வெளியிடப்பட்ட நேரம்: 20:06 (24/04/2017)

கடைசி தொடர்பு:20:05 (24/04/2017)

"நாங்க மொத்தம் 12 பேரு பாஸ்!" - 'கோவமா குட்டிமா' பேஜ் அட்மின்

`கோவமா குட்டிமா'... இன்றைய தேதிக்கு தமிழ்நாட்டின் டிரெண்டிங் மீம்ஸ் பேஜ். `நடுராத்திரி நயன்தாரா', `உச்சி வெயில் உஷா', `இதயத்திருடன்' என விதவிதமான புனைப்பெயர்களோடு உலாவும் சிலர்தான் அந்த முகநூல் பக்கத்தில் மீம்ஸ்களாய் போட்டு தெறிக்கவிடுகிறார்கள். `காதலும் காதல் சார்ந்த இடமும்...' என முகவுரை எழுதிவிட்டு, காட்டு மொக்கை மீம்களாய் போட்டு மக்களை கதறவிடுகிறார்கள். இதே நிலைமை தொடர்ந்தால் தமிழகம் தாங்காது என நினைத்து, அதன் அட்மின்களில் ஒருவரை போனில் பிடித்துப் பேசினோம்.

கோவமா குட்டிமா

"யாருய்யா நீங்கெல்லாம்? எங்க இருந்துய்யா வர்றீங்க?"

``ஹாஹாஹா... நைஸ் கொஸ்டின். நாங்க மொத்தம் பன்னிரெண்டு பேர் அட்மினா செயல்பட்டு வர்றோம். நான் அமெரிக்காவுல இருக்கேன். சத்தியமா, அமெரிக்காவுல தான் ப்ரோ இருக்கேன். அட்மின்ஸ் நாங்க ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்தது கூட கிடையாது. ஃபேஸ்புக்கால் இணைந்தோம். இன்னிக்கு ஃபேஸ்புக் மூலம் மக்களை சந்தோஷப்படுத்தி வர்றோம்.'' ( சந்தோஷப்படுத்துறோம்ங்கிறதை விட படுத்துறோம்ங்கிறது தான் சரியா இருக்கும்! )

``யாருய்யா அந்த குட்டிம்மா? அந்தப் புள்ள ஏன் கோவமாவே இருக்கு? சும்மா சொல்லுங்க...''

``அது சும்மா ரைமிங்கா, டைமிங்கா இருக்கட்டும்னு வெச்ச பெயர் ப்ரோ. பெயர் வெச்சால் அனுபவிங்க... ஆராய்ச்சி பண்ணாதீங்க. லவ் பண்ற பெரும்பாலான பொண்ணுங்க, பெரும்பாலான நேரத்துல கோவமாத்தான் இருப்பாங்க. அந்த நேரத்துல பெரும்பாலான பசங்க 'கோவமா குட்டிமா?'னு தான் கேட்பாங்க. அதான் அதையே பெயரா வெச்சுட்டோம். அது சும்மா ரைமிங்கா, டைமிங்கா இருக்கட்டும்னு வெச்ச பெயர் ப்ரோ. பெயர் வெச்சா அனுபவிங்க, ஆராய்ச்சி பண்ணாதீங்க.''

மீம்ஸ்

``ஏன் இவ்ளோ மொக்கையா மீம்ஸ் போட்டு சாவடிக்கிறீங்க? எதுவும் வேண்டுதலா?''

``நாட்டுக்குள்ள நல்ல மீம்ஸ் போடுற எத்தனையோ மீம் க்ரியேட்டர்ஸ் பெயர் வெளிய தெரியவே மாட்டேங்குது. அவங்களை மக்கள் மதிக்கிறதே இல்லை. மொக்கையா மீம்ஸ் போட்டால் தான் விழுந்து விழுந்து சிரிக்குறாங்க. அதான், நாங்களும் மொக்கையா மீம்ஸ் போட ஆரம்பிச்சோம். இப்போ பாருங்க, எங்க பேஜுக்கு தினமும் லைக்ஸ் குவியுது. நாங்களும் விவசாயிகள் பற்றி, சமூக பிரச்னைகள் பற்றி மீம்ஸ் போட்டோம். யாரும் கண்டுக்கலை. இது எங்க தப்பு இல்ல, மக்களோட தப்பு."

``இதுக்கெல்லாம் ஐடியாஸ் எங்க இருந்துங்க பிடிக்குறீங்க..?''

``சாதாரணமா பேசும்போதே கான்செப்ட் கொட்டும் ப்ரோ. அதையெல்லாம் குறிச்சு வெச்சுக்குவோம். அப்புறம் மொக்கையா மீம் போடுறது ஒண்ணும் அவ்ளோ கஷ்டம் இல்லை. போற போக்குல தட்டிவிட்டு போய்கிட்டே இருப்போம்."

``பிரபலமான பேஜ் ஆகிட்டீங்க, ரசிகர்கள் தொல்லை அதிகமாகியிருக்குமே...''

``ஆமாம் ப்ரோ, அதை ஏன் கேட்குறீங்க. ரொம்ப அதிகமாயிடுச்சு. இன்பாக்ஸில் வந்து கழுவிக்கழுவி ஊத்துறாங்க. ஆனா, அதை எல்லாம் நாங்க கண்டுக்குறது இல்லை. சில நேரங்கள்ல தான் கேவலமா திட்டுவாங்க, மற்ற நேரங்கள்ல எல்லாம் ரொம்ப கேவலமா திட்டுவாங்க. எங்களுக்கு அது பழகிடுச்சு. சரி, நாம அடுத்த கேள்விக்கு போவோம். மனசெல்லாம் ரணமா கெடக்கு ப்ரோ."

மீம்ஸ்

``காதலை யாராலும் அழிக்கமுடியாது'னு சபதமெல்லாம் எடுக்குறீங்களே பாஸ்?''

"ஆமாம், நாங்க இருக்குற வரைக்கும் காதலை யாராலும் அழிக்கமுடியாது. காதலுக்காக வாழ்வோம். காதலர்களுக்காக சாவோம்."

``உங்க பேஜ் மாதிரியே `கோவமா புஜ்ஜிமா, கோவமா குருவம்மா'னு நிறைய பேஜ்கள் முளைச்சுருக்கே, பார்த்தீங்களா?''

``ஏன் ப்ரோ... எல்லோரும் சூனா பானா ஆகிடமுடியுமா?" என கோவமாக போனை வைத்துவிட்டார்.


டிரெண்டிங் @ விகடன்