Published:Updated:

`தீப்பிழம்பாய் காட்சிதரும் நீர்வீழ்ச்சி!'- இது கலிஃபோர்னியா பிரமிப்பு #Video

நீர்வீழ்ச்சி
நீர்வீழ்ச்சி

கலிஃபோர்னியாவில் உள்ள பூங்காவில் இருக்கும் நீர்வீழ்ச்சியின் வீடியோ, இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

இயற்கையின் படைப்புகள் நம்மை எப்போதும் பிரமிக்க வைப்பவை. ஆர்ப்பரிக்கும் சத்தத்துடன் கொட்டும் நீர்வீழ்ச்சிகள் எப்போதும் கொள்ளை அழகுதான். கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள Yosemite National Park-ல் இருக்கும் நீர்வீழ்ச்சி, இப்போது இணையத்தில் வட்டமடிக்கத்தொடங்கியுள்ளது. டோமெனிகோ (Domenico Calia) என்பவர், தன்னுடைய ட்விட்டர் பக்கதில் ’தீ வீழ்ச்சி’ என்ற கேப்ஷனுடன் இந்த வீடியோவைப் பதிவிட்டுள்ளார். இதை முதலில் பார்ப்பவர்களுக்கு, எரிமலை வெடித்து அதிலிருந்து தீப்பிழம்புகள் வீழ்வதுபோலத்தான் தெரியும். ஏதோ ஒரு ஃபேன்டஸி திரைப்படக் காட்சிகள் போல் இருக்கும். ஆனால், அந்த வீடியோவை நன்கு கவனித்தால் கொட்டும் நீர்வீழ்ச்சியின் கொள்ளை அழகு இயற்கையின் மாயாஜாலத்தால் தீப்பிழம்புகள் போல தெரிவது புரியும்.

சூரியன் அந்திசாயும் நேரத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. சூரியனின் செங்கதிர்கள் கொட்டும் நீர்வீழ்ச்சியின்மீது படர்கிறது. இதன்காரணத்தால் நீர்வீழ்ச்சி நிறம் மாறுகிறது. ஜனவரி 19-ம் தேதி இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு 4 லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ் குவிந்திருக்கின்றன. இந்த நீர்வீழ்ச்சி வீடியோ, தற்போது இணையவாசிகளின் கமென்ட் மழையில் நனைகிறது. கலிஃபோர்னியாவின் Yosemite National Park-க்கு வரும் சுற்றுலாவாசிகளை இந்த நீர்வீழ்ச்சி கவர்ந்திழுக்கிறது. ஒவ்வொரு வருடமும் ஒரு குறுகிய காலம் மட்டுமே இப்படி நிகழ்வதாகவும், ஒரு குறிப்பிட்ட கோணத்திலிருந்து பார்க்கும் போது மட்டுமே இப்படித் தெரியும் என்றும் பூங்கா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

பின் செல்ல