2017-ல் வறட்சியால் மடிந்த விலங்குகள் எத்தனை என நினைக்கறீர்கள்? #Video

விலங்குகள்

கடுமையான வறட்சியின் காரணமாக தமிழக - கேரள எல்லைக் காடுகளில் 50 யானைகள் உட்பட நூற்றுக்கும் அதிகமான வனவிலங்குகள் செத்து மடிந்துள்ளன. கடந்த 3 மாதங்களில் மட்டும் முதுமலை, சத்தியமங்கலம், கோவைக் காடுகளில் 46 யானைகள் இறந்துள்ளன. சில மாத குட்டிகளில் தொடங்கி, 30 வயதான யானைகள் வரை இறந்து போயுள்ளன. இந்த இறப்புகளுக்கெல்லாம் முதன்மையான காரணமாக வறட்சி இருக்கிறது. 

சத்தியமங்கலத்துக்கு அருகே இருக்கும் பர்கூர் மலை, சோளகணை கிராமத்தில் சோளகர் எனப்படும் பழங்குடியினம் வாழ்ந்து வருகிறார்கள். இந்தப் பகுதியில் கடுமையான தண்ணீர் பஞ்சம்.சிறு சுணைகளில் ஒழுகும் நீரைப் பிடித்துக் கொண்டு, மலைப்பாதையில் குடங்களை சுமந்து கொண்டு போகிறார்கள் பெண்கள். நீரை உறிஞ்சி எடுக்கும் நகரங்களுக்கு தண்ணீர் கிடைக்கிறது. ஆனால், நீரை உற்பத்தி பண்ணும் காடுகளில் வாழும் பழங்குடிகளுக்கு தண்ணீர் இல்லை. 

வறட்சியும், அதனால் மடியும் விலங்குகளை பற்றியும் சொல்கிறது இந்த வீடியோ.

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!