Published:Updated:

தீரா உலா: பேரரசுகளின் தலைநகரம்!

தீரா உலா
பிரீமியம் ஸ்டோரி
News
தீரா உலா

உதிர்ந்த இறகுகளில் பறந்த ஆகாயம் இருக்கும்தானே! - கல்யாண்ஜி

வரலாறு என்பது மனிதர்களுக்கு இறகுகளைக் கையில் வைத்துக்கொண்டு வானத்தை அளக்கும் முயற்சியாகவே இருந்து வருகிறது. பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் `வரலாறு இறந்தகாலம் பற்றியது, பூகோளமும் குடிமையியலும் நிகழ்காலத்தைச் சொல்வது, அறிவியல் எதிர்காலத்தைக் கனவு காண்பது' என எண்ணியிருந்தேன். உலகில் வரலாற்றுச் சுவடுகள் என எஞ்சியிருக்கும் ஒவ்வொரு தலத்திலும் கால் பதித்து நின்று, அவற்றை அணுகியோ அண்ணாந்தோ நோக்கும்போது, காலம் காற்றிலாடும் மெல்லிய மஸ்லின் திரைச்சீலையாக ஆகிவிடுகிறது. இடையில் தொங்கும் அத்திரையைக் கையால் பற்றி சட்டென்று விலக்கிவிட்டால் வரலாறென்பது நம் முன்னால் நிகழ்ந்துகொண்டிருக்கும் கணமாக மாறிவிடக் கூடும். மோனலிசாவின் படத்தைப் பார்ப்பவர்க்கு அவள் நம்மைப் பார்ப்பதாகவே தோன்றுவதுபோல. துருக்கியில் ஏராளமான இடங்களில் நான் இப்படி வரலாற்றுத் தருணங்களில் வாழ்வதாக உணர்ந்தேன்.
தீரா உலா
தீரா உலா

2014 ஜனவரி 24-ம் தேதி எங்கள் வீட்டின் இளைய தேவதை கீர்த்தினி பிறந்தாள். 2015 ஜனவரியில் அவள் முதல் பிறந்தநாளை எங்கே கொண்டாடுவதென யோசித்து இஸ்தான்புல் போக முடிவு செய்தோம். இஸ்தான்புல்லுக்கு எல்லோரையும் கூட்டிப்போக முடியாதென்பதால் இரு தினங்கள் முன்னதாகவே குவைத்தில் உறவினர்கள், நண்பர்கள்கூடி வீட்டிலேயே அவள் பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடிவிட்டுக் கிளம்பினோம். ஜனவரி என்பதால் கடும்குளிர், திடீர் மழை என எல்லாவற்றுக்குமான ஆயத்தங்களுடனேயே கிளம்பியிருந்தோம். நிறைய நடக்க வேண்டியிருப்பதால், குழந்தைகள் இருவருக்குமென இரண்டு ஸ்டிரோலர்கள் வேறு. 23-ம் தேதி விடியற்காலையில் இஸ்தான்புல்லில் விமானம் தரையிறங்கியது. ஹோட்டலிலிருந்து கார் அனுப்பியிருந்தார்கள். காரில் சென்றுகொண்டிருக்கும் போதே, உறைக்குள்ளிருந்து வெளியே எடுக்கப்படும் அழகிய வாழ்த்து அட்டை போல இருளுக்குள்ளிருந்து மெள்ள வெளியேறி, கண்களுக்குத் துலக்கமாகத் தொடங்கியது இஸ்தான்புல் நகரம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
உதிர்ந்த இறகுகளில் பறந்த ஆகாயம் இருக்கும்தானே!
- கல்யாண்ஜி

புகழ்பெற்ற ஓவியர் மைக்கேல் ஏஞ்சலோ வரைந்த God created Adam ஓவியத்தைப் பார்த்திருக்கிறீர்களா? கடவுளும் மனிதனும் சுட்டு விரல் நீட்டி ஒருவரையொருவர் தொட்டுக்கொள்ள முயற்சி செய்வது போலிருக்கும். உலக வரைபடத்தில் ஆசியா - ஐரோப்பா எனும் இருபெரும் கண்டங்களுக்கிடையே, இஸ்தான்புல் இப்படியொரு சுட்டு விரலாகத்தான் நீண்டிருக்கிறது. இருவேறு நிலங்கள், இருவேறு மக்கள், இருவேறு கலாசாரங்கள் இணைந்தும் பிரிந்தும் வர்ணஜாலம் காட்டுமோர் அற்புத நிலப்பரப்பு. இடையில் ஐரோப்பாவையும் ஆசியாவையும் பிரிக்கும் ஜலசந்தியாக விளங்கும் போஸ்போரஸ்... நதியென்று அழைக்கப்படும் உடல் சிறுத்த கடல். இதன் இரு கரைகளிலும் அமைந்துள்ள இஸ்தான்புல் நகரம் இரு கண்டங்களில் அமைந்துள்ள ஒரே பெரு நகரமாக விளங்குகிறது. உலக வரலாற்றில், ஏறத்தாழ 16 நூற்றாண்டுகளாக நான்கு பேரரசுகளுக்குத் தலைநகரமாக விளங்கிய ஒரே நகரம் என்ற பெருமையும் இதற்கு உண்டு. இது, துருக்கியில் உள்ள நகரங்களிலேயே மிக அதிக மக்கள்தொகை கொண்ட நகரம். அந்நாட்டின் பண்பாட்டு மற்றும் பொருளாதாரத் தலைநகரமும் இதுவே.

