந்தினர்களுக்கு வெள்ளை, சிவப்பு ஒயின்கள் தருவதை கௌரவமாகக் கொள்கின்றனர்.

பால்கனி போன்ற பகுதியிலிருந்து பார்க்கையில் பரந்து விரிந்த பள்ளத்தாக்கு பகுதி பச்சைப்பசேலென காட்சியளிக்கிறது. ஜில் காற்று முகத்தில் அறைந்து அழைக்கிறது.

`அராரரட்' என்ற இங்குள்ள ஒயின் ஃபேக்டரி தயார் செய்யும் பான வகைகள் உலகெங்கும் செல்கின்றன. ஒயின் ஏற்றுமதியில் முதலிடம் என்ற பெயரும் ஆர்மீனியாவுக்கே சொந்தம்.

சுற்றுலாவுக்கும் சுத்தத்துக்கும் மிகுந்த மதிப்பு தருகிறார்கள் ஆர்மீனியர்கள். இங்கு வரும் பயணிகள் பெரும்பாலும் அண்டை நாட்டவர்களே. லெபனான் நாட்டினர், அரேபியர்கள் அதிகம். மிக அரிதாக ஐரோப்பியர்கள் மற்றும் இந்தியர்களைக் காணமுடிகிறது.

`துருக்கி மக்களையும் வரவேற்கிறோம்' என்கிறார்கள் இந்த மக்கள். எனினும், ஆர்மீனியர்களுடன் நட்புக்கரம் நீட்டி யுள்ளது ஜியார்ஜியா மட்டுமே. அந்த நாட்டுக்கு மட்டும் ரயில் மற்றும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அஸர்பைஜான், துருக்கி எல்லைகள் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளன.

சோகத்தைச் சுமந்தபடியே காணப் படும் அழகான ஆர்மீனியா பல படையெடுப்புகள், இழப்புகளைத் தாண்டி சுவாசித்துக் கொண்டிருக்கிறது.

வரலாறு கேட்டால் வலிதான் மிகுகிறது நமக்கும். மனம் சற்று கனத்தே திரும்பினாலும் மறக்கமுடியாத பயணம் இது.

நீங்களும் சென்று வாருங்கள்!