Published:Updated:

`டிஸ்னிலேண்டு வேணாம்!' -மகனுக்குச் சேர்ந்த ரூ.3.5 கோடியைத் தொண்டுக்குக் கொடுத்த தாய்

வைரலாகும் சிறுவனின் புகைப்படம்!
வைரலாகும் சிறுவனின் புகைப்படம்!

பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியன் பிராட் வில்லியம்ஸ் (Brad Williams), மனமுடைந்த இந்தச் சிறுவனை டிஸ்னிலேண்டுக்கு அனுப்ப நிதி திரட்டினார். இந்திய மதிப்பில் சுமார் 3.5 கோடி ரூபாய் இதில் சேர்ந்தது.

குவாடன் பெய்லஸ்
சமூக வலைதளங்களில் வைரலான இந்தச் சிறுவனைப் பற்றி இந்நேரம் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
`அழுகை டு புன்னகை!'-  ரக்பி மைதானத்தில் வீர நடைபோட்ட வைரல் சிறுவன்
குவாடன் பெய்லஸ்
குவாடன் பெய்லஸ்

Achondroplasia நோய் பாதிப்புடையதால் உயரம் குறைவாக இருக்கும் 8 வயதுச் சிறுவன் இவன். இதனால்தான் இவன் படிக்கும் பள்ளியின் சக மாணவர்கள் இவனைத் தொடர்ந்து கிண்டலும் கேலியும் செய்துவந்திருக்கின்றனர். இதனால் பலமுறை மனமுடைந்த அவனை அரவணைத்து வளர்த்துவந்தார் அவனது தாய்.

ஆனால், ஒருநாள் இந்த கேலி கிண்டலால் மிகவும் மனமுடைந்து தாயிடம் தன்னைக் கொன்றுவிடுமாறு கதறியிருக்கிறான். பொறுத்துக்கொள்ள முடியாத தாய், கேலி மற்றும் கிண்டலுக்கு எதிரான கடும் விமர்சனத்துடன் இதை வீடியோவாக எடுத்து வெளியிட, சமூக வலைதளங்களில் உலகமெங்கும் இருக்கும் மக்கள் பலரையும் சென்றுசேர்ந்தது அவனின் குரல்.

பலரும் இந்தச் சிறுவனுக்கு ஆதரவு குரல் கொடுத்தனர். ஆஸ்திரேலியாவில் ரக்பி வீரர்கள் தங்களுடன் மைதானத்திற்கு குவாடனை அழைத்துவந்து கௌரவித்தனர். கடந்த வாரம் உலகமெங்கும் அதிகம் பகிரப்பட்ட படம் இதுவாகத்தான் இருக்கும்.

குவாடன் தன் தாயுடன்
குவாடன் தன் தாயுடன்

பிரபலங்கள் பலரும் குவாடனுக்குக் குரல் கொடுத்திருந்த நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியன் பிராட் வில்லியம்ஸ் (Brad Williams ) மனமுடைந்த இந்தச் சிறுவனை டிஸ்னிலேண்டுக்கு அனுப்ப நிதி திரட்டினார். இந்திய மதிப்பில் சுமார் 3.5 கோடி ரூபாய் இதில் சேர்ந்தது. தற்போது குவாடனின் தாய் யர்ராகா பெய்லஸ் இந்தப் பணத்தைத் தொண்டு நிறுவனங்களுக்குக் கொடுக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார்..

அவர் பேசுகையில், ``எந்தச் சிறுவனுக்குத்தான் டிஸ்னிலேண்டு போக ஆசை இருக்காது. அதுவும் குவாடன் போன்ற சிறுவனுக்கு, அது சொர்க்கம். தினம் தினம் அனுபவிக்கும் வேதனைகளிலிருந்து தப்பித்துச் செல்ல ஒரு வழி. ஆனால், என் சகோதரி ஒன்று சொன்னார் 'உண்மையான பிரச்னைக்கு வருவோம். தற்போது இந்தச் சிறுவன் கேலி கிண்டலுக்கு ஆளாகியிருக்கிறான், அதற்கு இந்த ஆதரவு கிடைத்திருக்கிறது. ஆனால் யோசித்துப் பார், நம் சமூகத்தில் இது போன்ற கேலி கிண்டல்களால் (Bullying) எத்தனை தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன' என்றார். அதனால் இந்தப் பணம் சமூகத் தொண்டு செய்யும் நிறுவனங்களுக்குச் சென்றுசேர வேண்டும் என முடிவுசெய்துள்ளோம். அவர்களுக்கு இந்தப் பணம் உதவிகரமாக இருக்கும். எங்களுக்கு டிஸ்னிலேண்டு செல்ல எவ்வளவு ஆசை இருக்கிறதோ அதே அளவு சமூகம் மாறவேண்டும் என்பதிலும் ஆசை இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு