கூகுள், மைக்ரோசாஃப்டின் மோஸ்ட் வான்ட்டட் லிஸ்ட்டில் கோவை மாணவர் ஸ்டீபன் ராஜ்! #VikatanExclusive | Google and microsoft are ready to support stephen raj studies

வெளியிடப்பட்ட நேரம்: 09:08 (06/07/2018)

கடைசி தொடர்பு:14:30 (07/07/2018)

கூகுள், மைக்ரோசாஃப்டின் மோஸ்ட் வான்ட்டட் லிஸ்ட்டில் கோவை மாணவர் ஸ்டீபன் ராஜ்! #VikatanExclusive

தொழில்நுட்ப உலகில் அசைக்க முடியாத இடத்தில் இருக்கும், கூகுள் மற்றும் மைக்ரோ சாஃப்ட் நிறுவனங்கள், கோவையைச் சேர்ந்த ஒரு மாணவரை போட்டி போட்டு படிக்க வைத்துக் கொண்டிருக்கின்றன

கூகுள், மைக்ரோசாஃப்டின் மோஸ்ட் வான்ட்டட் லிஸ்ட்டில் கோவை மாணவர் ஸ்டீபன் ராஜ்! #VikatanExclusive

தொழில்நுட்ப உலகில் அசைக்க முடியாத இடத்தில் இருக்கும் கூகுள் மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனங்கள், கோவையைச் சேர்ந்த ஒரு மாணவரை போட்டிப் போட்டு படிக்க வைத்துக் கொண்டிருக்கின்றன. அத்தியாவசியத் தேவைகளுக்கு கூகுளும், மைக்ரோசாஃப்டும் தேவை என்ற நிலை வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. தொழில்நுட்ப உலகில் மோஸ்ட் வான்டட் லிஸ்ட்டில் இருக்கும் இந்த நிறுவனங்கள், கோவையைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ் என்ற 19 வயது மாணவரை, டெல்லி ஐ.ஐ.டி-யில் , முதுகலை படிக்க வைக்க முன் வந்துள்ளன.

கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ். சாதாரண குடும்பத்தில் இருந்து வந்த பக்கா கோயம்புத்தூர் இளைஞன். முழுக்க, முழுக்க அரசுப் பள்ளியில், தமிழ் வழி கல்வி பயின்று, பயனீர் கலை அறிவியல் கல்லூரியில், பி.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பை முடித்துள்ளார். படிக்கும் போதே பக்கா டெக்கீ. படிப்பிலும் செம கெட்டி. 

டெல்லியில் இருக்கும் ஸ்டீபனை நீண்ட முயற்சிக்குப் பிறகு செல்போனில் பிடித்தோம். போனை எடுத்த உடனேயே, "அண்ணா சொல்லுங்கண்ணா" என்று கொங்குத் தமிழ் பொங்கினார். நாம் விஷயத்தை சொன்ன உடனே, அது பெரிய கதைண்ணா. “சின்ன வயசுல இருந்தே, ஒரு பெரிய தொழில்நுட்ப கம்பெனில வேலை செய்யணும்னு ஆசை. சாதாரண கோடிங் பண்றவங்களுக்குக் கூட, பல லட்சம் டாலர் சம்பளம் கொடுத்துட்டு இருக்காங்கண்ணு தெரிஞ்சுக்கிட்டேன்.

அதுக்கப்பறம்தான், கூகுள், மைக்ரோ சாஃப்ட்ல இருக்கறவங்கள, பேஸ்புக்ல தேடி தேடி பேசினேன். ஆரம்பத்துல அவங்க என்ன கண்டுக்கவே இல்ல. அப்பறம் என் டார்ச்சர் தாங்காம பேச ஆரம்பிச்சாங்க. என்னோட, புராஜக்ட் ஐடியாக்களை ஷேர் பண்ணுவேன். நிறையா கத்துக்கிட்டேன். ஜனவரி மாசம், பேங்காக்ல நடந்த, ஒரு இன்டர்நேஷனல் கான்ஃபிரன்ஸ்ல கலந்துக்கிட்டேன்.  அப்பறம், கம்போடியால, மைக்ரோ சாஃப்ட் ஏற்பாடு பண்ணிருந்த, ஒரு நிகழ்ச்சில கலந்துக்கிட்டு என்னோட பிரசன்டேஷன சப்மிட் பண்ணேன்.

ஸ்டீபன் ராஜ்

பின்னர், கூகுள் நடத்திய இன்டர்நேஷனல் கான்ஃபிரன்ஸ்லயும் கலந்துக்கிட்டேன். உலகம் முழுவதும் இருந்து, பல்வேறு நாடுகளச் சேர்ந்தவங்க கலந்துக்கிட்ட அந்த கான்ஃபிரன்ஸ்ல, இந்தியாவுல இருந்து நானும், இன்னொரு மாணவனும்தான் கலந்துக்கிட்டோம். மத்த ஸ்டூன்ட்ஸ் ஒரே நாள்ல கிளம்பிட்டாங்க. ஆனா, என்ன 10 நாள் தங்க வெச்சு நிறையா கத்துக் கொடுத்தாங்க.  அந்த கான்ஃப்ரன்ஸ் மூலம் என்ன கூகுளோட, ஸ்டூடன்ட்  அம்பேசிடரா தேர்ந்தெடுத்தாங்க. மைக்ரோ சாஃப்டும் இம்ப்ரஸ் ஆகிட்டாங்க.

சரி, ஏதாவது ஒரு கம்பெனில வேலைக்கு போகலாம்னு இருந்தப்பத்தான், PG படிச்சாகணும்னு சொன்னாங்க. சரி, ஐ.ஐ.டி-ல  படிக்கலாம்ணு முடிவு பண்ணேன். அப்பதான், என்னோட படிப்புக்கு, கூகுளும், மைக்ரோ சாப்ஃடும் ஸ்பான்சர் பண்றதா சொன்னாங்க. அக்டோபர்ல கிளாஸ் தொடங்கும்.

காலேஜ் சேர்ந்த புதுசுல இங்கிலீஸ்னால கொஞ்சம் தடுமாறினேன். இப்ப, என்னோட இங்கிலீஷ நல்லாவே இம்ப்ரூவ் பண்ணிட்டேன். எம்.சி.ஏ நல்ல படியா முடிக்கணும். கொஞ்ச நாளுக்கு உலகம் முழுசும் சுற்றி, நிறைய அனுபவங்களோட, இந்தியா வரணும். ஏதாவது ஒரு கம்பெனிக்கு ஒரு குறிப்பிட்ட பகுதியாவது என்னோட கன்ட்ரோல்ல இருக்கற மாதிரி, ஒரு பொறுப்புக்கு வரணும். அவ்வளவு தாங்கண்ணா” என்ற கோடிங் போலவே, படபடவென பேசி முடித்த ஸ்டீபனுக்கு, சுந்தர் பிச்சையை நேரில் சந்தித்துப் பேச ஆசையாம்.

ஸ்டீபன்

வாழ்த்துகள் ஸ்டீபன்


டிரெண்டிங் @ விகடன்