Published:Updated:

கள்ளக்குறிச்சி காவல் கண்காணிப்பாளராக பகலவன்... மாணவர்கள் மீது அக்கறை கொண்ட அதிகாரி!

கள்ளக்குறிச்சி

காவல்துறையினரே தற்போது கைதிகளை அடிப்பதற்கு யோசிக்க ஆரம்பித்துள்ளார்கள். அப்படியிருக்க, மாணவர்களை அடிப்பதா? அடிப்பது போன்ற தண்டனைகள் மூலமாகவெல்லாம் திருத்த முடியாது. ஆசிரியர்கள்தான் மாற வேண்டும்.

கள்ளக்குறிச்சி காவல் கண்காணிப்பாளராக பகலவன்... மாணவர்கள் மீது அக்கறை கொண்ட அதிகாரி!

காவல்துறையினரே தற்போது கைதிகளை அடிப்பதற்கு யோசிக்க ஆரம்பித்துள்ளார்கள். அப்படியிருக்க, மாணவர்களை அடிப்பதா? அடிப்பது போன்ற தண்டனைகள் மூலமாகவெல்லாம் திருத்த முடியாது. ஆசிரியர்கள்தான் மாற வேண்டும்.

Published:Updated:
கள்ளக்குறிச்சி

``கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் நடைபெற்ற கலவரத்துக்குக் காரணமே காவல்துறையின் தோல்விதான்'' என்று ஒட்டுமொத்தமாகக் குற்றம்சாட்டப்படுகிறது. இத்தகைய சூழலில், அந்த மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளர் செல்வகுமார் மாற்றப்பட்டு, அந்தப் பொறுப்பில் பகலவன் ஐ.பி.எஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

பகலவன்
பகலவன்

இவர், அங்கே சென்று என்ன செய்யப்போகிறார்? இவருடைய அணுகுமுறை எப்படி இருக்கப்போகிறது... என்றெல்லாம் கேள்விகள் எழுந்துள்ளன. இந்நிலையில், அவர் பங்கேற்ற ஒரு நிகழ்வு இங்கே நினைவுகூரத்தக்கது.

ஆசிரியரை அடிக்க கை ஓங்கும் மாணவன், ஆசிரியரைச் சுற்றி வட்டமிட்டு கைதட்டி கேலி செய்யும் மாணவர்கள், சீருடையில் மது அருந்தும் மாணவிகள், இரும்பு மேசையை உடைக்கும் மாணவன் என்றெல்லாம் சில மாதங்களுக்கு முன் வெளியான வீடியோக்கள், தமிழகம் முழுக்க கவலைபொங்கும் விவாதங்களைக் கிளப்பின.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதற்கான காரணிகளை அலசும் விதமாகக் கடந்த ஏப்ரல் 30-ம் தேதி கலந்துரையாடல் ஒன்றை, அவள் விகடன் நடத்தியது. பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், செயற்பாட்டாளர்கள், உளவியல் ஆலோசகர், வழக்கறிஞர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இக்கூட்டத்தில், சென்னை, திருவல்லிக்கேணியின் காவல்துறை துணை ஆணையராகப் பணியாற்றி வந்த பகலவன் பங்கேற்றார்.

``மாணவர்களை அடிப்பதற்கு அனுமதி வேண்டும். அப்படியில்லையென்றால் அவர்களைத் திருத்தவே முடியாது. ஆனால், அடிக்கக் கூடாது என்று சட்டம் போட்டு வைத்துள்ளனர்'' என்று ஓர் ஆசிரியர் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்த, எதிரே அமர்ந்திருந்த மாணவர்கள், அதிர்ச்சிப் பார்வையை வெளிப்படுத்தினர்.

கலந்துரையாடல்
கலந்துரையாடல்

அதைத் தொடர்ந்து பேசிய பகலவனின் பார்வை, மாணவர்களின் அதிர்ச்சிக்கு மருந்து போடுவதாக இருந்தது.

``என்ன சொல்கிறீர்கள்? காவல் துறையினரே தற்போது கைதிகளை அடிப்பதற்கு யோசிக்க ஆரம்பித்துள்ளார்கள். அப்படியிருக்க, மாணவர்களை அடிப்பதா? அடிப்பது போன்ற தண்டனைகள் மூலமாகவெல்லாம் திருத்த முடியாது. ஆசிரியர்கள்தான் மாற வேண்டும்.

மாணவர்களின் மனநிலையைத் தெரிந்துகொள்ள முதலில் முயற்சி செய்ய வேண்டும். மாணவர்களை அணுகும் விதத்தில் மாற்றம் வேண்டும். மாணவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கோடு இயங்க ஆசிரியர்கள் முன் வர வேண்டும்" என மிகுந்த சமூக அக்கறையுடன் பேசினார் பகலவன். ஒட்டுமொத்தமாக அன்றைய தினம் அவர் எடுத்து வைத்த கருத்துகள், சமூக அக்கறையை வெளிப்படுத்தும் வகையில் இருந்தன!

கள்ளக்குறிச்சியிலும் தொடரட்டும் இவரின் சமூக அக்கறை!