Published:Updated:

`ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்த #JusticeForChutki..' - சுட்கிக்கு என்னாச்சு?

JusticeForSutki
JusticeForSutki

`#JusticeForChutki...’னு சோட்டா பீம் ட்ரெண்டிங்குல வர்றப்போதான் தெரியுது.. எத்தன பசங்க இன்னும் கார்ட்டூன் பாத்துட்டு இருக்காங்கன்னு.

சோஷியல் மீடியாவுல எது எப்போ ட்ரெண்ட் ஆகும்னே தெரியாதுனு, நண்பன் தொடக்கமும் சொல்லாம முடிவும் சொல்லாம பேசிட்டுப் போக, ட்விட்டர தொறந்து பார்த்தா ஒரே ஆச்சர்யம். இது எல்லாமா ட்ரெண்ட் ஆகும்னு ஒரு கேள்வியோட ட்ரெண்டிங்குல இருந்த ஹேஷ்டேக்க ஒரு ரவுண்டப் பண்ணுனேன்.

கொரோனா வைரஸ் பரவியிருக்கிற காலத்துல, நாடே அதப் பத்தின பேச்சாவே இருக்கும்போது, #CoronaVirusIndia #BlackLivesMatter, #RemoveChinaApps-னு சோஷியல் மீடியாக்களிலும் தீவிரமான விவாதங்கள் நடந்துட்டு இருக்கு. இந்தச் சமயத்துல #JusticeForChutki ஹேஷ்டேக் இப்போ ட்ரெண்டிங்ல இருக்கு. சுட்கிக்கு அப்படி என்ன அநீதி இழைக்கப்பட்டிருச்சினு நம்ம நெட்டிசன்ஸ் கொந்தளிச்சு, ட்ரெண்ட் பண்ணுறாங்கன்னு பார்க்கலாம்.

`ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்த #JusticeForChutki..' - சுட்கிக்கு என்னாச்சு?

யார் இந்த சுட்கி ?

ராஜீவ் சிலாகா என்பவரால் இயக்கப்பட்டு, கடந்த 2008-ம் ஆண்டு முதல் போகோ தொலைக்காட்சியில ஒளிபரப்பானதுதான் சோட்டா பீம் கார்ட்டூன் தொடர். கதையோடமுன்னணி பெண் கேரக்டர்தான் நம்ம சுட்கி. லட்டு கடை வெச்சிருக்கிற டுன் டுன் ஆன்ட்டியோட 7 வயது பொண்ணு. கதையோட ஹீரோ டோலக்பூர்ல வசிக்கிற ஒன்பது வயதான பீம்.

ஒன்பது வயசுலையே அற்புதமான சக்திகள் இவருக்கிட்ட இருக்குறதால, டோலக்பூருக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகளை எல்லாம் பீம் முறியடிக்கிறாரு. இதனால, அந்த ஊர்ல இவருக்கு தனி மதிப்பு. ஒருநாள் சுட்கி வெளியில சுத்தித் திரிஞ்சிக்கிட்டு இருந்தப்போ, ஒரு காளை மாடு சுட்கிய தொறத்துது. அத பாத்துட்டு இருந்த ஹீரோ பீம், சுட்கிய ஓடிப்போய் காப்பாத்துறாரு. அப்போ இருந்துதான் சுட்கியும் பீமும் ஃப்ரெண்ட்ஸ் ஆகுறாங்க. அதுக்கு அப்பறம் ரெண்டு பேரும் சேர்ந்து டோலக்பூர்ல நடக்குற தீய செயல்கள தட்டிக் கேக்குறதோட, அவங்க ஊர தீய சக்திகள்கிட்ட இருந்து காப்பாத்த போராடுறாங்க.

சுட்கி, அவங்க அம்மா வெச்சிருக்கிற லட்டு கடையில இருந்து லட்டுகளைத் திருடி வந்து, தன்னோட நண்பர்களுக்குக் கொடுப்பாங்க. பீம் மேல இருக்குற அளவு கடந்த பாசத்தால பீமுக்கு எப்பவும் ஸ்பெஷல் லட்டுகள் உண்டு. பீம், டோலக்பூர யாராவது தாக்க வரும்போது, அவரோட சக்திய முழுசா பயன்படுத்திப் போராடுவாரு. முடியாத சூழல்ல, சுட்கிகிட்ட ஐடியா கேட்பாரு. அவங்களோட ஐடியாவும் வொர்க்அவுட் ஆகும். பீம் ஜெயிக்கனும்னா சுட்கி வெச்சிருக்கிற லட்டுகள பீம்க்கு கொடுத்தா போதும், ஜெயிக்குறது நம்ம பீம் தான். அவ்வளவு பவர் டுன் டுன் ஆன்ட்டியோட லட்டுக்குனா பாத்துக்கோங்க மக்களே.

