Published:Updated:

டெஸ்லாவுக்கு அழைப்பு விடுக்கும் மாநிலங்கள்!

டெஸ்லா
பிரீமியம் ஸ்டோரி
டெஸ்லா

இந்தியாவுக்கு வருமா டெஸ்லா?

டெஸ்லாவுக்கு அழைப்பு விடுக்கும் மாநிலங்கள்!

இந்தியாவுக்கு வருமா டெஸ்லா?

Published:Updated:
டெஸ்லா
பிரீமியம் ஸ்டோரி
டெஸ்லா
டெஸ்லா
டெஸ்லா

அமெரிக்காவில் டெஸ்லா என்பது ப்ரஸ்டீஜியஸ் எலெக்ட்ரிக் கார். ‘‘நீங்க இந்தியாவுக்கு வாங்களேன்’’ என்று ஒரு தடவை யூடியூபர் மதன் டெஸ்லாவுக்குக் கோரிக்கை விடுக்க, ‘‘இங்கே எலெக்ட்ரிக் கார்களுக்குக் கிடைக்கும் மானியம், வரிச்சலுகை, மரியாதை மற்ற நாடுகளில் இல்லை; முக்கியமாக இந்தியாவில் இல்லை. மத்திய அரசுடன் போராட வேண்டியிருக்கிறது’’ என்று டெஸ்லாவின் நிறுவனர் எலான் மஸ்க் அதற்குப் பதில் சொல்லியிருந்தார்.

அமெரிக்காவில் தொடங்கப்பட்ட டெஸ்லா நிறுவனம், இந்தியாவில், 2021–ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பெங்களூருவில் அலுவலகத்தை அமைத்தது. அலுவலகங்கள் அமைத்தாலும், டெஸ்லா கார்களின் விற்பனை தொடங்கவில்லை. இதற்கு, ஒன்றிய அரசிடம் இருந்தும் எந்த பதிலும் இல்லை. ஆனால், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் டெஸ்லாவை வரவேற்றுக் கொண்டிருக்கின்றன.

‘‘புதிய தொழிற்சாலைகளை அமைப்பதற்குத் தகுதியான மாநிலம் தெலுங்கானா. இங்க வாங்க!” என்று தெலங்கானா அமைச்சர் கே.டி.ராமராவ்….

“லூதியானா பேட்டரி நகரத்துக்கு வரவேற்கிறோம்! என்று பஞ்சாப் மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் சித்து…

‘‘தொலைநோக்குப் பார்வை கொண்ட எங்கள் தலைவி மம்தா பானர்ஜி உள்ளார்; வங்காளம் என்றால் வணிகம்!’’ என்று மேற்கு வங்கத்தின் கல்வி அமைச்சர் குலாம் ரப்பானி… ‘‘இந்தியாவில் டெஸ்லாவுக்கு உதவ மகாராஷ்டிரா அரசு தயாராக உள்ளது!’’ என்று மகாராஷ்டிராவின் நீர்வளத்துறை அமைச்சர் ஜெயந்த் பாட்டீல்… என்று ஒவ்வொரு மாநில அரசுகளும் ட்விட்டரில் ஆக்டிவ்வாக இருக்க… நம் தமிழ்நாடும் சும்மா இல்லை.

எலான் மஸ்க்
எலான் மஸ்க்


‘‘இந்தியாவின் டெட்ராய்டுக்கு வாங்க! 34% பங்கு கொண்ட இந்தியாவின் EV மாநிலத்துக்கு வரவேற்கிறோம்!’’ என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவும், மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜாவும் மஸ்க்குக்கு அழைப்பு விடுத்துவிட்டனர்.

ஆளாளுக்கு அழைப்பு விடுத்தாலும்… இறக்குமதி வரிகள், சார்ஜிங் ஸ்டேஷன்கள், எலெக்ட்ரிக் கார்களுக் கான உட்கட்டமைப்பு வசதிகள், மானியங்கள், பேட்டரி தயாரிப்புகள், எலெக்ட்ரிக் மோட்டார் உதிரி பாகங்கள்னு எவ்வளவோ இருக்கு. அதைத்தான் மத்திய அரசுடன் போராடிக் கொண்டிருக்கிறார் மஸ்க்.

என்ன நடக்குதுனு பார்க்கலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism