Published:Updated:

சிவசேனா: போராட்டக் குணம் எங்கே போனது?- எடப்பாடி பிளான்-யுவனிடம் ராஜா ரியாக்‌ஷன்|விகடன் ஹைலைட்ஸ்

Vikatan Highlights
Listicle
Vikatan Highlights

சிவசேனா: போராட்டக் குணம் எங்கே போனது?- எடப்பாடி பிளான்-யுவனிடம் ராஜா ரியாக்‌ஷன்|விகடன் ஹைலைட்ஸ்


1
உத்தவ் தாக்கரே

சரணாகதி சிவசேனா... எங்கே போனது அந்த போராட்டக்குணம்..?

காராஷ்டிராவில் தற்போது நடக்கும் அரசியல் குழப்பங்களிடையே ஒரே ஒரு விஷயம் மட்டும் தெள்ளத்தெளிவாக தெரிகிறது. அது.. உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு நிச்சயம் கவிழப்போகிறது என்பதுதான். அதே சமயம், உத்தவ் தாக்கரே கவர்னருக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பப்போவதில்லை. அதற்குப்பதிலாக சட்டசபையில் நம்பிக்கை வாக்குக் கோர முடிவு செய்திருப்பதாகவும், இதன் மூலம் அவரது அரசு, குறைந்தது இன்னும் இரண்டு வாரங்களுக்காவது தாக்குப்பிடிக்க முடியும் என்று அவர் எண்ணுவதாகவும் தாக்கரேவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதே சமயம், நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் திட்டத்தை அறிவிப்பதற்கு முன்னதாக சரத் பவாரின் பதிலையும் தெரிந்துகொள்ள விரும்புகிறார் தாக்கரே. ஏனெனில், முதலமைச்சரின் அரசு இல்லத்திலிருந்து உத்தவ் தாக்கரே காலி செய்தபோது, அது குறித்து, " பா.ஜ.க-விடம் சரணாகதி அடைந்தது போல் ஏன் இவ்வளவு அவசரமாக காலி செய்ய வேண்டும்?" என பவார் அதிருப்தி தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், ஆட்சிக் கவிழ்ந்தால் அது இத்தனை வருடமாக கஷ்டப்பட்டு உருவாக்கிய தனது அரசியல் இமேஜையும் பாதிக்கும் என்று கருதும் பவார், சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ-க்களை வழிக்குக் கொண்டு வருவதற்கான சில திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகவும் தேசியவாத காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது ஒருபுறம் இருக்க, " தங்கள் கட்சியை உடைக்க முயலும் பா.ஜ.க-விடம் சிவசேனா தலைமை ஏன் இப்படி சரணாகதி அடைந்து விட்டது. பால்தாக்கரே காலத்து பழைய போராட்டக்குணம் எங்கே போனது. பழைய சிவசேனாவாக இருந்தால், இப்படி ஒவ்வொரு சிவசேனா எம்.எல்.ஏ-வும் ஹாயாக வீட்டிலிருந்து கிளம்பி, விமான நிலையம் சென்று, அஸ்ஸாமில் முகாமிட்டிருக்கும் சிவசேனா அதிருப்தி கோஷ்டித் தலைவர் ஏக்நாத் ஷிண்டேவிடம் சென்று அணி சேர முடியுமா..?" எனக் குமுறுகிறார்கள் அந்தக் கட்சியின் மூத்த நிர்வாகிகள்.

மேலும் அவர்கள், "சிவசேனாவின் நிறுவனத் தலைவரும், உத்தவ் தாக்கரேவின் தந்தையுமான பால்தாக்கரேவுக்கு எதிராக, அப்போது சிவசேனாவில் செல்வாக்குடன் திகழ்ந்த சகன் புஜ்பால், இப்படித்தான் போர்க்கொசி உயர்த்தினார். அந்த சமயத்தில் அவரை எதிர்த்து சிவசேனா தொண்டர்கள் வீதியில் இறங்கிய ஆவேச போராட்டம், மும்பையையே ஸ்தம்பிக்க வைத்தது. அரசியல் வட்டாரம் அதிர்ந்து போனது. சகன் புஜ்பாலால் வீட்டைவிட்டு வெளியே வர முடியாமல் சுமார் ஒரு மாத காலம் தனது அறைக்குள்ளேயே முடங்கிப் போனார்.

ஆனால், இப்போது ஷிண்டே மற்றும் ஆதரவு எம்.எல்ஏ-க்கள் கட்சித்தாவல் சட்டத்தின் கீழ் பதவியை இழக்காத வகையில், கட்சியை உடைக்கத் தேவையான எம்.எல்.ஏ-க்கள் எவ்வித எதிர்ப்பும் இன்றி, மும்பையிலிருந்து அஸ்ஸாம் சென்று சேருகின்றனர். 'சிவசேனா என்ற புலி, பூனையானது ஏன்..? எதிரிகளைப் பாய்ந்து பிராண்டும் அதன் கூரிய நகங்கள் எங்கே.. அரசியல் எதிரிகளைக் குலை நடுங்கச் செய்யும் அதன் கர்ஜனை எங்கே போனது..." எனக் குமுறித் தீர்க்கிறார்கள்.

மகாராஷ்டிரா சட்டசபையில் சிவசேனாவுக்கு 55 எம்.எல்.ஏ-க்கள் இருந்த நிலையில், இதில் 40-க்கும் அதிகமானோர் ஷிண்டேவுடன் கைகோத்துவிட்டது உறுதியாகி விட்டது. 37 எம்.எல்.ஏ-க்கள் இருந்தாலே, கட்சித்தாவல் சட்டத்தின் கீழ் பதவியை இழக்காமல் அவரால் தனி அணியாக செயல்பட முடியும். இன்னும் சொல்லப்போனால், நாங்கள்தான் உண்மையான சிவசேனா என அவர் உரிமைக் கோரவும் கூடும்.

ஆனால், "தாக்கரே குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் கூட இடம்பெறாத நிலையில், ஏக்நாத் ஷிண்டேவால் சிவசேனாவுக்குத் தலைமை தாங்கி நடத்திச் செல்ல முடியுமா... அப்படியே தலைமை தாங்கினாலும் அவரால் எத்தனை நாட்களுக்குத் தாக்குப்பிடிக்க முடியும்?" என்று கேள்வி எழுப்பும் தாக்கரே ஆதரவாளர்கள், " கடைசியில் இவர்கள் சென்று ஐக்கியமாகப் போவது பாஜக-விடம் தான்" என்கிறார்கள் வேதனையுடன்.

இந்த நிலையில், கவிழும் நிலையில் உள்ள மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசைக் காப்பாற்றும் முயற்சி எதையும் மேற்கொள்ளக்கூடாது என பாஜக தரப்பில் உத்தவ் தாக்கரேவும், சரத் பவாரும் மத்திய பாஜக அமைச்சர் ஒருவரால் மிரட்டப்பட்டதாக புகார் சிவசேனா தரப்பில் புகார் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான செய்தியைப் படிக்க க்ளிக் செய்க..


2
அதிமுக பொதுக்குழு

"இரட்டை இலை முடக்கப்பட்டால் இப்படி மீட்டு விடலாம்..!"- எடப்பாடியின் அதிரடி பிளான்!

கூச்சல், குழப்பம், சலசலப்பு என அ.தி.மு.க பொதுக்குழு நடந்து முடிந்திருக்கிறது. 23 வரைவு தீர்மானங்களும் செல்லாது என அறிவித்திருக்கிறார்கள். ஜூலை 11-ம் தேதி மீண்டும் அ.தி.மு.க பொதுக்குழு கூடும் என அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்திருக்கிறார். ஓ.பி.எஸ் தரப்பு பாதியிலேயே கூட்டத்தைவிட்டு வெளிநடப்பு செய்தார்கள்.

இதைத் தொடர்ந்து டெல்லி விரைந்துள்ள பன்னீர் செல்வம் தரப்பு, '23 ஆம் தேதி நடந்த பொதுக்குழுக் கூட்டம் செல்லாது' என அறிவிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்ய உள்ளனர். ஏனெனில் பொதுக்குழுவைக் கூட்டும் கடிதத்தில் ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பி.எஸ்-ஸிடம்தான் இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.

இந்த நிலையில், 'அதிமுக-வுக்கு ஒற்றைத் தலைமை தேவை’ என எடப்பாடி தீவிரமாக இருப்பது திமுக-வை எதிர்க்கவா, பாஜக-விடம் இருந்து விடுபடவா என்ற விவாதமும் எழுந்துள்ள நிலையில், ஒருவேளை ஓ.பி.எஸ்-ஸின் நடவடிக்கையால் இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டால், அதனை மீட்க எடப்பாடி தரப்பு போட்டு வைத்துள்ள திட்டம் குறித்த தகவலைத் தெரிந்து கொள்ள க்ளிக் செய்க...

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

3
சூர்யா சிவா

ஆம்னி பஸ் கடத்தப்பட்ட விவகாரம்: திருச்சி சிவா மகன் கைது - நடந்தது என்ன?

