வெளியிடப்பட்ட நேரம்: 15:43 (03/01/2017)

கடைசி தொடர்பு:17:45 (03/01/2017)

தமிழரின் பாரம்பர்யம் ஜல்லிக்கட்டு - சண்டியர் ஆவேசம்!

ஜல்லிக்கட்டு

மிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகளை, வரும் பொங்கல் பண்டிகையின் போது நடத்த, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன. தென் மாவட்ட மக்கள் மட்டுமல்லாது, போட்டிகளை நடத்துவோரிடம் இருந்தும் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று பரவலாக கோரிக்கைகள் எழுந்துள்ளன. 

2016-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தலாம் என்று உத்தரவிட்ட நிலையில், விலங்குகள் நல வாரியம் தொடர்ந்த, மேல்முறையீட்டு மனுவின் அடிப்படையில், கடைசி நேரத்தில் போட்டி நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. மத்திய அரசின் காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் காளைகள் இடம்பெற்றதாலேயே போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம், இப்போட்டிக்குத் தடையை நீக்கிய போதிலும், உச்ச நீதிமன்றத் தடையால் போட்டிகளை நடத்த முடியாத நிலை நீடிக்கிறது. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறும் என்ற நம்பிக்கையுடன் அலங்காநல்லூர் மக்கள் தயாராகி வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்கான முக்கியத்துவத்தை உணர்த்தும் நையாண்டியுடன் கூடிய வீடியோவுக்கு கிளிக் செய்யுங்கள்.. 

 

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்