Published:Updated:

`தமிழகத்தைத் தொடர்ந்து ஜார்க்கண்ட்டிலும் #GoBackModi'... டிரெண்ட் ரிப்போர்ட் சொல்வது என்ன?

அடுத்த மாதம் பொதுத்தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில் இன்று ஜார்க்கண்ட்டில் நடக்கும் பேரணிக்கூட்டங்களில் பேசிவருகிறார் மோடி.

 ஜார்கண்ட்டிலும் #GoBackModi
ஜார்கண்ட்டிலும் #GoBackModi

இப்போதெல்லாம் மோடி தமிழ்நாட்டுக்கு வந்தால் என்ன நடக்கிறதோ இல்லையோ சமூக வலைதளங்களில் #GoBackModi டிரெண்டாகி விடுகிறது. உலக அளவிலா, இந்தியா அளவிலா என்பது மட்டும்தான் கேள்வி. மதுரையில் அமையவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்பதற்காகப் பிரதமர் மோடி தமிழகம் வந்திருந்தபோது உலகளவில் டிரெண்டானது இந்த #GoBackModi ஹேஷ்டேக். இந்த டிரெண்டை தமிழகம் தொடங்கி வைக்கக் கேரளா, மகாராஷ்ட்ரா என மற்ற மாநிலங்களும் பின்தொடர்ந்தன. இந்த மாநிலங்களுடன் இப்போது ஜார்க்கண்ட்டும் இணைந்துள்ளது.

மோடி
மோடி

இன்று சமூக வலைதளங்களில் மகாராஷ்ட்ரா அரசியல் முக்கிய பேசுபொருளாக இருந்தாலும் இந்திய அளவில் #GoBackModi ஹேஷ்டேக்கும் டிரெண்டாகி வருகிறது. அடுத்த மாதம் பொதுத்தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில் இன்று ஜார்க்கண்ட்டில் நடக்கும் இரண்டு பேரணிக்கூட்டங்களில் பேசிவருகிறார் மோடி.

இந்த #GoBackModi ஹேஷ்டேக்கின் டிரெண்ட் நிலவரம் என்னவென்று விரிவாகப் பார்ப்போம்.

டிரெண்ட் நிலவரம்
டிரெண்ட் நிலவரம்

இந்த ஹேஷ்டேக் தொடர்புடைய 50,000-க்கும் அதிகமான பதிவுகள் மொத்தம் சுமார் 6 கோடி மக்களைச் சென்று சேர்ந்திருக்கிறது. இந்தப் பதிவுகள் அதிகமாக ஆங்கிலத்தில் பதிவாகியிருக்கின்றன. அதற்கு அடுத்தபடியாக இந்தியில் பதிவாகியிருக்கின்றன. 25 - 34 வயதுக்குள் இருக்கும் இளைஞர்களே இந்த ஹேஷ்டேக்குடன் அதிகம் பதிவிட்டிருக்கின்றனர். இந்த #GoBackModi பதிவிட்டதால் 80% பேர் ஆண்கள்.

எந்த மொழிகளில் பதிவானது #GoBackModi
எந்த மொழிகளில் பதிவானது #GoBackModi
Talkwalkers
அதிகம் டிரெண்ட் செய்த மாநிலங்கள்
அதிகம் டிரெண்ட் செய்த மாநிலங்கள்
Talkwalkers
#GoBackModi டிரெண்ட் ரிப்போர்ட்!
#GoBackModi டிரெண்ட் ரிப்போர்ட்!
Talkwalkers

இந்தப் பதிவுகள் எங்கிருந்து பதிவாகியிருக்கின்றன என்பதை ஆராய்ந்தால் சுவாரஸ்யமான தகவல்கள் கிடைக்கின்றன. ஜார்க்கண்ட்டுக்கு இணையாக மற்ற மாநிலங்களும் #GoBackModi ஹேஷ்டேக்குடன் அதிகம் பதிவிட்டிருக்கின்றனர். ராஜஸ்தான், மகாராஷ்ட்ரா, மத்திய பிரதேசம் எனப் பல்வேறு மாநிலங்களிலிருந்து #GoBackModi பதிவுகள் பதிவாகியிருக்கின்றன. முக்கியமாகத் தமிழ்நாட்டிலும் இந்தப் பதிவுகள் பாதிவாகியிருக்கின்றன. இதன் விளைவாக சென்னை டிரெண்டிலும் இடம்பிடித்தது #GoBackModi.

பின்தங்கிய welcome... முந்திய GoBack... மீண்டும் மோடியைச் சோதித்த ட்விட்டரியன்ஸ்!

தமிழ்நாடுபோல அல்லாமல் ஜார்க்கண்ட்டில் தற்போது பா.ஜ.க ஆட்சிதான் அமைந்திருக்கிறது. தற்போது ரகுபர் தாஸ் அந்த மாநிலத்தின் முதல்வராக இருக்கிறார். அப்படியும் டிரெண்டாகியிருக்கிறது #GoBackModi

*இந்த தகவல்கள் அனைத்தும் Talkwalkers என்னும் சோசியல் மீடியா அனலிடிக்ஸ் ஆப் மூலம் எடுக்கப்பட்டது.