தீரா உலா
தீரா உலா

`ரோமானியப் பேரரசர் கான்ஸ்டன்டைன் பெயரால் பண்டைய காலத்தில் இது, கான்ஸ்டான்டிநோபிள் என அழைக்கப்பட்டது. ரோமன் மற்றும் பைசன்டைன் காலத்தில் கிறிஸ்துவ நகரமாக இருந்தது. ஆனால், 1453-ல் ஓட்டோமான்களின் வெற்றிக்குப்பின் `கலிப' என்ற இஸ்லாமியக் கோட்டை நிறுவப்பட்டது. ஓட்டோமான் பேரரசு தனது 623 ஆண்டுக்கால வரலாற்றில், கிழக்கு நாடுகளோடும் மேற்கு நாடுகளோடும் தொடர்பு வைத்திருந்தது. 16-ம், 17-ம் நூற்றாண்டுகளில் இது உலகின் பலம் வாய்ந்த வல்லரசுகளில் ஒன்றாகத் திகழ்ந்தது. அந்தக் காலத்தின் அரண்மனைகள் மற்றும் மசூதிகள் இன்றும் இஸ்தான்புல் மலைகளில் காணப்படுகின்றன. 1923-ல் துருக்கி குடியரசான பின் தலைநகர் இஸ்தான்புல்லிலிருந்து அங்காராவுக்கு மாற்றப்பட்டது. 1930-ல் அதிகாரபூர்வமாக இஸ்தான்புல் என்று பெயர் மாற்றப்பட்டது' என்கிறது விக்கிபீடியா.

அவள் பாட்டுக்கு உறங்குவதும் விழிப்பதும், விழித்திருக்கும் நேரங்களில் வேறெதையும் பார்க்க விடாமல் எங்களைச் சிரித்தே மயக்குவதுமாக இருந்தாள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தீரா உலா
தீரா உலா

நாங்கள் இஸ்தான்புல்லில் தங்கியிருந்த ஹோட்டலின் பெயர் Hotellino. சிறிய - ஆனால், சிறந்த தங்கும் விடுதி. இஸ்தான்புல்லில் தங்குவதற்காக இடம் தேடிக்கொண்டிருந்தபோது நான் கவனித்து ஆச்சர்யப்பட்ட ஒரு விஷயம், இங்கே பெரும்பாலான ஹோட்டல்களில் லிஃப்ட் வசதி இருப்பதில்லை (லக்கேஜை எப்டிப்பா மேல தூக்கிட்டுப் போறது!?). லிஃப்ட் வைத்திருப்பவர்கள் Free WiFi, Complementry Breakfast, Shuttle service என்பது போல Elevator-யும் முக்கிய Amenity-யாகச் சேர்க்கிறார்கள். ஹோட்டலினோவில் `ஒருவர் கிடக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம்’ என்பது போல குட்டியாக ஒரு லிஃப்ட் வைத்திருந்தார்கள். நெருக்கியடித்து நின்ற பின்னும் லக்கேஜுக்கு இடமில்லை. எங்கள் பெட்டிகளை ஒவ்வொன்றாக வைத்து மேலே கொண்டு வந்து சேர்த்தார்கள்.

