வெளியிடப்பட்ட நேரம்: 16:38 (09/03/2015)

கடைசி தொடர்பு:17:27 (09/03/2015)

'மாட்டிறைச்சி பாவம் என்றால், பால் குடிப்பது பாவம் இல்லையா?'

காராஷ்டிர மாநிலத்தில் மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாட்டிறைச்சி வைத்திருப்போர் அல்லது விற்பனை செய்வோருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்ற சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இச்சட்டத்துக்கு ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்தும் குரல்கள் எழுந்துள்ள நிலையில், இச்சட்டம் குறித்து நமது வாசகர்களிடம் கருத்து கேட்டிருந்தோம். வந்து விழுந்த காரசாரமான பதில்களில் இருந்து...

சத்யா: இது சிறுபான்மையினர் மீதான அப்பட்டமான தாக்குதல். யார் என்ன சாப்பிட வேண்டும் என்பதை சட்டம் இயற்றி முடிவு செய்வது ஜனநாயகப் படுகொலை. இதைக் கூறும் நான் சைவம்தான்.

john: ஏழை எளிய மக்களும், தாழ்த்தப்பட்ட வறுமையில் வாடும் மக்களும் 500 ரூபாய் கொடுத்து ஆட்டுகறி வாங்க வழியில்லாமல் கிலோ 200 ரூபாய் என மாட்டுகறி வாங்கி உண்ணும் உணவை கேவலப்படுத்தி, அதை உண்பது பாவம் எனவும் மாட்டுகறி திண்பவர்கள் கேவலமானவர்கள் எனவும் சித்தரிப்பது சரியல்ல. உயிர் மேல் கருணை என்றால் லட்சக்கணக்கான ஆடுகள் கொல்லப்படுகிறதே... அவை உயிர் இல்லையா? இந்தியாவில் தினமும் ஒரு கோடிக்கும் மேலான கோழிகள் கொல்லப்படுகிறதே அது பாவம் இல்லையா..? கோழி தன் இனப்பெருக்கத்துக்காக இடும் முட்டையை திண்பது பாவம் இல்லையா..? பசு தன் கன்றுக்காக சுரக்கும் பாலை கறந்து குடிப்பது பாவம் இல்லையா..?

sheik dhawood:
ஜீவராசிகளை கொல்வது பாவம் என்று கருதினால் ஆடு, முயல், கோழி, சேவல், மீன், காடை, கௌதாரி, நண்டு ஆகியவற்றுக்கும் தடை விதித்திருக்க வேண்டும். ஒட்டுமொத்த மாடுகளையுமே கொல்ல தடை விதிக்கும்போது, மக்களின் பொருளாதார நிலையை மனதில் கொண்டு ஆட்டிறைச்சியின் விலையை இன்னும் குறைத்திருக்க வேண்டும்.

மதரீதியாக இந்துக்களின் புனிதமான பசுவைக் கொல்ல தடை விதித்து இருந்தால், முஸ்லிம்கள் வெறுத்து ஒதுக்கும் பன்றி இறைச்சியை விற்பதற்கும் தடை விதித்திருக்க வேண்டும். பசுக்களை இந்துக்கள் புனிதமாகக் கருதுவதால், பசுக்களை மட்டும் பலியிடுவதைத் தடை விதித்திருக்க வேண்டும். இப்படி எதுவுமே செய்யாமல், அரைவேக்காட்டுத்தனமாக தடை விதித்துள்ள முதல்வரை தேர்ந்தெடுத்துள்ள மகாராஷ்டிர மக்கள் இன்னும் அனுபவிக்கப்போவது என்னென்னவோ?!

hanif: இவர்கள் விதித்திருக்கும் தடை உயிரினங்கள் மீதான இரக்கத்தினால் அல்ல என்பதை எருமை மாடுகளுக்கு தடை விதிக்காததினாலேயே தெரிந்துகொள்ளலாம். இவர்கள் இதன் மூலம் இந்துத்வா வாக்கு வங்கியை திருப்திப்படுத்த முயன்றிருக்கின்றனர். இதனால் பாதிக்கப்படப்போவது ஏழைகளும் தலித் மக்களும்தான். பாவம்... அவர்களுக்கான ஆரோக்கியத்துக்கான மலிவான உணவும் அவர்களின் தட்டில் இருந்து பறிக்கப்பட்டிருக்கிறது. ஒரு அரசாங்கம் மக்களின் உணவு தட்டு வரை தன் கரங்களை நீட்டியிருப்பது வேடிக்கையிலும் வேடிக்கை.

