Published:Updated:

``அஜித் ஜீரோ ஆட்டிட்யூட் லெஜெண்ட்!"- நடுரோட்டில் பைக் பஞ்சர் ஆகி நின்றவருக்கு உதவி செய்த அஜித்!

Manju with Ajith

பெரிய ஸ்டார் என்பதால், தயங்கித் தயங்கிப் பேசிய மஞ்சுவை மிக காஷுவலாக டீல் செய்தாராம் அஜித். பிறகு, ‘‘சார், உங்களுடன் ஒரு டீ சாப்பிட்டால் பெரிய பாக்கியமாக இருக்கும்’’ என்று ஒரு டீக்கடையில் நிறுத்தச் சொல்லிக் கேட்டு, பல விஷயங்களைப் பற்றிப் பேசியபடி பிரிந்தார்களாம் இருவரும்.

``அஜித் ஜீரோ ஆட்டிட்யூட் லெஜெண்ட்!"- நடுரோட்டில் பைக் பஞ்சர் ஆகி நின்றவருக்கு உதவி செய்த அஜித்!

பெரிய ஸ்டார் என்பதால், தயங்கித் தயங்கிப் பேசிய மஞ்சுவை மிக காஷுவலாக டீல் செய்தாராம் அஜித். பிறகு, ‘‘சார், உங்களுடன் ஒரு டீ சாப்பிட்டால் பெரிய பாக்கியமாக இருக்கும்’’ என்று ஒரு டீக்கடையில் நிறுத்தச் சொல்லிக் கேட்டு, பல விஷயங்களைப் பற்றிப் பேசியபடி பிரிந்தார்களாம் இருவரும்.

Published:Updated:
Manju with Ajith

ஆளே இல்லாத சாலையில் ஒரு த்ரில்லிங் பயணம் போகும்போது, திடீரென உங்களுக்குப் பிரச்னை. வண்டி பிரேக்டவுன்; வாகனம் பஞ்சர்… கேட்பதற்குக்கூட ஆளில்லை. அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் உங்களுக்கு ஒருவர் வந்து உதவுகிறார் என்றால்… அவரை நீங்கள் வாழ்க்கை முழுக்கக் கொண்டாடுவீர்கள்தானே! அப்படி உதவி செய்பவர் ஒரு செலிபிரிட்டி என்றால்… கொண்டாட்டத்துக்கு / உற்சாகத்துக்கு அளவு இருக்காதுதானே!

அப்படி ஒரு உற்சாக மூடில்தான் எப்பவுமே இருக்கிறார் மஞ்சு காஷ்யப். இவர். வாண்டர்லஸ்ட்டான இவருக்கு டிராவல்தான் மிகவும் பிடிக்கும். அப்படி ஒரு ரோடு ட்ரிப்பில்தான் மஞ்சு போன பைக் ஒன்று நடு ரோட்டில் பஞ்சர் ஆகி நிற்கிறது. அது, இமாலயா போகும் வழியில் உள்ள ‘லடாக்’ பனிச்சாலை.

Manju with Ajith
Manju with Ajith

செல்போன் நெட்நொர்க் கிடையாது; பைக்கைத் தள்ளிட்டுப் போகவும் முடியாது. வேறு வழியில்லை; போகிற வருகிறவர்களிடம்தான் உதவி கேட்டாக வேண்டும். அந்த நேரத்தில் ஒரு பிஎம்டபிள்யூ R 1250 GSA பைக் வருவதைப் பார்த்த மஞ்சு காஷ்யப், உதவிக்காகக் கை நீட்டியிருக்கிறார். தடாலென சடர்ன் பிரேக் போட்டு அந்த பிஎம்டபிள்யூவில் இருந்து ஹெல்மெட் தலையோடு இறங்கிய நபரிடம், ‘ஏர் கம்ப்ரஸர் அல்லது இன்ஃப்ளேட்டர் இருந்தால் கொடுங்கள்; பஞ்சர் கடை வரை தள்ளிக்கிட்டே போயிருவேன்’ என்று கேட்கிறார் மஞ்சு காஷ்யப்.

‘‘அடடா, என்னிடம் கம்ப்ரஸர் இல்லை; ஆனால், என் நண்பரின் கார் பின்னால் வருகிறது. அதில் இருக்கிறது. கொஞ்சம் பொறுங்கள்‘ என்று சொல்லியிருக்கிறார் பிஎம்டபிள்யூ ஆசாமி.

அந்த நேரத்தில் மஞ்சு, அந்த ஹெல்மெட் நபரிடம் உரையாட… அப்போதுதான் ஹெல்மெட்டைக் கழற்றியிருக்கிறார் அவர். ‘‘ஹாய்… நான் அஜித்! பைக் ரைடர் அண்ட் ஆக்டர்! நைஸ் டு மீட் யூ’’ என்று சுயஅறிமுகம் செய்து கொண்ட போதுதான் ஷாக் ஆகியிருக்கிறார் மஞ்சு. ‘‘என்னால் நம்பவே முடியவில்லை. தமிழ்நாட்டின் மிகப் பெரிய சூப்பர் ஸ்டாரா எனக்கு உதவி செய்தது! இதை என் வாழ்நாளில் மறக்கவே மாட்டேன்!’’ என்று தனது இன்ஸ்டா பக்கத்தில் புளகாங்கிதம் அடைந்திருக்கிறார் மஞ்சு.

10 நிமிடங்கள் கழித்து கார் வந்தவுடன், பஞ்சர் கிட்டை எடுத்துப் பொருத்தி ஃப்ளாட் டயரை ஃபிக்ஸ் செய்யும் வரை கூடவே இருந்து உதவி புரிந்தாராம் அஜித். அதன் பிறகு இருவரும் நெருங்கிய நண்பர்களாகி, ஒன்றாகவே ரைடு போனதாகச் சொல்கிறார் மஞ்சு. பெரிய ஸ்டார் என்பதால், தயங்கித் தயங்கிப் பேசிய மஞ்சுவை மிக காஷுவலாக டீல் செய்தாராம் அஜித். பிறகு, ‘‘சார், உங்களுடன் ஒரு டீ சாப்பிட்டால் பெரிய பாக்கியமாக இருக்கும்’’ என்று ஒரு டீக்கடையில் நிறுத்தச் சொல்லிக் கேட்டு, தங்களின் பயணத் திட்டங்கள், பைக் பற்றிய பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பற்றிப் பேசியபடி பிரிந்தார்களாம் இருவரும்.

Manju with Ajith
Manju with Ajith

‘‘பெரிய சூப்பர் ஸ்டார் என்கிற எந்த பந்தாவுமே இல்லாமல் எளிமையாகப் பழகுகிறார் தல அஜித்! ஜீரோ அட்டிட்யூட் கொண்ட லெஜெண்ட். சக மனிதர்களையும் ரசிகர்களையும் ஒரே மாதிரி நடத்தும் அன்புள்ளம் கொண்டவர். இந்த நாளை மறக்கவே முடியாது வாழ்நாளில்!’’ என்று தனது சோஷியல் மீடியாப் பக்கங்களில் எழுதி லைக்குகளை அள்ளி வருகிறார் மஞ்சு காஷ்யப்.