வெளியிடப்பட்ட நேரம்: 15:17 (01/02/2017)

கடைசி தொடர்பு:15:37 (01/02/2017)

அரசியல் கட்சி மாநாடு Vs ஜல்லிக்கட்டு போராட்டம்! (Video)

ஜல்லிக்கட்டு


சென்னை மெரினாவில் ஜனவரி 17-ம் தேதி தொடங்கி தொடர்ந்து 7 நாட்கள் இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள், முதியோர் என லட்சக்கணக்கானோர் கூடினர். அவர்களின் அனைவரின் ஒரே கோரிக்கை, தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்பதுதான். தமிழர்களின் பாரம்பர்ய ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்தக்கூடாது என்று சொல்வதற்கு வெளிநாட்டு தன்னார்வ அமைப்புக்கு உரிமை இல்லை. எனவே, அந்த அமைப்பை இந்தியாவில் தடைசெய்ய வேண்டும் என்று முழக்கமிட்டு, அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசியல் கட்சிகளின் மாநாட்டிற்கும், போராட்டங்களுக்கும் ஆட்களைத் திரட்ட அக்கட்சியினர் படாதபாடுபடும் நிலையில், வாட்ஸ்அப் ஒருங்கிணைப்பு மூலம் 100 பேர் திரண்ட நிலையில், அடுத்தடுத்த நாட்களில் இந்த எண்ணிக்கை லட்சக்கணக்காக உயர்ந்ததுடன், உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் ஆதரவும் கிடைத்ததால், மத்திய-மாநில அரசுகள் திகைத்து நின்றன. இந்தப் போராட்டம் தொடர்பான தகவலுடன்கூடிய வீடியோவுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

 

 

 

...

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்