தி.மு.க., எம்.பி-யான திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா. தி.மு.க-வில் தனக்கு உரிய அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறி சமீபத்தில் பா.ஜ.க-வில் தன்னை இணைத்துக் கொண்டார். அதையடுத்து பா.ஜ.க ஓபிசி பிரிவு மாநில பொதுச் செயலாளர் பதவி சூர்யா சிவாவுக்கு கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில், ஆம்னி பஸ் ஒன்றை கடத்தியதாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சூர்யா சிவா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இது தொடர்பான முழு விவரங்களையும் படிக்க க்ளிக் செய்க...


4
கௌதம் அதானி

ரூ.60,000 கோடி நன்கொடை வழங்கிய கௌதம் அதானி!

சியாவின் மிகப்பெரிய பணக்காரரான கௌதம் அதானிக்கு இன்று 60-வது பிறந்த நாள். இதையொட்டி அவரின் குடும்பத்தினர் ரூ.60,000 கோடி நன்கொடை அளிக்க முடிவு செய்துள்ளனர். அதானியின் மொத்த சொத்து மதிப்பில் இது வெறும் 8% ஆகும். சுகாதாரம், கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைகளுக்கு இந்த நன்கொடை வழங்கப்படுகிறது. அதானி அறக்கட்டளை சார்பில் இந்தப் பணிகள் நிர்வகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தனது பிறந்தநாளையொட்டி கௌதம் அதானி நன்கொடை வழங்கியது தொடர்பான மேலும் விவரங்களை படிக்க க்ளிக் செய்க...


5
Yuvan shankar raja | யுவன் ஷங்கர் ராஜா

"`அப்பா, நாம சேர்ந்து வொர்க் பண்ணலாம்'ன்னு சொன்னப்ப, அவர் ரியாக்‌ஷன்..."- யுவன்ஷங்கர் ராஜா

யக்குநர் பாலு மகேந்திராவிற்குப் பிறகு எதார்த்த வாழ்க்கையை திரையில் கொண்டுவருவதில் அவரின் மாணவரான சீனு ராமசாமி ஒரு தேர்ந்த கலைஞர். 'நீர்ப்பறவை', 'தர்மதுரை' முதலிய அவரின் படங்களின் வரிசையில் இன்று வெளியாகவுள்ளது 'மாமனிதன்' திரைப்படம். விஜய் சேதுபதி, காயத்ரி ஷங்கர் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு 'இசைஞானி' இளையராஜாவும், யுவன்ஷங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்துள்ளனர். இப்படத்தை யுவனே தயாரித்தும் உள்ளார்.

மாமனிதன் படம் குறித்தும், தந்தை இளையராஜாவுடன் இணைந்து இசையமைத்தது குறித்தும் யுவன் ஷங்கர் ராஜாவுடனான உரையாடலைப் படிக்க க்ளிக் செய்க...


6
எம்.எஸ்.விஸ்வநாதன்

"எங்கள் கண்ணதாசன் புகழ் பாடுங்களேன்..." - எம்.எஸ்.வி ஆச்சர்ய பக்கங்கள்!

"நீங்க எம்.ஜி.ஆருக்கு ஒரு மாதிரியும் சிவாஜிக்கு வேற மாதிரியும் இசையமைக்கிறீங்க. ரெண்டும் நல்லாத்தான் இருக்கு. ஆனா, ஏன் இந்த வித்தியாசம்?’னு பலர் என்கிட்டயே கேட்டு இருக்காங்க. நான் அப்படி அவங்களை எப்பவும் பிரிச்சுப் பார்த்து இசையமைச்சது இல்லை. என்கிட்டே இசையமைக்கச் சொல்லி, பாட்டுக்கான சூழ்நிலையைச் சொல்லி படத்தோட இயக்குநரும் தயாரிப்பாளரும்தான் வருவாங்க. சிவாஜி பெரும்பாலும் வரவே மாட்டார். எம்.ஜி.ஆர். வராம இருக்கவே மாட்டார். நான் பொதுவா அந்தந்த ஹீரோ நடிக்கிற பாத்திரம் என்ன... எந்த மாதிரி சூழல்ல பாட்டு வேணும்னு கேட்டு, அதை மனசுல வெச்சுக்கிட்டுதான் இசையமைப்பேன். பாடல் கம்போஸிங், பின்னணி இசையமைக்கிற தேதி, நேரங்கள்ல சின்னச் சின்ன நெருக்கடிகள் வந்திருக்கலாமே தவிர, எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களுக்கு ஒரே சமயத்துல இசையமைக்கிறதுல எனக்கு எந்தக் குழப்பமோ, தர்மசங்கடமோ வந்தது இல்லை.''

வாசகர் கேள்விகளுக்கு பதில் அளித்த எம்.எஸ்.வியின் சுவாரஸ்ய பதிவை மேலும் படிக்க க்ளிக் செய்க...