Published:Updated:

``நான் அந்த வீரரைச் சந்திக்கணும்" ஆனந்த் மஹிந்திரா பார்க்க விரும்பிய ஓட்டுநர்!

ஆனந்த் மஹிந்திரா பார்க்க விரும்பிய ஓட்டுநர்

``இந்த நாட்களில் நான் பார்த்த கூலான விஷயம் இதுதான். நான் இந்த வீரரை சந்திக்க விரும்புகிறேன்" என ஆனந்த் மஹிந்திரா பதவிட்டிருந்தார்.

``நான் அந்த வீரரைச் சந்திக்கணும்" ஆனந்த் மஹிந்திரா பார்க்க விரும்பிய ஓட்டுநர்!

``இந்த நாட்களில் நான் பார்த்த கூலான விஷயம் இதுதான். நான் இந்த வீரரை சந்திக்க விரும்புகிறேன்" என ஆனந்த் மஹிந்திரா பதவிட்டிருந்தார்.

Published:Updated:
ஆனந்த் மஹிந்திரா பார்க்க விரும்பிய ஓட்டுநர்

ஆனந்த் மஹிந்திரா இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனத்தின் தலைவர். சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருப்பவர்களில் ஒருவர். நல்லதைப் பாராட்டவும், பகிரவும் இவர் தயங்கியதே இல்லை. சமீபத்தில் `நான் இந்த மனிதரைச் சந்திக்கணும்' என்கிற கேப்ஷனோடு வீடியோ ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதில் F1 கார் போல தோற்றமளிக்கும் வாகனமொன்றில் பால் கன்டெயினர்களை வைத்து ஓட்டி செல்லும் ஓட்டுநரின் காட்சி இடம்பெற்றுள்ளது. அந்த வீடியோ Roads Of Mumbai என்கிற பக்கத்தில் பகிரப்பட்டு இருந்தது. அந்த வீடியோவின் கேப்சனில், "நீங்கள் F1 டிரைவராக விரும்புகிறீர்கள். ஆனால் குடும்பத்தொழிலில் உதவி செய்ய வலியுறுத்திக்கிறார்கள்" என வேடிக்கையாக பதிவு செய்யப்பட்டிருந்தது.

அந்த ட்வீட்டை பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா "இவரின் வாகனம் சாலை விதிமுறைகளை பின்பற்றி உருவாக்கப்பட்டதா என்பது தெரியாது. ஆனால் இவரின் ஆர்வம் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டது. இந்த நாட்களில் நான் பார்த்த கூலான விஷயம் இதுதான். நான் இந்த வீரரைச் சந்திக்க விரும்புகிறேன்" என பதிவிட்டு இருந்தார். இதனை வரவேற்கும் விதமாக நெட்டிசன்கள் கமென்ட் பதிவு செய்து வருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism