Published:Updated:

`புற்றில் பால் ஊற்றினால் பாம்பின் இனப்பெருக்கம் தடைபடும்' சீமான் சொல்வது உண்மையா?

பாம்பு, சீமான்

யானை, புலி என்று விலங்குகளைக் கொல்வது போன்று நடுகற்களை உருவாக்கிய முன்னோர்கள், எங்கும் பாம்புகளைக் கொல்வது போன்று நடுகற்களை உருவாக்கவில்லை. ஏனென்றால் பாம்பை தெய்வமாக நினைத்து அதைக் கல்லில் வரைந்து வணங்கி வந்தான்.

`புற்றில் பால் ஊற்றினால் பாம்பின் இனப்பெருக்கம் தடைபடும்' சீமான் சொல்வது உண்மையா?

யானை, புலி என்று விலங்குகளைக் கொல்வது போன்று நடுகற்களை உருவாக்கிய முன்னோர்கள், எங்கும் பாம்புகளைக் கொல்வது போன்று நடுகற்களை உருவாக்கவில்லை. ஏனென்றால் பாம்பை தெய்வமாக நினைத்து அதைக் கல்லில் வரைந்து வணங்கி வந்தான்.

Published:Updated:
பாம்பு, சீமான்

சில தினங்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியிருந்த வீடியோ வைரலானது. அந்த வீடியோவில், ``அந்தக் காலத்தில் மக்கள் பாம்புகளுக்கு பயந்தார்கள். அதனால், புற்றில் பால் ஊற்றி வணங்கும் வழக்கம் தொடங்கியது. புற்றில் பால் ஊற்றினால் அந்த வாடையில் ஆண் பாம்பும் பெண் பாம்பும் ஒன்று சேராது. இதனால் பாம்பின் இனபெருக்கம் குறையும். இதற்காகவே புற்றில் பால் ஊற்றும் வழக்கம் மக்களிடையே தொன்றுதொட்டு இருந்து வந்திருக்கிறது" என்று பேசியுள்ளார் சீமான்.

பொதுவாகவே சீமான் பேசும் பேச்சுகளை நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளுவது வழக்கம். இந்த முறை அதிகமாகவே கலாய்த்து வருகிறார்கள்.

வீட்டுக்குள் உள்ள புற்று
வீட்டுக்குள் உள்ள புற்று

இது உண்மையா என்று உயிரினங்கள் குறித்து நுட்பமாக ஆராய்ந்து வரும் சூழலியலாளர் கோவை சதாசிவத்திடம் பேசினோம். ``பாம்பு ஒரு குளிர் ரத்தப் பிராணி. மனிதர்களைப் போன்று வெப்ப ரத்தம் அதற்கு கிடையாது. அதனால், கதகதப்பான வெளிச் சூழ்நிலையை பாம்புகள் விரும்பும். அதனால்தான் இண்டு, இடுக்கு என்று சொல்கிற மரப்பொந்து, கல்பொந்து, புதர் பொந்துகளில் அது தங்கும். எக்காரணம் கொண்டும் அது கறையான் புற்றில் வசிக்காது. அது பாம்பின் வசிப்பிடமும் கிடையாது.

பாம்புகள் அவ்வப்போது உணவு தேடி வெளியே வரும். பாம்பின் விஷம்தான் அதன் உணவை செரிப்பதற்கான மருந்து. எலி, தவளை போன்ற உயிரினங்களைப் பிடித்து சாப்பிடும்போது அதன் எலும்பு, தோல்களை நொதிக்கச் செய்து சாப்பிடுவதற்கு பாம்பின் விஷம் உதவுகிறது. நம் வீட்டில் பார்க்கும் பல்லிக்கும் விஷம்தான் உணவை செரிக்க உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Snake
Snake
Photo: Pixabay

பாம்புகளுக்கு உணவு கிடைக்காதபோது கறையான் புற்றை நாடி வரும். ஏனென்றால் கறையான் புற்றின் அடியில் தாய் கறையான் இருக்கும். இது கிட்டத்தட்ட விரல் அளவுக்கு புழு போன்று இருக்கும். முழுக்கவும் புரதச்சத்து நிறைந்த இந்தக் கறையானை சாப்பிட புற்றுகளை நோக்கி வரும். இதை வைத்துதான் புற்றில் பாம்பை பார்த்திருக்கிறேன் என்று சிலர் சொல்வார்கள். எனவே, உணவுக்காகத்தான் புற்றை நாடி வருகின்றன பாம்புகள். மற்றபடி மக்கள் ஊற்றும் பாலைக் குடிப்பதற்காக அது வருவதில்லை" என்றவரிடம், பிறகு எப்படி கறையான் புற்றை வணங்கும் வழக்கம் மக்களிடையே வந்தது? என்று கேட்டோம்.

``வேட்டை சமூகமாக இருந்த மனித இனம், வேளாண் சமூகமாக மாறிய காலகட்டத்தில் பாம்புகளின் நடமாட்டம் மனிதனை மிகவும் அச்சுறுத்தியிருக்கிறது. இதனால் பாம்பை தெய்வமாக வழிபடத் தொடங்கினான். யானை, புலி என்று விலங்குகளைக் கொல்வது போன்று நடுகற்களை உருவாக்கிய முன்னோர்கள், எங்கும் பாம்புகளைக் கொல்வது போன்று நடுகற்களை உருவாக்கவில்லை. ஏனென்றால், பாம்பை தெய்வமாக நினைத்து அதைக் கல்லில் வரைந்து வணங்கி வந்தான். பாம்பைப் பற்றிய பல புராணக் கதைகளில் ஒன்று, மண்ணுக்கடியில் நாகலோகம் ஒன்று இருப்பதாக நம்பினான். அதனால்தான் மண்ணாலான புற்றை வணங்க தலைப்பட்டான். புற்றைச் சுற்றி மஞ்சள் தெளித்து வணங்கினான். இப்படித்தான் நம் சமூகத்தில் புற்றை வணங்கும் வழக்கம் வந்திருக்கிறது. மற்றபடி புற்றினுள் பாம்பு இருக்கிறது என்று நம்பி வணங்க முற்பட்டிருக்க மாட்டார்கள் என்று கருதுகிறேன்.

கோவை சதாசிவம்
கோவை சதாசிவம்

பாம்பைப் பற்றி அச்சுறுத்தும் கதைகள் உலகமெங்கும் உண்டு. அதைச் சார்ந்த மூடநம்பிக்கைகளும் இருந்து வருகின்றன. அதில் ஒன்று இந்தப் புற்றுக்கு பால் ஊற்றுதலும். பாம்பு பால் குடிக்காது. நீரையும் வெகு குறைவாகவே எடுத்துக்கொள்ளும். எனவே, புற்றில் பால் ஊற்றினால் பாம்பின் இனப்பெருக்கம் தடைபடும் என்பது முற்றிலும் தவறான தகவல்" என்றார்.