அ.தி.மு.க தொண்டர்கள் யார் பக்கம்? பன்னீர்செல்வம் Vs சசிகலா..? (Video) #OPSVsSasikala

பன்னீர்செல்வம்

மிழக அரசியலில் யாரும் எதிர்பாரக்காத வகையில், பதுங்கியிருந்த ஓ.பன்னீர்செல்வம் புலியாகப் பாய்ந்தது ஏன்? முதல்வராக தனக்கு ஏற்பட்ட அவமானங்களை மெரினாவில் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி விட்டு, ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் சில கருத்துகளைத் தெரிவித்தார். மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை அவரது பேட்டி ஏற்படுத்தி உள்ளது. பன்னீர்செல்வம் எடுத்த முடிவு திடீரென்னு எடுக்கப்பட்ட முடிவா? அ.தி.மு.க அடிமட்டத் தொண்டர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் பன்னீர் செல்வம் முடிவெடுதது விட்டார்.

சசிகலா எதிர்ப்பாளர்களுக்கு தமிழகம் முழுவதும் பரிச்சயமான ஒரு முகம் தேவையாக இருந்தது. அது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் இரண்டு முறை அடையாளம் காட்டப்பட்ட பன்னீர் செல்வத்துக்கு ப்ளஸ்-ஆக அமைந்து விட்டது. அவரது மறைவுக்குப் பின்னும் மக்கள் மத்தியில் சர்ச்சை ஏற்படாமல் இருக்க ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வராக்கினர். இதன்மூலம் ஜெயலலிதாவின் விசுவாசியாகவே தமிழகம் முழுவதும் உள்ள அ.தி.மு.க தொண்டர்களாலும், பொதுமக்களாலும் பன்னீர்செல்வம் பார்க்கப்படுகிறார். ஜெயலலிதாவால் மறைமுகமாக பன்னீர்செல்வம் வளர்க்கப்பட்டாரா? என்பன போன்ற கேள்விகள் நம்மிடையே எழுகின்றன.

இதற்கான பதில்களை அறிய இந்த வீடியோவைப் பார்க்கவும்...

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!