Published:Updated:

ஸ்கூட்டர் விலை ரூ.71,000; பேன்சி எண் ரூ.15.44 லட்சம் செலவழித்த இளைஞர் சொல்வதென்ன?

activa (மாதிரி படம்)

சண்டிகர்; பிரிஜ் மோகன் (Brij Mohan) என்பவர் தனது ஆக்டிவா (Activa) ஸ்கூட்டர்க்காக ரூ.15.44 லட்சம் செலவழித்து பேன்சி எண் வாங்கியுள்ளார்.

ஸ்கூட்டர் விலை ரூ.71,000; பேன்சி எண் ரூ.15.44 லட்சம் செலவழித்த இளைஞர் சொல்வதென்ன?

சண்டிகர்; பிரிஜ் மோகன் (Brij Mohan) என்பவர் தனது ஆக்டிவா (Activa) ஸ்கூட்டர்க்காக ரூ.15.44 லட்சம் செலவழித்து பேன்சி எண் வாங்கியுள்ளார்.

Published:Updated:
activa (மாதிரி படம்)

சைக்கிள் விலைய விட பெல் விலை அதிகமாக இருக்கிறது என்று கூறுவார்கள் அதுபோல் ஹரியானா மாநிலத்தில் சண்டிகர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரிஜ் மோகன் (Brij Mohan) என்பவர் தனது ஆக்டிவா (Activa) ஸ்கூட்டர்க்காக ரூ.15.44 லட்சம் செலவழித்து தனக்குப் பிடித்தமான பேன்சி எண்ணை வாங்கியுள்ளார். பொதுவாக ஆடம்பரமான கார்களுக்கும் விலையுயர்ந்த கார்களுக்கும் இவ்வாறு பேன்சி எண் வாங்குவது வழக்கம். ஆனால் இவர் சுமார் ரூ.71,000 மதிப்புள்ள தனது ஸ்கூட்டர்க்கு ரூ.15.44 லட்சம் கொடுத்து பேன்சி எண் வாங்கியது அங்கிருந்தவர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

Representative image
Representative image

இது பற்றிக் கூறிய பிரிஜ் மோகன், "இந்த பேன்சி எண் தனக்குப் பிடித்த எண் என்றும் இதை தனது ஆக்டிவா (Activa) ஸ்கூட்டர்க்காக வாங்கினேன் என்றும் கூறினார். சண்டிகர் பதிவு மற்றும் உரிமம் வழங்கும் ஆணையம் நடத்திய ஏலத்தில் அதிகபட்சமாக ரூ.1.5 கோடி வரை செலவழித்து இது போன்ற 'CH01- CJ-' சீரிஸ் வகை எண்களை வாங்கியுள்ளனர். இது பெரும்பாலும் விலையுயர்ந்த சொகுசுக் கார்களான ஹம்மர்(hammer) , டாப் மாடல் எஸ் கிளாஸ் பென்ஸ்(S-class Mercedes Benz) போன்ற கார்களுத்தான் வாங்கினார்கள். ஆனால் அங்கு ஆக்டிவா (Activa) ஸ்கூட்டர்க்கு ரூ.15.44 லட்சம் கொடுத்து பேன்சி எண் வாங்கியவர் இவர்தான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism