Published:Updated:

`கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் விராட் கோலி!' - வைரலாகும் வீடியோ

தாத்தா வேடத்தைக் கலைத்து, குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்லுகிறார் விராட்.

விராட் கோலி
விராட் கோலி

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, விளையாட்டுலகைத் தாண்டியும் மக்களிடம் பிரபலமானவர். கிரிக்கெட்டில் எதிரணியை, தன் அதிரடி பேட்டிங்கால் மட்டுமல்ல, ஆக்ரோஷத்தாலும் ஆட்டம் காண வைப்பவர்.

விராட் கோலி
விராட் கோலி

கிரிக்கெட்டில் நம்பர் ஒன் என்றால், விளம்பரப் படங்கள் நடிப்பதிலும் அதே அளவு பிஸி. கூல் மேன் ரோலில் நடிக்கும் விராட்டின் விளம்பரங்களைக் காண ஒவ்வொரு வீட்டிலும் குட்டி குட்டி ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

Vikatan

அந்த வரிசையில், கிறிஸ்துமஸுக்கு இன்னும் சில தினங்களே இருக்க, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் கிறிஸ்துமஸுக்காக விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. குழந்தைகள் காப்பகம் ஒன்றில் இருக்கும் குழந்தைகளிடம் கிறிஸ்துமஸ் பரிசாக `யாரைச் சந்திக்க வேண்டும், என்ன பரிசு வேண்டும்' என்ற கேள்விகளுடன் தொடங்குகிறது அந்த விளம்பரம்.

விராட் கோலி
விராட் கோலி

ஒவ்வொரு குழந்தையும், ஸ்பைடர் மேன், அயர்ன் மேன், சைக்கிள், பொம்மை, சாக்லேட் என தங்களுடைய லிஸ்ட்டை அடுக்குகின்றனர். அதன்பின் உங்களுக்குப் பிடித்த கிரிக்கெட் வீரட் யார் என கேட்க, `விராட், தாடி வைத்திருப்பாரே அவர் என குழந்தைகள் பதில் சொல்கின்றனர். குழந்தைகளின் பதிலை விராட் கோலி பார்த்து ரசிக்கிறார்.

சாண்டா க்ளாஸ், குழந்தைகள் காப்பகத்துக்குள் நுழைந்து, குழந்தைகள் கேட்ட பரிசை வழங்குகிறார். ``பரிசுகள் கொடுக்க ஸ்பைடர் மேன் வரவில்லை, விராட் கோலி வந்தால் மகிழ்ச்சியா?" என்ற காப்பக உரிமையாளர் கேட்க, குழந்தைகள் எல்லோரும் `ஓகே' என்று ஒருமித்த குரலில் கத்துகின்றனர். சாண்டா க்ளாஸ் வேஷத்தைக் கலைத்து, குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்லுகிறார் விராட்.

க்யூட் லுக்கில் மாஸ் காட்டும் விராட்டின் இந்த விளம்பரம் நெட்டிசன்கள் பலராலும் பகிரப்பட்டு, டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.