Published:Updated:

`மிஸ்டர் மோடி... வேலை வேணும்!' - தேசிய அளவில் டிரெண்டான modi_job_do ஹேஷ்டேக்

மோடி
மோடி ( File Photo )

இந்தியாவில் வேலையின்மையை அதிகரிக்கக் காரணமாக இருந்ததுடன், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க ஆர்வம் காட்டவில்லை என்கிற குற்றச்சாட்டுகள் மோடியை நோக்கிக் கிளம்பியிருக்கின்றன!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெருக்கும் `புதியன தொடங்குவோம்’ என்ற திட்டம் ஜனவரி 16, 2016-ல் நடைமுறைக்கு வரும் என்று பிரதமர் நரேந்திர மோடி ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

அவர் பிரதமராகப் பதவியேற்ற புதிதில், `மனதில் உள்ளதைப் பேசுகிறேன்’ (மன் கி பாத்) என்ற தலைப்பில் வானொலியில் உரையாற்றி வருகிறார். அந்த உடையாடல் நிகழ்ச்சியின்போது, ``இந்தியாவில் புதியன தொடங்குவோம், எழுந்து நிற்போம்’ (‘ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா’) என்ற திட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தேன். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெருக்கும் இந்தத் திட்டம் தற்போது செயல்வடிவம் பெற்றுள்ளது.

விரைவில் இந்தத் திட்டத்தை மத்திய அரசு முழு உத்வேகத்துடன் தொடங்கும். சமூகத்தின் பின்தங்கிய நிலையில் இருக்கும் இளைஞர்களின் முன்னேற்றத்துக்கு இந்தத் திட்டத்தில் முக்கியத்துவம் அளிக்கப்படும். அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த இளம் தொழில்முனைவோரும் புதுமை சிந்தனைகளை வெளிப்படுத்துவதன் மூலம் அரிய வாய்ப்புகளைத் தொடங்குவோம்" என்று பேசியிருந்தார்.

ஆனால், அதன்பிறகு இந்தியாவின் வேலையின்மையை அதிகரிக்கவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும் அவர் ஆர்வம் காட்டவில்லை என்கிற குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நிலையில், இந்தியாவில் வேலையின்மை அதிகரித்து வருவது குறித்து சமூக ஊடகங்கள் மூலம் பிரதமர் மோடியிடம் தங்களுக்கு வேலை வேண்டும் என்று பல இளைஞர்கள் நேரடியாகக் கோரிக்கை வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

இதற்காக, மோடி ஜாப் தோ’ (modi_job_do) என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்விட்டரில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்த ஹேஷ்டேக்கில் 1.5 கோடிக்கும் மேற்பட்டோர் ட்விட் செய்து பல்வேறு கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர். மேலும், 'மாமா ரோஸ்கர் தோ’ (#Mama_Rojgar_Do) என்ற ஹேஷ்டேக் இந்தியளவில் டிரெண்டில் வருகிறது.

கொடுத்த வாக்குறுதியை மோடி காப்பாற்றவில்லை, வேலைவாய்ப்புகளை அதிகரிக்க மோடி என்ன செய்தார் என்கிற கேள்விகளை மோடி அரசின் முன் இளைஞர்கள் வைப்பதால், கடந்த இரண்டு நாள்களாக பா.ஜ.க அரசு செய்வதறியாமல் முழித்துக் கொண்டிருக்கிறது.

புதிதாக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்குப் பதிலாக சமூக வலைதளங்களில் விரும்பத்தகாத செய்திகள் வந்தால், அவற்றை 36 மணி நேரத்துக்குள் எடுக்க வேண்டும் என ஃபேஸ்புக், ட்விட்டர், நெட்ஃபிளிக்ஸ் போன்றவற்றுக்கு உத்தரவு பிறப்பித்துக் கொண்டிருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு