Published:Updated:

`இன்விசிபிள் சேலஞ்ச்!' - வைரலாகும் செல்லப்பிராணிகளின் வீடியோ!

மனிதர்களுக்கான கிகி சேலஞ்ச், பாட்டில் கேப் சேலஞ்ச் போல, செல்லப்பிராணிகளுக்கான இன்விசிபிள் சேலஞ்ச் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகிக்கொண்டிருக்கிறது.

செல்லப்பிராணிகள்
செல்லப்பிராணிகள்

செல்லப் பிராணிகளில் நம்முடைய ஆல்டைம் ஃபேவரைட் நாய்களும், பூனைகளும்தான். அவற்றின் சுட்டித் தனங்களை ரசிக்காதவர்கள் இருக்க முடியாது. அண்மையில் ட்விட்டர், ஃபேஸ்புக் பக்கங்களை செல்லப்பிராணிகளின் வீடியோக்கள் ஆக்கிரமித்திருக்கின்றன. என்னவென்று பார்த்தால், மனிதர்களுக்கான கிகி சேலஞ்ச், பாட்டில் கேப் சேலஞ்ச் போல, செல்லப்பிராணிகளுக்கான இன்விசிபிள் சேலஞ்ச் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகிக்கொண்டிருக்கிறது.

கண்ணாடிக் காகிதத்தாள்களை (transparent cellophane sheets) கொண்டு, நடைபாதையை அடைத்துவிடுகிறார்கள். அந்தத் தடையைப் பொருட்படுத்தாமல், செல்லப்பிராணிகள் தாண்டிக் குதிக்க வேண்டும். இதுதான் இன்விசிபுள் சேலஞ்ச். சமூக வலைதளங்களில் வைரலாகிக்கொண்டிருக்கும் வீடியோக்களில், கண்ணாடி காகிதத் தாள்களை சில செல்லப்பிராணிகள் கையாளும் விதம், வாவ் சொல்லி ரசிக்கும் விதமாக இருக்கிறது. இந்த சேலஞ்சில் பங்கெடுத்துக்கொள்ளும் செல்லப்பிராணிகளை, பதிவுகளின் மூலம் நெட்டிசன்கள் உற்சாகப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.