மனைவிதான் மெகா டீச்சர்!

காதலியை சமாதானப்படுத்த ஒரு சாரி போதும். ஆனால் மனைவியை சமாதானப்படுத்த சேலை, சுடிதார், ஆண்ட்ராய்டு, கோல்டு நெக்லஸ்னு வாங்கித்தர வேண்டி இருக்கும்.

=> தான் கேட்காமலேயே தனக்குப் புடிச்சதை வாங்கித்தரும் கணவரைப் பார்த்து 'ஆஸம்'னு சொல்ற  மனைவி, தான் கேட்டும் வாங்கித்தராத கணவரைப் பார்த்து 'மோசம்'னு சொல்லுவாங்க.

=> "உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்"ன்னு மனைவி சொல்லும்போது, என்ன பேசப்போறாங்களோன்ற டென்ஷனைவிட, எந்த தப்பை கண்டுபிடிச்சாங்களோன்ற குழப்பம் மேலோங்குவது இயல்பு.

=> அடிக்கடி அம்மாவைப் பத்தி பேசிகிட்டு இருக்கும் கணவனை, பெரும்பாலும் மனைவிக்குப் பிடிக்காது. தான் சொல்றதுக்கெல்லாம் 'ஆமா'ன்னு சொல்லும் கணவனைத்தான் மனைவிக்கு ரொம்ப பிடிக்கும்.

=> "ஏங்க நைட்டு தூக்கத்துல உளறுனீங்க?"ன்னு கேட்கும் மனைவியிடம் "என்னன்னு உளறினேன்?"ன்னு கணவன் திருப்பிக் கேட்கும்போது "அது என்னவோ எனக்கு சரியாப் புரியல"ன்னு மனைவி சொல்லும்போது கணவனுக்கு வருவது மிகப்பெரிய நிம்மதி.

=> ஒரு ஆண் தன் மனைவிகூட ஷாப்பிங் போகும்போது, அதைப் பார்க்குறவங்களுக்கு ஒரு அப்பாவி, ரொம்ப பசியோட இருக்குற புலிக்குப் பக்கத்துல நிற்கிற மாதிரி ஒரு பீலிங் வருவது இயல்பு.

=> மச்சினிச்சிகளைப் பெற்றவர்களெல்லாம் அதிர்ஷ்டசாலிகள் இல்லைங்க. அவங்ககூட நட்புடன் சகஜமா பேச அனுமதிக்கும், அப்படி பேசுறதை சந்தேகப்படாத மனைவியைப் பெற்றவர்களே அதிர்ஷ்டசாலிகள்.

=> வாங்குற சம்பளத்தை அப்படியே மனைவியிடம் கொடுக்குற தால, சேமிப்பு அதிகமாகுதோ இல்லையோ கண்டிப்பா கேள்வி களும் சண்டைகளும் குறையும்ன்றது மறுக்க முடியாத உண்மை.

=> ஒரு ஆணின் பொறுமை சோதனை செய்யப்படுவது   எப்போனா, கல்யாணத்துக்கு அப்புறம் மனைவியுடன் முதன்முதலாக டிரஸ் எடுக்கப்போகும்போதுதான்.

=> 'எனக்கு இதுதான் வேணும்' னு சொல்ற மனைவியை நம்ப லாம். ஆனா 'எனக்கு எதுவும் வேண்டாம்' னு சொல்ற சில மனை வியரை நம்ப முடியாது. அப்படி சொல்றவங்கதான் ஓவர் செலவு வைப்பாங்க. அதுலயும் சிலபேர் அதை அடிக்கடி சொல்லிக்காட்டி டார்ச்சர் பண்ணுவாங்க.

தன் கணவனின் பக்கத்துல அனகோண்டா பாம்பு இருந்தாக்கூட அசால்டா இருக்குற மனைவி உண்டு. ஆனா கணவனின் பக்கத்துல அழகான பொண்ணு இருந்தா பதறாத மனைவி இருக்கமாட்டாங்க.

=> ஒரு ஆண் தன்னுடைய மனைவியின் அழகை, குணத்தை மத்த பெண்களோடு ஒப்பிடுவது யதார்த்தம்.

ஆனால் அதை வெளிப்படையாக மனைவியிடம் சொல்றதுக்கு ரொம்ப தைரியம் வேணும்.

=> ஸ்கூல்ல டீச்சர் தன்னோட சப்ஜெக்ட்ல இருந்து மட்டும்தான் கேள்வி கேட்பாங்க. ஆனா எல்லா ஏரியாவுலயும் கலந்துகட்டி கேள்விமேல கேள்வி கேட்கும் மெகா டீச்சர் மனைவிதான்.

- ருத்ரன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!