Published:Updated:

இத்தனை மூன்றுகளா... தற்போதைய தமிழ் ரைட்டர்ஸ் நோட் பண்ணுங்கப்பா, நோட் பண்ணுங்கப்பா! #ClassicViral

சில மாதங்களுக்கு முன்னர், 'பிரண்ட்ஸ்' படத்தின் நேசமணி ஹிட் அடித்ததை யாரும் மறந்திருக்க மாட்டோம். உலக அளவில் டிரெண்டு ஆன நேசமணிக்கு, விக்னேஷ் என்னும் ஓர் இளைஞர் போட்ட ஒற்றை ரிப்ளே தான் காரணம்.

வைரல் காட்சியில் இருந்து!
வைரல் காட்சியில் இருந்து!

சமூக வலைதளங்கள் எப்போது எதை டிரெண்டு செய்யும் என கணிப்பது இயலாத காரியம். சில நேரங்களில், சில சவால்கள். சில நேரங்களில், அரசியல் தொடர்பான சம்பவங்கள். ஆனால், பெரும்பாலும் யாரும் எதிர்பாராத நேரத்தில் சில சினிமா காட்சிகள் வைரல் டிரெண்டு அடிக்கும்.

`கான்ட்ராக்டர்' நேசமணி!
`கான்ட்ராக்டர்' நேசமணி!

சில மாதங்களுக்கு முன்னர், பிரண்ட்ஸ் படத்தின் நேசமணி ஹிட் அடித்ததை யாரும் மறந்திருக்க மாட்டோம். உலக அளவில் டிரெண்டு ஆன நேசமணிக்கு விக்னேஷ் என்னும் ஓர் இளைஞர் போட்ட ஒற்றை ரிப்ளே தான் காரணம்.

வாழ்க்கை தினசரி அலுவல்களிலே சுற்றிக்கொண்டு இருக்கும்போது, திடீரென கண்ணில் படும் சில காட்சிகள், மீம்கள், சில நிமிடங்களுக்கு நம்மை வேறு ஒரு நிலைக்கு கொண்டுசென்றுவிடும். சரி, இதெல்லாம் ஏன் இப்போது சொல்கிறேன் என்று பார்கிறீர்களா..? காரணம் இருக்கிறது. நேற்று முதல், இணையத்தில் சம்பந்தமே இல்லாமல் ஒரு 'மூன்றெழுத்து' வீடியோ சுற்றிவருகிறது. அது ஒரு பழைய படத்தின் காட்சி. திரையில் 7 கதாபாத்திரங்கள் இருக்கின்றனர் இதில் பேசும் அனைவரும் மூன்றெழுத்து என்னும் வார்த்தையை மீண்டும் மீண்டும் பயன்படுத்துகிறார்கள்.

சமூக வலைதளம்
சமூக வலைதளம்

இரண்டு நிமிடங்களுக்குள் இத்தனை மூன்றெழுத்துகளா..? என நம்மை ஆச்சர்யப்படுத்தும் இந்த வீடியோதான், இப்போதைய ஹிட். இந்த வீடியோவை பலரும் ஷேர் செய்ய, வைரலாகி வருகிறது. இயக்குநர் வெங்கட் பிரபு, இதை அவரது ட்விட்டர் பக்கத்தில், ``அற்புதமான வசனங்கள்... யப்பா! இதுவும் மூன்றெழுத்து! யாருப்பா வசனம் எழுதியவர்” என வீடியோவை போஸ்ட் செய்தார்.

அவரின் வீடியோ 66 ஆயிரம் வீயூஸைக் கடந்து சென்றுகொண்டி ருக்கிறது. மூவாயிரத்துக்கும் மேலனா ரீ ட்வீட்டுகள், 11 ஆயிரம் லைக்ஸ்களைக் குவித்துவருகிறது. அட, இது என்ன படம்யா... எனப் பலரும் கேள்வி கேட்க, அதுவும் `மூன்றெழுத்து’ தான் என்று பதில் கிடைத்தது.

வெங்கெட் பிரபுவின் டிவிட்டர் பதிவு
வெங்கெட் பிரபுவின் டிவிட்டர் பதிவு

1968 -ம் ஆண்டு வெளியான இந்த படத்தை டி.ஆர்.ராமண்ணா இயக்கியுள்ளார். இப்படத்தில் ரவிசந்திரன், ஜெயலலிதா, நாகேஷ், ஷீலா, அசோகன், தேங்காய் சீனிவாசன் எனப் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனைவரும் எதிர்பார்க்கும் படத்தின் வசனத்தை எழுதியவர், டி.என். பாலு.

க மு தி என்னும் மூன்றெழுத்தை க்ளூவாகக் கொண்ட ஒரு க்ரைம் படம் இது. இப்போ வருகிற படங்களில், மாஸ் படத்தின் `டைட்டில்’ ஏதாவது ஒரு வசனத்தில் இடம் பெற்றிருந்தாலே வேற லெவல் ரெஸ்பான்ஸ் கிடைக்கும்.

மூன்றெழுத்து
மூன்றெழுத்து

உதாரணமாக, `நேர்கொண்ட பார்வை' படத்தில், நடிகர் அஜித் பேசும்போது, `விஸ்வாசம்’ என்னும் சொல்லை உச்சரிக்கும்போது திரையரங்கில் அத்தனை பெரிய ஆரவாரம். அது அடங்குவதற்கே வெகுநேரம் எடுக்கிறது. ஆனால், இந்த படத்தில் எத்தனை மூன்றெழுத்துகள் இடம்பெறுகின்றன என்பதை நீங்களே எண்ணிப்பாருங்கள்

அடேய் எல்லை மீறி போறீங்கடா😂😂😂😂

Posted by Ada berika mandaiya on Thursday, August 15, 2019

இந்த வைரல் காட்சியை நீங்க மிஸ் பண்ணியிருந்தீங்கன்னா, மறக்காம பாருங்க. இந்த காட்சி எப்படி இருக்கிறது என்று மூன்றெழுத்தில் `பக்கா’வா கமென்ட் பண்ணுங்க. அட, `பக்கா'வும் மூன்றெழுத்து!

Vikatan