Published:Updated:

`ரெயின்போ கிக்.. ஃபிரி ஸ்டைல்.. பக்கா ஃபினிஷிங்!’- இணையத்தைக் கலக்கிய கேரள மாணவி ஹதியா

கேரளச் சிறுமி
கேரளச் சிறுமி

கால்பந்தில் கலக்கும் கேரளச் சிறுமியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கால்பந்து மைதானத்தில் புழுதி பறக்க ட்ரோன் கேமரா சுழன்று வந்து மாணவி முன்னால் நிற்கிறது. சல்வார் கமிஸ்.. தலையில் ஹிஜாப் அணிந்திருந்த அந்த மாணவி கால்களுக்கு மத்தியில் இருந்த கால்பந்தை ரெயின்போ கிக் (rainbow kick) செய்து முன்னங்கால்களுக்குக் கொண்டு வந்தபோது மைதானத்தில் இருந்த மாணவர்களும் ஆசிரியர்களும் கரவொலி எழுப்பி ஆரவாரம் செய்தனர். சிறுமியின் கால்கள் புட்பாலுடன் விளையாடியது. கால்பந்தை மிக நேர்த்தியாகக் கையாண்டார். முன்னங்கால்களில் இருந்த பந்தை லாகவமாக மெலெழுப்பி தன் முதுகில் லேண்ட் செய்து இறுதியில் பந்தை கோலாக்கி பக்காவாக ஃபினிஷிங் செய்தார்.

கேரளச் சிறுமி
கேரளச் சிறுமி

சுமார் ஒரு நிமிடம் ஓடக்கூடிய இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. ஏதோ வெளிநாட்டில் இந்தச் சம்பவம் நடந்ததாக நினைக்க வேண்டும். கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில்தான் இந்த வீடியோ படமாக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடுவில் உள்ள சென்னமங்களூர் மேல்நிலைப்பள்ளியில் ( Chennamangallur Higher Secondary School) படிக்கும் 17 வயது மாணவி ஹதியா ஹகீம் தான் ஃபீரி ஸ்டைலில் கலக்கினார். இந்த ஃபீரி ஸ்டைல் ட்ரிக்குகளை யூடிப்பில் கற்றுக்கொண்டாராம் ஹதியா.

`டிராவிட்டுக்கு ராகுல் ஓ.கேதான்.. ஆனால், அந்தத் தவற்றை செய்யாதீங்க!’- ஆகாஷ் சோப்ரா லாஜிக்

தோகாவில் இருக்கும்போது கால்பந்து விளையாடக் கற்றுக்கொண்டார். தோகாவிலிருந்து பெரிய கனவுகளோடு 2017-ம் ஆண்டு கேரளாவுக்குத் திரும்பியுள்ளார். புரொஃபஷனல் ஃபுட்பால் பிளேயர் ஆக வேண்டும் என்பதுதான் ஹதியாவின் விருப்பம். அவர் வசிக்கும் முக்கம் பகுதியில் பெண்களுக்காக கால்பந்து க்ளப் இல்லை. அவருக்குச் சரியான பயிற்சியாளரும் கிடைக்கவில்லை. இதன்காரணமாக கால்பந்து விளையாடுவதை நிறுத்திவிட்டார். ஹதியாவின் குடும்பத்தில் அவரது தந்தை மற்றும் சகோதரர்கள் கால்பந்து வீரர்களாவர்.

வீடியோவைக் காண இந்த லிங்கைக் கிளிக் செய்யவும்

ஹதியாவுக்குக் கால்பந்து மீதான காதல் குறித்து அவரது நண்பர்களுக்குத் தெரியும். அவர் படிக்கும் சென்னமங்களூர் பள்ளியில் கால்பந்து போட்டி நடைபெற்றது. அவரது நண்பர்கள் தான் பள்ளி முதல்வரைச் சந்தித்து `கால்பந்து மீதான ஆர்வம், மாணவர்கள் மத்தியில் அதை வெளிப்படுத்துவது குறித்து பேசுமாறு' ஹதியாவிடம் கூறியுள்ளனர். இதையடுத்து பள்ளி முதல்வரைச் சந்தித்துப் பேசி அனுமதி வாங்கியுள்ளார்.

இதுகுறித்து பேசிய ஹதியா, ``கேரளாவில் கால்பந்துவிளையாட்டுக்கு மவுஸ் அதிகம். ஆனால், இங்கு மைதானங்கள் ஆண்களால் நிரம்பியிருக்கிறது. பள்ளியில் கூட விளையாட்டு நேரங்களில், ஆண்கள் கால்பந்துகளுடன் மைதானங்களை ஆக்கிரமித்துக் கொள்கின்றனர். பெண்கள் கால்பந்து விளையாடுவதற்கு இங்கு வசதிகள் இல்லை" என ஆதங்கப்படுகிறார்.

பின் செல்ல