Published:Updated:

`ஒரு படத்தை தொடங்கிட்டாருனா அசைவம் சாப்பிடவே மாட்டார்!' - ஹரி மனைவி ப்ரீத்தா பூரிப்பு

ஆ.சாந்தி கணேஷ்
`ஒரு படத்தை தொடங்கிட்டாருனா அசைவம் சாப்பிடவே மாட்டார்!' - ஹரி மனைவி ப்ரீத்தா பூரிப்பு
`ஒரு படத்தை தொடங்கிட்டாருனா அசைவம் சாப்பிடவே மாட்டார்!' - ஹரி மனைவி ப்ரீத்தா பூரிப்பு

யக்குநர் ஹரியின் படங்கள் என்றாலே செம கெத்துதான். சிங்கம், சாமி, ஆறு, பூஜை, அருள் என்று ஹரியின் படங்கள் எல்லாவற்றிலுமே கத்தியும், காக்கிச்சட்டையும் பட்டையைக் கிளப்பியிருக்கும். 2003-ல் விக்ரம், த்ரிஷா, மனோரமா, ரமேஷ்கண்ணா கூட்டணியில் 'போலீஸ் இல்லடா பொறுக்கி' என்று அதகளப்படுத்தியிருப்பார். 15 வருடங்கள் கழித்து சாமி ஸ்கொயர் ரிலீசாகியிருக்கிறது. இந்தத் தடவை விக்ரமுடன் கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் என்று செம யூத்ஃபுல்லாக களம் இறங்கியிருக்கிறார் ஹரி. கணவரின் படத்தை காலை 6 மணிக்கே பார்ப்பதற்காக, காசி திரையரங்கில் டிக்கெட் புக் செய்த கையோடு, அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார் ப்ரீத்தா ஹரி. 

இயக்குநர் ஹரியின் படங்களின் வெற்றிக்குப் பின்னால், அவருடைய உழைப்பு மட்டுமல்ல... அவருடைய அர்ப்பணிப்பு உணர்வும் இருக்கிறது. அந்த அர்ப்பணிப்பு உணர்வு பற்றி, அவருடைய மனைவி ப்ரீத்தா ஹரி சொல்கிறார். அவருடைய வார்த்தைகளிலேயே அதைக் கேளுங்களேன். 

``என் ஹஸ்பெண்ட், ஒரு படத்துக்குப் பூஜை போட்டுட்டாருன்னா, அந்த நாளில்  இருந்து  அந்தப் படத்தோட ஷூட்டிங் முடிந்து, படம் ரிலீசாகிற வரைக்கும் அசைவம் சாப்பிடவே மாட்டார். அவர் சாப்பிடலைன்னா  எனக்கும் சாப்பிட மனசு வராது. பிள்ளைகளுக்கு மட்டும் செய்து தருவேன். இதோ, இன்னிக்கு படம் ரிலீசாகிடுச்சு. எங்க குலதெய்வத்துக்காக சனி, ஞாயிறு இரண்டு நாள்களும் அசைவம் சாப்பிடமாட்டோம். இந்தியாவுல இருந்தாலும் சரி, வெளிநாட்டில் இருந்தாலும் சரி. எங்க பிள்ளைங்க உட்பட நாங்க யாருமே சனி, ஞாயிறுகளில் அசைவம் சாப்பிட மாட்டோம். ஹரியைப் பொறுத்தவரைக்கும் அவர் எடுக்கிறப் படங்களும், எங்க குலதெய்வமும் ஒன்றுதான். ரெண்டுலேயும் அவருக்கு நிறைய பயபக்தி உண்டு'' என்கிற ப்ரீத்தாவின் ஒவ்வொரு வார்த்தைகளிலும் காதல் நிரம்பி வழிகிறது!