Published:Updated:

``நேசமணியா...நோ கமென்ட்ஸ்!" - டிரெண்டிங் குறித்து ஹெச்.ராஜா

``நேசமணியா...நோ கமென்ட்ஸ்!" - டிரெண்டிங் குறித்து ஹெச்.ராஜா
``நேசமணியா...நோ கமென்ட்ஸ்!" - டிரெண்டிங் குறித்து ஹெச்.ராஜா

நேசமணி டிரெண்டிங் தொடர்பாக ஹெச்.ராஜா கருத்துத் தெரிவித்துள்ளார்.

``நேசமணியா...நோ கமென்ட்ஸ்!" - டிரெண்டிங் குறித்து ஹெச்.ராஜா

அது புதிய படம் இல்லை. அந்தப் படத்தில் நடித்தவர்கள் யாரும் இது தொடர்பாக சமூக வலைதளங்களில் எந்தப் பதிவையும் போடவில்லை. 2001-ம் ஆண்டு வெளியான ப்ரண்ட்ஸ் படத்தின் நேசமணி கதாபாத்திரம், தற்போது பட்டி தொட்டியெங்கும் வைரலாகி வருகிறது. நேசமணி தொடர்பான ஹேஷ்டேக் உலக அளவில் டாப் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. மோடி அரசாங்கம் இரண்டாவது முறையாக ஆட்சியமைக்க உள்ள நிலையில், #ModiSarkar2 என்ற ஹேஷ்டேக்கை பி.ஜே.பி-யைச் சேர்ந்தவர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர். 

ஆனால், பி.ஜே.பி-யினரின் ஹேஷ்டேகை முறியடித்து, நேசமணி தொடர்பான ஹேஷ்டேக்குகள் டாப் கியரில் டிரெண்டாகிக் கொண்டிருக்கின்றன. பி.ஜே.பி-யில் மோடி தொடங்கி பல தலைவர்கள், தங்களது பெயர்களுக்கு முன்பு `சௌக்கிதார்' என்பதை இணைத்திருந்தனர். அதைக் கலாய்க்கும் விதமாக, பல நெட்டிசன்கள் தங்களது பெயருக்கு முன்பு `கான்ட்ரக்டர்' என்று இணைத்துள்ளனர். நேசமணி டிரெண்டிங்கால், மோடி சர்க்கார் டிரெண்டிங்குக்குப் பின்னடைவு ஏற்பட்டதில், பி.ஜே.பி நிர்வாகிகள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். இதுதொடர்பான மீம்ஸ்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

``நேசமணியா...நோ கமென்ட்ஸ்!" - டிரெண்டிங் குறித்து ஹெச்.ராஜா

இதையடுத்து, நேசமணி டிரெண்டிங் தொடர்பாக பி.ஜே.பி தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவிடம் பேசினோம். யார் அந்த நேசமணி என்று நம்மிடம் விவரங்களை கேட்டுக்கொண்ட ஹெச்.ராஜா, இந்த நேசமணிப் பற்றி நீங்கள் சொல்லிதான் எனக்குத் தெரிகிறது. இதுபற்றி நான் கருத்துச் சொல்ல முடியாது என்று இணைப்பைத் துண்டித்துவிட்டார்.

Vikatan