''ஜெயலலிதாவுக்கு கோயில் கட்ட திட்டமிட்டிருந்தேன்!'- ஒ.பன்னீர்செல்வம் #Video #OPSVsSasikala

பன்னீர் செல்வம்

முதல்வர் பன்னீர்செல்வம் ஜெயலலிதா நினைவிடத்தில் அமர்ந்து தியானம் செய்த பின்னர் அளித்த பேட்டி, தமிழக அரசியலை புரட்டிப் போட்டு விட்டது. இந்த நிலையில், பன்னீர்செல்வம், தனது நிலைப்பாடு குறித்தும், முதல்வர் பதவியில் அமரவைத்து விட்டு, தன்னை தனது அமைச்சரவை சகாக்களால் அவமானப்படுத்தப்பட்டது குறித்தும் விகடனுக்கு மனந்திறந்து பேட்டியளித்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தனக்கு அளிக்கப்பட்ட பெரியகுளம் நகரச் செயலாளர் பதவி முதல், தன்னை 2001-ம் ஆண்டு முதல்வராக அடையாளம் கண்டு, அந்தப் பதவியை வழங்கியது குறித்தும் அவர் விளக்கமாக எடுத்துக் கூறினார். பெரியகுளம் நகர்மன்றத் தலைவர் என்ற முறையில் ஜெயலலிதாவால் நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட டி.டி.வி தினகரனின் வெற்றிக்காகத் தான் உழைத்ததாகவும் பன்னீர் செல்வம் குறிப்பிட்டார். அதுவரை தினகரனை தான் சந்தித்தது கூட இல்லை என்று குறிப்பிட்ட அவர், தன் மனக்குமுறலை மக்களிடமும், அ.தி.மு.க தொண்டர்களிடமும் வெளிப்படுத்த வேண்டும் என்பதாலேயே சில கருத்துகளைத் தெரிவித்தேன் என்றார். முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அந்தக் கடிதத்தில் ஜெயலலிதா நினைவிடத்தில் வைத்து வேண்டிய பின்னர், குடும்பத்தினருடன் சொந்தஊர் சென்று, அங்கு ஜெயலலிதாவுக்கு கோயில் கட்டி, அதன்மூலம் சமூக சேவை செய்யவே தான் திட்டமிட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார். விகடனுக்கு பன்னீர் செல்வம் அளித்த பிரத்யேக பேட்டியைக் காண இந்த வீடியோவைப் பார்க்கவும்...

 

 

 

 

,,,,

Do you like the story?

Please Appreciate the Author by clapping!