Published:Updated:

பின்தங்கிய welcome... முந்திய GoBack... மீண்டும் மோடியைச் சோதித்த ட்விட்டரியன்ஸ்!

இன்று #GoBackModi மீண்டும் இந்தியா அளவில் நம்பர் 1 டிரெண்டிங்கில் இருக்கிறது.

 #GoBackModi
#GoBackModi

இப்போதெல்லாம் மோடி தமிழ்நாட்டுக்கு வந்தால் ஒரு விஷயம் உறுதியாக நடக்கும் என்று சொல்லலாம். அது என்னவென்று யோசிக்கிறீர்களா? #GoBackModi என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆவதுதான். மதுரையில் அமையவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்பதற்காகப் பிரதமர் மோடி தமிழகம் வரும்போது உலகளவில் டிரெண்ட் ஆன இந்த #GoBackModi மீண்டும் இன்று இந்தியா அளவில் நம்பர் 1 டிரெண்டிங்கில் இருக்கிறது.

Twitter Trending #GoBackModi
Twitter Trending #GoBackModi

இன்று ஐஐடி மெட்ராஸ் கல்லூரி விழாவில் கலந்துகொண்டு பேசவிருக்கிறார் நரேந்திர மோடி. இதையொட்டி காலை 10 மணியளவிலிருந்து இந்தியா டிரெண்ட்ஸில் முதலிடத்தில் இருப்பது #GoBackModi ஹேஷ்டேக்தான். இதற்குப் போட்டியாக #TNWelcomesModi என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்துவருகின்றனர் பாஜக ஆதரவாளர்கள். முதல் 10 இடங்களுக்குள் வந்தாலும் இந்த போட்டியில் #TNWelcomesModi பின்தங்கியே நிற்கிறது.

சென்னையில் பேசிய மோடி "நான் அமெரிக்கா சென்றிருந்த போதும். நான் தமிழில் சில வார்த்தைகள் பேசிய போது தமிழ் மிகவும் தொன்மையான மொழி என்று பெருமிதத்துடனே கூறினேன்" என்றார். இப்படிப் பேசியும் தமிழக நெட்டிசன்கள் தணிவதாக இல்லை. தொடர்ந்து தங்கள் எதிர்ப்பை சமூக வலைத்தளங்களில் பதிவுசெய்துவருகின்றனர்.

இப்படி டிரெண்ட் செய்வது இப்போது வழக்கமான ஒன்றாகவும் ஆகிவிட்டது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஆந்திராவிலும் மோடியின் வருகையின்போது இது பயன்படுத்தப்பட்டது. 'Howdy Modi' நிகழ்விற்காக அமெரிக்கா சென்றபோதும் இதே #GoBackModi ஹேஷ்டேக்தான். அமித் ஷா தமிழகம் வந்த போது #GoBackAmitShah டிரெண்ட்டானது.

Vikatan