Ramamurthy : மக்களின் உணவு பழக்கங்கள், அவர்களது மத நம்பிக்கை போன்ற தேவை இல்லாத விஷயங்களில் தலையிடுவதைத் தவிர்த்து, மக்களின் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் வழிகளை யோசித்து, நல்ல ஆட்சி நடத்ததான் மக்கள் இந்த அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்தார்கள். அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையின் காரணமாக ஏராளமான கசாப்பு கடைகள் மூடப்பட்டு மக்கள் வேலை இழப்பார்கள்.

vyjayanthiran: மாட்டிறைச்சி இந்தியர்களின் உணவல்ல. புரோட்டீன் தேவையைப் பூர்த்திசெய்து கொள்வதற்கு நமக்கு ஆடு, கோழி இருக்கும்போது நாம் வணங்கும் தெய்வமான மாட்டை இறைச்சியாக உட்கொள்வது சரியல்ல. இருப்பினும் எருமை இறைச்சி உட்கொள்ளலாம் என்று மகாராஷ்டிரா மாநிலச் சட்டம் சரியானதே

kadavular thalaivan:
இது முற்றிலும் மனித உரிமை மீறல் சட்டம். ஒருவர் எந்த உணவு சாப்பிட வேண்டும் என்று அவரவர்தான் முடிவெடுக்க வேண்டும். அடுத்தவர் முடிவெடுக்க முடியாது. அரசாங்கம் முடிவெடுக்க முடியாது. ஆகையால் இது முற்றிலும் மக்களுக்கு எதிரான சட்டம். இந்து மதம் ஒரு கடவுளை கொண்ட மத மல்ல. ஆகையால் மதத்தை காட்டி இதை தடை செய்ய முடியாது. இந்து மதம் என்பது பல சிறுபான்மை மதங்களின் தொகுப்பே ஆகும். இது முற்றிலும் மக்கள் விரோத சட்டம். இந்த சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும். இந்த சட்டத்தை போட்ட அரசுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.

ashok.S: அனைத்து வகையான உயிர் வதைக்கும் தடை வேண்டும். நம் உணவே நம் மனதை தீர்மானிக்கிறது. சாதுவான காய், கனிகளை உண்ணும்போது சாதுவாகவும், மது, அசைவ உணவை உண்ணும்போது மிருக குணமும் ஏற்படுகிறது. பிறக்கும்போது சைவ உணவை, பசுவின் பாலை உண்ணும் நாம் வளரும்போது மட்டும் இறைச்சியை தேடுவது ஏன்? அசைவ உணவிருந்தால்தான் உயிர் வாழ முடியுமா? இறைச்சி உண்பவர்கள் மது, புகைக்கு அடிமையாகிவிடுகின்றனர். அசைவ உணவால் மனித உடலுக்கு பல்வேறு நோய்கள் வருகின்றன. உடல் பருமன், சர்க்கரை நோய், இதய நோய், புற்று நோய்க்கு அசைவ உணவே காரணம் என்றால் மிகையாகாது.

NIGAMATH ALI: ஒரு மனிதன் மாமிசமே உண்ணக் கூடாது; காய்கறிகளை மட்டுமே உண்ண வேண்டும் என்ற நிலை இருந்தால், பணக்காரர்கள் மட்டுமே காய்கறிகளை உண்ண முடியும். ஒரு கிலோ உருளைக்கிழங்கு ரூபாய் 500-க்கு விற்கும்.ஒரு கிலோ தக்காளி 300-க்கு விற்கும். அந்த நிலையில் ஏழைகளுக்கு அது எப்போதும் கிடைக்காத பொருளாகிவிடும். நம் மக்களில் பலர் அசைவ உணவு உண்பதால்தான் எல்லா காய்கறிகள் மற்றும் அசைவ உணவுகள் அனைத்தும் மனிதர்கள் வாங்ககூடிய விலையில் கிடைக்கிறது.

மனிதர்கள் ஆடு, மாடுகளை கொல்லக் கூடாது என்றால் ஊரெங்கும் ஆடுகளும், மாடுகளும் சுற்றி திரியுமே... அதை என்ன செய்வது?அதோடு மிகப்பெரிய ஆபத்து நாம் சுவாசிக்கக் கூடிய காற்றில்கூட பற்றாக்குறை ஏற்படும். நம்மோடு சேர்ந்து ஆடு மாடுகளும் காற்றை சுவாசித்தால் நாம் ஆக்சிஜன் வாயுவை காசு கொடுத்துதான் வாங்க வேண்டும்.

Madurai Bala புலால் உண்ணாமை நல்லது. ஆனால், அது நடைமுறை சாத்தியம் இல்லை. ஒரு குறிப்பிட்ட விலங்கு மட்டும் கூடாது என்பது முறையற்றது. உள் நோக்கம் உடையது. இது மதங்கள் தொடர்பானது எனில், அதை மக்கள் ஏற்கும் மனநிலையை உருவாக்க வேண்டும். தடை, அடுத்த நிலை.

விவாத களத்தில் நீங்களும் பங்கேற்க இங்கே க்ளீக் செய்யவும்...

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்