Published:Updated:

Royal Enfield: புல்லட் பிரியர்களே; ராயல் என்ஃபீல்டு ஹன்ட்டர் 350, நீங்க நினைக்கிற புல்லட் இல்லை இது

Royal Enfield Hunter 350

ராயல் என்ஃபீல்டு, தனது ஹன்ட்டர் எனும் புதிய 350 சிசி புது புல்லட் பைக்கை ரூ.1.50 லட்சம் விலையில் அறிமுகம் செய்திருக்கிறது. ஹன்ட்டர் பற்றி முக்கியமான டாப்-10 விஷயங்கள் இதோ!

Royal Enfield: புல்லட் பிரியர்களே; ராயல் என்ஃபீல்டு ஹன்ட்டர் 350, நீங்க நினைக்கிற புல்லட் இல்லை இது

ராயல் என்ஃபீல்டு, தனது ஹன்ட்டர் எனும் புதிய 350 சிசி புது புல்லட் பைக்கை ரூ.1.50 லட்சம் விலையில் அறிமுகம் செய்திருக்கிறது. ஹன்ட்டர் பற்றி முக்கியமான டாப்-10 விஷயங்கள் இதோ!

Published:Updated:
Royal Enfield Hunter 350
அநேகமாக, இந்த இரண்டு நாட்களில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தை Hunter என்பதாகத்தான் இருக்கும். இது ஏதோ வேட்டையாடுவது சம்பந்தமான விஷயம் இல்லை. இளைஞர்களின் உள்ளங்களை வேட்டையாட வந்திருக்கும் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ஹன்ட்டர் எனும் 350 சிசி புல்லட் பைக்.

இதன் மேக்கிங் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக நடந்து கொண்டிருந்தது. ஒரு வழியாக இப்போது ஹன்ட்டரைக் களத்தில் இறக்கி விட்டிருக்கிறது ராயல் என்ஃபீல்டு. ஹன்ட்டர் பற்றி நறுக் சுறுக் டாப்–10 விஷயங்கள் இதோ!

எடை குறைந்த புல்லட்
எடை குறைந்த புல்லட்


1. ராயல் என்ஃபீல்டின் சின்ன மற்றும் எடை குறைந்த புல்லட்!

இந்த ஹன்ட்டர் 350 தான் RE நிறுவனத்தின் எடை குறைந்த பைக்காக இருக்கும். இதன் எடை சுமார் 181 கிலோ. இது புல்லட் க்ளாஸிக் 350–யை விட 14 கிலோ குறைவான எடை. மேலும் இதன் வீல்பேஸ் – 20 மிமீ ரெகுலர் புல்லட்டைவிடக் குறைவு. வீல்பேஸ் குறையக் குறைய… பைக்குகளை சட் சட் என கார்னரிங் செய்வது, ஈஸியாக யு–டர்ன் செய்வது போன்றவை எளிதாக இருக்கும்.

2. உயரம் குறைவானவர்களும் ஓட்டலாம்!

கூடவே, இதன் சீட் உயரம் 800 மிமீதான். எனவே, பெரிய பல்க் பார்ட்டிகள் என்றில்லை… ஒல்லி கில்லிகளுக்கும், உயரம் குறைவானவர்களுக்கும் ஏற்ற வகையில் இந்த ஹன்ட்டரின் ஹேண்ட்லிங் இருக்கும்.


3. இரண்டு வேரியன்ட்கள், பல கலர்கள்!

Retro மற்றும் Metro என இரண்டு வேரியன்ட்களில் வருகிறது ஹன்ட்டர் 350. இதில் ரெட்ரோ வேரியன்ட்தான் ஆரம்ப வேரியன்ட். இதில் ரொம்ப வசதிகளை எதிர்பார்க்க முடியாது. ஸ்போக் வீல், சின்ன டிஜிட்டல் டிஸ்ப்ளே, ரியரில் டிரம் பிரேக் என்று குறைவான வசதிகள்தான் இதில் இருக்கும். Factory Black, Factory Silver, Dapper White, Dapper Ash, Dapper Grey,
Rebel Black, Rebel Blue, Rebel Red என பல கலர்களில் வருகிறது ஹன்ட்டர்.

Spoke and Alloy Wheels
Spoke and Alloy Wheels

4. அலாயும் இருக்கு; ஸ்போக் வீல்களும் இருக்கு!

இரண்டு பக்கமும் ஒரே அளவுகள் கொண்ட 17 இன்ச் வீல்கள் கொண்ட பைக் இதுதான். CEAT டயர்களில் வருகிறது ஹன்ட்டர். இது அளவில் சிறியது. மேலும் சாதா புல்லட் போல ஸ்போக் வீல்களும், மீட்டியார் போல செம ஸ்டைலிஷாக அலாய் வீல்களும் என இரண்டிலும் வருகிறது ஹன்ட்டர். Metro வேரியன்ட்டில்தான் அலாய் வீல் வசதி உண்டு. ஸ்போக் வீல்களில் அநேகமாக ட்யூப் டயர்தான் வரும் என்பதால், பஞ்சர் ஆனால் 181 கிலோ பைக்கை ‘ஆ தள்ளு.. தள்ளு’ என தள்ள வேண்டியிருக்கும்.


5. டிசைன்

வட்ட வடிவ ஹெட்லைட்ஸ், அதே வட்ட வடிவ இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், டிஜி அனலாக் ஸ்டைல் மீட்டர், LED டெயில் லைட்ஸ் (ஹாலோஜன் பல்புகள் வேரியன்ட்டும் உண்டு), இதை ஒரு ரெட்ரோ மாடல் புல்லட் மாதிரியே டிசைன் செய்திருக்கிறது ராயல் என்ஃபீல்டு. ஒரு ஜாலியான நேக்கட் பைக்கை ஓட்டுவதுபோல் இதன் ரைடிங் பொசிஷனை வைத்திருக்கிறார்கள். இதன் இன்ஜின் ஸ்டார்ட் பட்டன், மீட்டியாரில் இருப்பதுபோலவே ஸ்லைடு வசதியுடன் இருக்கும். முன் பக்கம் குட்டி வைஸர், காற்று முகத்தில் அறையாமல் தடுக்கும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
Digi-Analogue Meter
Digi-Analogue Meter

6. இன்ஜின்

புல்லட் க்ளாஸிக் 350 மற்றும் மீட்டியாரில் இருக்கும் அதே இன்ஜின்தான் இது. இதில் 349 சிசி, சிங்கிள் சிலிண்டரும், இரட்டை வால்வ் செட்அப்பும் கொடுத்திருக்கிறார்கள். இதன் பவர் 20.2bhp மற்றும் 27Nm டார்க். 4,000rpm வரை ரெவ் பண்ண முடிவதாக மீட்டியார் வாடிக்கையாளர்கள் சொல்கிறார்கள். அதனால், இந்த ஹன்ட்டரும் ஓட்டுதலில் அப்படியே மீட்டியாரைப் போலவே இருக்கலாம். ஆனால், இந்த எடை குறைவான பைக்குக்காக இந்த இன்ஜின் செட்அப்பைக் கொஞ்சம் அதற்கேற்றபடி ட்யூன் செய்திருப்பதாகச் சொல்கிறது RE. இதன் எக்ஸாஸ்ட்டைக் குட்டையாக வடிவமைத்திருப்பதால்… எக்ஸாஸ்ட் பீட் என்ஃபீல்டை விட இன்னும் கொஞ்சம் ‘தட் தட்’ இருக்கலாம். ஆனால், இதன் க்ளட்ச் கொஞ்சம் ஹெவியாக… அதாவது கை கொஞ்சம் வலிப்பதுபோல் இருக்கலாம் எனும் தகவல் கிடைத்திருக்கிறது.

349 CC, 20.2bhp, 27Nm engine
349 CC, 20.2bhp, 27Nm engine

7. மைலேஜ்

புல்லட் மற்றும் மீட்டியார் ஓட்டும் வாடிக்கையாளர்கள், தங்கள் பைக்கின் மைலேஜாகச் சொல்வது ஆவரேஜாக 35 கிமீ. இந்த ஹன்ட்டர் எடை குறைவாகவும், இன்ஜிட் ட்யூனிங் செட்அப்பாலும் கொஞ்சம் கூடுதலாக மைலேஜ் தர வாய்ப்பிருக்கலாம். 38 கிமீ கிடைத்தால்… செம மைலேஜ்தானே!

8. டாப் ஸ்பீடு

புல்லட் மற்றும் மீட்டியாரின் டாப் ஸ்பீடு 120 கிமீ. இந்த ஹன்ட்டரும் அதே 120 கிமீ டாப் ஸ்பீடு போகும். என்ன 100 கிமீ–க்குப் பிறகு அந்த இன்ஜின் தடுமாற்றம் இந்த ஹன்ட்டரிலும் இருக்கத்தான் செய்யும். இதுவும் Vibration Free புல்லட்டாக இருக்கும்.

Hunter 350
Hunter 350


9. விலை

ரூ.1.50 லட்சம் முதல் 1.69 என எக்ஸ் ஷோரூம் விலையில் வந்திருக்கும் ஹன்ட்டர், புல்லட் க்ளாஸிக்கைவிட விலை குறைவு. இதுதான் ராயல் என்ஃபீல்டின் விலை குறைந்த பைக்கும்கூட! இதில் சிங்கிள் டோன் மெட்ரோ மாடல், ரூ.1.64 லட்சம். டூயல் டோன் என்றால் 1.69 லட்சம். இது ஹோண்டா CB350RS பைக்கைவிட சுமார் 55,000 ரூபாய் குறைவு. டிவிஎஸ் ரோனின் பைக்குக்குக் கடும் போட்டியை ஏற்படுத்தலாம் ஹன்ட்டர்.


10. வசதிகள்

ரொம்ப வசதிகள் நிறைந்த பைக் என்று ஹன்ட்டரைச் சொல்ல முடியாது. யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், ஹஸார்டு லைட்கள், இரண்டு பக்கமும் டிஸ்க், (ரெட்ரோவில் டிரம் பிரேக்தான்), டூயல் சேனல் ஏபிஎஸ், பெரிய டிஜிட்டல் டிஸ்ப்ளே, (ரெட்ரோவில் சின்ன டிஜிட்டல் டிஸ்ப்ளே) போன்ற போதுமான வசதிகள் உண்டு. நேவிகேஷன் ஜிபிஎஸ் சிஸ்டம் ஆப்ஷனலாக வாங்கிக் கொள்ளக் கூடிய வசதி இருக்கும். மீட்டியார் மாதிரி பைக்கை நமக்குப் பிடித்த வகையில் மாற்றிக் கொள்ளும் வகையில் MIY (Make it Yours) கஸ்டமைசேஷன் ஆப்ஷனுடன் வந்தால் ஹன்ட்டர் ஹிட் அடிக்கலாம்.


மொத்தத்தில், இது நீங்க நினைக்கிற புல்லட் மாதிரி இருக்கப் போவதில்லை… இந்த ‘தட் தட்’ சத்தம்… அதுக்கும் மேலயும் இருக்கலாம்!