மோடி: சர்க்காரா... ரிப்பேரா? (வீடியோ)

 

மோடி உரை

றுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை என்று தெரிவித்து, கடந்த மாதம் 8-ம் தேதி, பழைய 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கு, இந்தியாவில் எந்த சாமான்ய மக்களும் எதிரிகள் அல்ல. 60 சதவீதம் அளவுக்கு கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கு, குறைந்தது, அதற்கு ஈடாகவோ அல்லது சற்றுகுறைந்த விகிதத்திலோ மாற்று கரன்சிகளை அச்சடித்து, வங்கிகளுக்கு அனுப்பப்பட்ட பின்னர் அல்லவா இந்த அதிரடி நடவடிக்கையை பிரதமர் மேற்கொண்டிருக்க வேண்டும்? பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு, மோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த மற்ற துறை அமைச்சர்களுக்கே அன்றைய தினம் மாலை 6 மணி வரை தெரிந்திருக்கவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன. ஏழை மற்றும் மத்திய தர மக்கள், தங்கள் வங்கிக் கணக்கில் சிறுகச் சிறுகச் சேமித்து வைத்துள்ள பணத்தை எடுக்க முடியாமல் திண்டாடுகின்றனர். வங்கி என்றாலே என்னவென்று தெரியாத ஏழை, பாழைகள் வங்கி வாசல்களிலும், அன்றாடத் தேவைக்கு பணம் இல்லாமல் ஏ.டி.எம் மையங்களிலும் மக்கள் காத்துக்கிடக்கும் நிலைமை இந்தியா முழுவதும் நடந்தேறிக் கொண்டிருக்கிறது. நாடு முழுவதும் மக்கள் தங்களது இல்லத் திருமணங்களை நடத்த முடியாமல், அரசு அறிவித்துள்ள இரண்டரை லட்சம் ரூபாயைக் கூட எடுக்க முடியாமல், அதற்குத் தேவையான ஆவணங்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கும்போது, பெங்களுரில், பி.ஜே.பி-யைச் சேர்ந்த முன்னாள் கர்நாடக அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி தனது மகளுக்கு 650 கோடி ரூபாய் செலவில் திருமணத்தை எப்படி நடத்த முடிந்தது? எனவே மோடியின் கறுப்புப் பண ஒழிப்பு என்பது, அதனை வைத்திருக்கும் முதலைகளுக்கு எதிராகவா அல்லது சாமான்ய மக்களுக்கு எதிராகவா? என்று அரசின் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

மோடி தன்னை ஒரு சாதாரண மனிதராகக் கூறிக் கொள்ளும் அதே வேளையில், கட்சி பொதுக்கூட்டங்களிலும், வேறு நிகழ்ச்சிகளிலும் உரையாற்ற முடியும் என்றால், நாடாளுமன்றத்திற்கு வந்து, மோடியால் எதிர்க்கட்சிகளின் விவாதத்திற்கு விளக்கம் அளிக்க முடியாதா? இந்தியா முழுவதும் ரூபாய் நோட்டு ஒழிப்பால் எழுந்துள்ள சூழ்நிலை குறித்த விரிவான விளக்கங்களை அறிந்து கொள்ள இந்த வீடியோவைப் பாருங்கள்...

 

 

 

...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!