காலையிலேயே அறைக்கு வந்துவிட்டாலும், இரவு விமானத்தில் சரியாக உறங்காததாலும், குழந்தைக்கு உடம்பு நலுங்கிவிடக் கூடாதென்பதாலும் ‘நெக்ஸ்ட்டு - ரெஸ்ட்டு’ மோடுக்குப் போய் விட்டோம். அம்மு மேற்கத்திய உணவுகளுக்குப் பழகிவிட்டிருந்தாலும், சின்னவளுக்காக இங்கேயும் ரைஸ் குக்கரைத் தூக்கி வந்திருந்தேன். அறையிலிருந்த டிரஸ்ஸிங் டேபிளை ஒழுங்குபடுத்தி மினி கிச்சனாக மாற்றிக்கொண்டேன். குட்டியாகத் தூக்கம் போட்டு எழுந்து, குளித்து, சாதம் வைத்து, அருகிலிருந்த கடையில் முட்டைகள் வாங்கி, முட்டைப்பொரியலும் கோங்குராத் தொக்குமாக நாவூறச் சாப்பிட்டு, மாலையில் ஃப்ரெஷ்ஷாகக் கிளம்பி Bosporus Cruise பயணத்துக்குச் சென்றோம். போஸ்போரஸை அவ்வூரில் நதியென்றே சொல்கிறார்கள். சென்று பார்த்தபின்புதான் தெரிந்தது, கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதைப் போல அது அகலம் குறைந்த கடல் என்பது! அதில் பயணித்துத் திரும்பினால் நம் கனவுகளிலும் நீர் தளும்பும். `ஆறா இது... அதெப்படி இத்தனை ஆழம்' என்று நான் ஆரம்பத்தில் திகைத்துக்கொண்டே இருந்தேன். அம்மு தண்ணீரில் ஜெல்லி மீன்களைப் பார்த்ததாகச் சொன்னாள். படகின் விளிம்பில் நின்று எட்டிப் பார்த்துக்கொண்டே வந்தாள். வழிகாட்டியாக வந்திருந்த இளைஞனுடன் சீக்கிரமே நட்பாகி விட்டாள். இருவரும் ஏதோ கதை பேசிக் கொண்டேயிருந்தார்கள். இப்பயணத்தின் கதாநாயகி கீர்த்தினியோ இத்தனை வரலாற்றுச் சிறப்புமிக்க, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நீரிணையின் மேல் பயணித்துக்கொண்டிருக்கிறோமே என்ற பிரக்ஞை சிறிதுமின்றி அவள் பாட்டுக்கு உறங்குவதும் விழிப்பதும், விழித்திருக்கும் நேரங்களில் வேறெதையும் பார்க்க விடாமல் எங்களைச் சிரித்தே மயக்குவதுமாக இருந்தாள். போஸ்போரஸும் அவளைப் போலவே நிலவொளியிலும் விளக்குகளின் ஒளியிலும் ரம்மியமாகப் புன்னகைத்துக் கொண்டிருந்தது.

`சுமார் 20,000 ஆண்டுகளுக்கு முன்னால் – அதாவது, கி.மு 18,000-லிருந்து கி.மு 16,000-க்கு இடைப்பட்ட காலத்தில் உலகின் வடக்குப் பகுதி பனிக்கட்டிகளால் மூடியிருந்தது. மர்மரா கடலும் கருங்கடலும் அப்போது ஏரிகளாக இருந்தன. போஸ்போரஸ் ஒரு சமவெளியாக இருந்தது. கி.மு 14,000-ல் பனி உருக ஆரம்பித்து மர்மராவும் கறுப்பு ஏரியும் கடல்களாயின. கி.மு 7,500 வாக்கில் இந்த இரண்டு கடல்களையும் இணைக்கும் போஸ்போரஸ் ஜலசந்தி உருவானது' என்று ‘நிலவு தேயாத தேச'த்தில் சாரு நிவேதிதா எழுதியிருக்கிறார்.

தீரா உலா
தீரா உலா

இந்நீரிணையில் சிறு கப்பல்கள் போல வடிவமைக்கப்பட்ட படகுகளில் வண்ண விளக்குகள் பொருத்தி ஜெகஜோதியாகச் சுற்றிக் காட்டுகிறார்கள். நாங்கள் சென்ற முதல் Cruise Trip இது என்பதால் எங்களுக்கு நல்லதொரு புது அனுபவமாக இருந்தது. வழியில் இருமருங்கிலும் அபாரமாகக் கட்டப்பட்ட ஓட்டோமான்களின் அரண்மனைகள், கோட்டைகள், மாட மாளிகைகள், வீடுகள், தேவாலயங்கள், நீண்ட நெடிய போஸ்போரஸ் பாலம் ஆகியவற்றை ரசிக்கலாம். மேலதிகமாகப் பணம் கொடுத்தால் படகுக்குள்ளேயே இரவு உணவையும் முடித்துக்கொள்ளவும் ஏற்பாடு செய்து தருகிறார்கள். இரவு கவியக் கவிய சட்டையுரிக்கும் நாகம் போல காலையில் பார்த்த இஸ்தான்புல், முற்றிலும் புதியதோர் நகரமாக மாற்றுருக்கொண்டு பளபளக்கிறது. மொத்த நகரத்தையும் ஒரு படகெனக் கொண்டால் காற்று வீசும் திசையில் கம்பீரமாகப் புடைத்தெழுந்து நிற்கும் பாய்மரம் போல காட்சி தருகிறது ஹாகா சோஃபியா!

அதென்ன ஹாகா சோஃபியா என்கிறீர்களா? பொறுங்கள் சொல்கிறேன்!