Published:Updated:

`நமக்கு மட்டும்தான் இப்படித் தெரியுதா?' - இணையத்தைக் குழப்பிய போட்டோக்கள்

மு.ராஜேஷ்

கடந்த சில நாள்களாக இந்தப் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

ஆப்டிகல் இல்யூஷன்
ஆப்டிகல் இல்யூஷன்

மேலே இப்போது நீங்கள் பார்த்த படம் கறுப்பு-வெள்ளை போட்டோவா அல்லது கலர் போட்டோவா? சந்தேகம் வந்தால் மீண்டும் ஒரு முறை பார்த்து விடுங்கள். முதலில் அது கலர் போட்டோவாகவே உங்களுக்குத் தெரிந்திருக்கும். இப்போது மீண்டும் அதை உற்றுக் கவனித்தால் அது ஒரு கறுப்பு வெள்ளை போட்டோ என்பது தெரியவரும்.

ஒரிஜினல் போட்டோ
ஒரிஜினல் போட்டோ

உங்களுக்கு மட்டுமல்ல இதைப் பார்க்கும் அனைவருக்குமே அந்தக் குழப்பம் இருக்கிறது.

சமூக வலைதளங்களில் கடந்த சில நாள்களாக இது போன்ற சில போட்டோக்கள் வைரலாகி வருகின்றன. அது மட்டுமன்றி பார்ப்பவர்களின் கண்களையும் ஏமாற்றி விடுகின்றன. @page_eco என்ற ட்விட்டர் கணக்கில் இதே போல ஒரு போட்டோ கடந்த சில நாள்களுக்கு முன்னால் ட்வீட் செய்யப்பட்டிருந்தது. அதன் பின்னரே அது வைரலானது.

ஆப்டிகல் இல்யூஷன்
ஆப்டிகல் இல்யூஷன்

இந்த போட்டோக்களை டிஜிட்டல் மீடியா ஆர்ட்டிஸ்ட் மற்றும் மென்பொருள் பொறியாளரான Øyvind Kolås என்பவர் உருவாக்கியிருக்கிறார். காட்சிப் பரிசோதனைக்காக Patreon என்ற நிறுவனத்துக்காக இந்த போட்டோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 'colour assimilation grid illusion' என்ற உத்தி இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட நிறங்களைக் கொண்ட கோடுகளைக் கறுப்பு வெள்ளை போட்டோக்களின் மேல் அவர் பொருத்தியிருக்கிறார்.

ஆப்டிகல் இல்யூஷன்
ஆப்டிகல் இல்யூஷன்

"கறுப்பு வெள்ளை படத்தின் மேல் அதிகச் செறிவுள்ள நிறக் கோடுகளால் கண்களில் இருக்கும் grayscale செல்கள் அந்தப் பகுதிகளில் நிறங்கள் இருப்பதாக உணர்ந்து கொள்கின்றன" என Øyvind Kolås குறிப்பிட்டிருக்கிறார்.