Published:Updated:

`அம்மாவுக்கு ஏதாவது ஒண்ணுன்னா சும்மா இருக்க மாட்டேன்!' -வைரலாகும் சீனா சிறுவன்! #ViralVideo

கடந்த வாரம் சீனாவின் சாலையோர சிசிடிவி கேமராவில் பதிவான விபத்துக் காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வைரல் சிறுவன்
வைரல் சிறுவன்

எங்கோ ஓடிக்கொண்டே இருக்கும் இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் சாலையில் பலரும் கவனம் இழந்துவிடுகிறார்கள் என்பதுதான் நிதர்சனம். கடந்த 2015-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின்படி மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடான சீனாவில் அந்த ஓராண்டிலேயே 1.7 கோடி சாலை விபத்துகள் பதிவாகியிருந்தன. இவற்றில் பெரும்பாலானவை வாகனங்கள் அதிவேகமாகச் செல்வதால் ஏற்பட்டவை. இந்தநிலையில், கடந்த வாரம் சீனாவில் சாலையோர சிசிடிவி கேமராவில் பதிவான விபத்துக் காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

'மில்லியன் டு பில்லியன்... இந்தியா-சீனா வியாபாரங்களின் ஆச்சர்யங்கள்! - சோம வள்ளியப்பன்

இந்த வீடியோவில் சீனாவின் சான்க்விங்க் என்ற இடத்தில், பெண் ஒருவர் தன் மகனுடன் ஸீப்ரா க்ராஸிங்கில் (Zebra Crossing) நின்று கொண்டு சாலையைக் கடக்க முற்படுகிறார். அப்போது அதிவேகமாக அங்கு வரும் எஸ்யூவி கார் ஒன்று இவர்கள் வருவதையே பார்க்காமல் அவர்களை இடித்துவிடுகிறது. இதில் அந்தச் சிறுவனின் தாய் நிலைதடுமாறி கீழே விழுந்துவிடுகிறார்.

`கைகள் இல்லாமல் விமானம் ஓட்டும் பெண்'- வைரல் வீடியோ பின்னணி இதுதான்!

தன் அம்மாவுக்கு இப்படி ஆனதைக் கண்ட சிறுவன், இடித்துத் தள்ளிய காரை நோக்கி கோபத்துடன் சென்று அதை எட்டி உதைக்கிறான். கார் ஓட்டியவரைத் திட்டுகிறான், தன் அம்மா அடிபட்டுக் கீழே விழுந்திருப்பதைக் காட்டுகிறான். இதைப் பார்த்த அந்த கார் ஓட்டுநர் சிறுவனின் அம்மாவைத் தனது காரிலேயே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இருவருக்குமே பெரிதான காயங்கள் எதுவும் இல்லை.

சீனாவின் காவல்துறை இந்த விபத்து பற்றிக் கூறுகையில் ``இந்த விபத்துக்கு முழுக் காரணம் காரை ஓட்டிய நபர்தான். அவர் கார் ஓட்டுவதில் கவனக்குறைவாக இருந்ததால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது" என்று கூறியுள்ளனர்.

தாய்க்கு ஏதாவது ஒன்று என்றால், எதையும் யோசிக்காமல் கோபத்துடன் நியாயம் கேட்கும் இந்தப் பாசமிகு சிறுவன் நெட்டிசன்களின் மனங்களையும் கவர்ந்துள்ளான்.