வெளியிடப்பட்ட நேரம்: 18:15 (27/01/2017)

கடைசி தொடர்பு:18:14 (27/01/2017)

இந்தியாவின் இரண்டாவது பெரிய குகையில் நடக்கலாம்.. வாருங்கள் #Belumcaves

பெலும் குகை, Belum Cave, பெலூம் குகை

பிரபஞ்சத்தின் கண்டறியப்படா பல மர்மங்களும் ஆச்சரியங்களும் குகைகளில் உறங்கிக் கிடக்கின்றன. ஆதி மனிதர்கள் வாழ்ந்த, தொன்மையான நிலப் படிமங்கள் மிகுந்த குகைகளில் பயணிப்பது ஒரு அமானுஷ்ய அனுபவம். அப்படி ஒரு சாகச அனுபவத்தை பெற விரும்புபவர்கள் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள பெலூம் குகைகளில் பயணம் செய்யலாம்.  இந்திய துணைக் கண்டத்திலேயே இரண்டாவது பெரிய குகை, சமவெளியில் இருக்கும் மிக நீளமான குகை என பல சிறப்புகளைப் பெற்ற இந்தக் குகையில் பயணிப்பது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணமாக இருக்கும்.

மொத்தம் 16 பாதைகள் உண்டு இந்தக் குகைக்குள் நுழைய. ஆனாலும் விசாலமான ஒரு பாதையின் வழியாக நுழைவது பாதுகாப்பு.   உயிரியல் சார்ந்தும் வரலாற்று ரீதியாகவும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் குகை, தண்ணீர் சொட்டும் வடிவத்தாலான கூம்பு வடிவ பாறைகளால் ஆனது. பாறைகளின் வடிவமே பேரழகு.  கசித்துளி படிகம் என்று சொல்லப்படும் இந்தப் படிகங்களில் சொட்டுச் சொட்டாக குளிர்ந்த, தூய நீர் வடிந்து கொண்டே இருக்கும். அந்த நீர் நம் உடலில் பட்டு பயணத்தை சிலிர்ப்பாக மாற்றும். திடீரென நம் பயணத்தின் நடுவே சிறு அருவிகளையும் பார்க்க முடியும். இந்த வீடியோவின் 1.35-வது நிமிடத்தில் அப்படியான ஒரு சிறு அருவி நம்மைக் கடக்கிறது. திறந்து விட்ட குழாயில் கொட்டுவது போல, பாறையைத் துளைத்துக் கொண்டு இடைவிடாது கொட்டும் இந்த தூய நீர், மனதை ஈர்க்கிறது. பலநூறு வருடங்களுக்கு முன்னால், இந்தக் குகைக்குள் வாழ்ந்த சமண, புத்த துறவிகளின் சுவடுகள், கற்படுகைகள், தியான அறைகளின் வடிவமைப்புகளை  1.02வது நிமிடத்தில் பார்க்கும்போது பல நூற்றாண்டுகளுக்குப் பின்னால் நம் மனம் நம்மை இழுத்துச் செல்கிறது. 

சுமார் 3229 மீட்டர் நீளமுள்ள இந்தக் குகையைக் கண்டறிந்தவர் பிரிட்டனைச் சேர்ந்த நிலவியல் ஆய்வாளர் ராபர்ட் புரூஸ் பூட். 2002ல் ஆந்திர அரசு இந்தக் குகையை சுற்றுலா தலமாக மேம்படுத்தியது. மூன்றரை கிலோ மீட்டர் நீளம் வரை குகை ஆய்வு செய்யப்பட்டிருந்தாலும் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவுக்கு மட்டுமே சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

இந்தியாவில் பார்க்க வேண்டிய இடமான சிலவற்றில்,  9 கிமீ தூரத்திற்கு குகை சாலை, ஸ்ரீநகரில் உள்ளது. இந்த பெலூம் குகைக்கு, ரொம்ப தூரமெல்லாம் பயணிக்க வேண்டியதில்லை..  கர்நூலில் இருந்து, 106 கி.மீ தொலைவில் உள்ளது இந்தத் பெலூம் குகை. இருட்டும், ஆதி மனிதர்களின் உயிர் வாசமும், வரலாற்றின் படிமங்களும், இன்னும் கண்டறியப்படாத ஆச்சரியங்களும் நிறைந்த இந்தக் குகைக்குள், ஒன்றரை கிலோ மீட்டர் பயணிப்போம் வாருங்கள். பயத்தை கழட்டி வைத்து விட்டு உற்சாகத்தோடு குகைக்குள் இறங்குங்கள். 

வீடியோவிற்கு:-

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்