பையனூர் பங்களா; 100 ஏக்கர் நிலம்! இதுவெறும் சாம்பிள் மட்டுமே!!

பையனூர் பங்களா

ழைய மகாபலிபுரம் சாலையில், பையனூரில் அமைந்துள்ள பாதுகாப்பு நிறைந்த பங்களாவைச் சுற்றிலும், சுமார் 100 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலம் மற்றும் அந்த ஆடம்பர மாளிகை அனைத்தும், தற்போது அ.தி.மு.க பொதுச் செயலாளராகி இருக்கும் சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்குச் சொந்தமானது. 1991 முதல் 1996-ம் ஆண்டு வரை, முதல்வராக ஜெயலலிதா முதல்முறையாக பதவி வகித்த போது, இசையமைப்பாளர் கங்கை அமரனை சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் மிரட்டி வாங்கியதுதான் பையனூர் பங்களா. மேலும், அந்த பங்களாவைச் சுற்றிலும், உள்ள மேய்ச்சல் நிலம், கருங்குழிப்பள்ளம் என்ற கிராமத்தைச் சேர்ந்த பலரை மிரட்டி வாங்கப்பட்டது. ஜெயலலிதாவின் தோழி என்ற அந்தஸ்தில் இருந்தபோதே, இவ்வளவு ஏக்கர் நிலம் மற்றும் பங்களாவை மிரட்டிப் பறித்தனர். 'ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்ற பழமொழிக்கேற்ப இது வெறும் சாம்பிள்தான், மெயின் பிக்ஸர் நிறைய இடங்களில் உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்களா? 

 

 

 

...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!