ராஜகுமாரி இந்துமதிக்கும் பீமுக்கும் கல்யாணம்..?

டோலக்பூரோட அரசர் இந்திரவர்மரோட பொண்ணுதான் இந்துமதி. டோலக்பூரோட இளவரசியும் இந்துமதிதான். ஹீரோ பீமுக்கு தோழியும்கூட. சுட்கி அளவுக்கு பீமுக்கு நெருக்கமான தோழியா இந்துமதி இருந்தது இல்ல. டோலக்பூருக்கு ஏற்படுற ஆபத்துகள் எல்லாத்தையும் பீம் முறியடிக்கிறதால, பீம் மேல ராஜா இந்திரவர்மனுக்கு ஒரு மரியாதை. இப்படி இருக்கிற, பீமுக்கும் ராஜகுமாரி இந்துமதிக்கும் கல்யாணம் பண்ணி வெச்சிட்டாங்க. இவங்களுக்கு நடந்த கல்யாணம், ட்விட்டர்ல பெரும் போரையே ஏற்படுத்திருச்சினா பாத்துக்கோங்க. கூடவே சுத்தித்திரிஞ்ச சுட்கிக்கு பீம் துரோகம் பண்ணிட்டாரு. உண்மையான காதல பீம் புரிஞ்சிக்காம உதாசீனப்படுத்திட்டாருனு ஒரே போர்க்குரல்தான்.

`ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்த #JusticeForChutki..' - சுட்கிக்கு என்னாச்சு?

ட்விட்டர் ட்ரெண்டிங்கில் #JusticeForChutki...

ராஜகுமாரி இந்துமதிய பீம் கல்யாணம் பண்ணிக்கிட்டதால கொதிச்சுப்போன நம்ம சுட்கியோட ரசிகர்கள், சுட்கி இல்லனா பீமோட எல்லா சாதனையும் தோல்விலதான் முடிஞ்சிருக்கும்னு ஒரே காட்டமான விமர்சனத்த அள்ளித் தெளிச்சிட்டாங்க. சாதாரண குடிமகனான பீமுக்கும் ராஜகுமாரியா இருக்குற இந்துமதிக்கும் எப்படி கல்யாணம் நடக்கும்னு ஒரு கும்பல் அவங்க தரப்பு ஆதங்கத்தையும் கொட்டித் தீர்த்துட்டாங்க.

ஒரு சிலர், நடந்தது குழந்தைத் திருமணம்தானே. சட்டத்து முன்னால இது செல்லாதுனு வேற லெவல் கமென்ட்ஸ். அதெல்லாத்தையும்விட, ட்விட்டர் ட்ரெண்டிங்ல #JusticeForChutki இருக்குறதால, நம்ம மீம் கிரியேட்டர்ஸ் சுட்கிக்கு ஆதரவா அவங்களும் களம் இறங்க, நீதியை வேண்டி காத்துக் கொண்டிருக்கிறாள் சுட்கி.

போன வருஷம் ஒரே ஒருத்தரின் ட்வீட்டால, வேர்ல்ட் லெவல் ட்ரெண்டிங்ல #SaveNesamani இருந்தத நாம மறந்திருக்க மாட்டோம். கொரோனா ஊரடங்கால அழுத்தமான மனநிலை நம்மள குடிகொண்டிருக்க, இப்படி நாலு விஷயம் நடக்குறது பாசிட்டிவ் வைப்ரேஷன்தான். ஆனா, சோட்டா பீம் ட்ரெண்டிங்குல வர்றப்போதான் தெரியுது, எத்தன பசங்க இன்னும் கார்ட்டூன் பாத்துட்டு இருக்காங்கன்னு. நம்ம பங்குக்கு ஒரு #JusticeForChutki-னு ட்வீட் பண்ணுவோம்.

அடுத்த கட்டுரைக்கு