சன்ஷைன் ஆர்கெஸ்ட்ராவின் செந்தமிழ்த் தேன்மொழியாள்!

ஏ.ஆர்.ரஹ்மானால் மூன்று வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்டது, சன்ஷைன் ஆர்கெஸ்ட்ரா. குடும்பச் சூழலால் இசை கற்றுக்கொள்ள முடியாத இளம்பருவத்தினரைத் தேடி, இசை பயிற்றுவிக்கிறது ரஹ்மானின் சன்ஷைன். சென்ற வருடம் இந்த மாணவர்களில் 22 பேரை ஒன்றிணைத்து, ரேடியோ மிர்ச்சி நடத்திய அன்ப்ளக்டு நிகழ்ச்சியில் இசைக்கவைத்திருந்தார்கள். அது, பாடகி எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்களுக்கான அர்பணிப்பாக இருந்தது.

 

 

சென்ற வருடம் போலவே இந்த வருடமும் ரேடியோ மிர்ச்சி நடத்திய அன்ப்ளக்டு  சீசன் 2 நிகழ்ச்சியில் சன்ஷைனைச் சேர்ந்த 10 பேர் கலந்து கொண்டு இசைத்திருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்திக்கு அர்ப்பணித்திருக்கிறார்கள். சென்ற வருடம் போலவே இந்த வருடமும் இந்த நிகழ்ச்சி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. கூடவே, இசை அறிவை எளிய மனிதர்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டும் என்பதுதான் ரஹ்மானின் கனவு. அந்தக் கனவு, சன்ஷைன் மூலம் நிறைவேறியிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!