MGR உயில் சொல்வது என்ன- OPS எதிர்பார்ப்பு-தாக்கரேவை தடுத்த பவார்- பழநியின் அற்புதம்|விகடன் ஹைலைட்ஸ்

MGR உயில் சொல்வது என்ன- OPS எதிர்பார்ப்பு-தாக்கரேவை தடுத்த பவார்- பழநியின் அற்புதம்|விகடன் ஹைலைட்ஸ்

அ.தி.மு.க பிளவுபட்டால்... MGR உயில் சொல்வது என்ன?
அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை சர்ச்சை மிகப்பெரிய அளவில் வெடித்திருக்கிறது. நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட பெரும்பாலானோரின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு இருந்தாலும், கட்சி விதிகள், நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் பன்னீர்செல்வம் தரப்பு, எடப்பாடி தரப்புக்குக் கடும் போட்டி அளித்துவருகிறது.
ஓ.பன்னீர்செல்வத்தின் ஒப்புதல் இல்லாமலேயே அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் ஜூலை மாதம், 11-ம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பினரால் நடைபெறும் என கூறப்படும் பொதுக்குழு தொடர்பாகப் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது.
இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை சென்னைக்குத் திரும்பிய நிலையில் அவரின் ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகளுடனும், உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களுடனும் இணைந்து ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி தரப்பினரால் ஜூலை 11-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கும் பொதுக்குழுவுக்குத் தடை வாங்குவது தொடர்பாக நீதிமன்றத்தை நாட முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்குப் பல்வேறு ஆதாரங்களுடன் மிக நீண்ட கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். அந்தக் கடிதத்தில் அவர் பல்வேறு விவகாரங்களை அதிமுக-வின் சட்ட விதிகளின்படி குறிப்பிட்டிருக்கிறார். இதன் மூலம், இந்த முறை எடப்பாடிக்கு எதிராக இறங்கிப்பார்த்து விடுவது என்பதில் ஓ.பி.எஸ் தீர்மானமாக இருப்பது தெளிவாகத் தெரிகிறது. எடப்பாடி தரப்பில் தன்னிடம் வந்த சமாதானம் பேச வந்தவர்களிடமும் மிக கறாராகப் பேசி திருப்பி அனுப்பிவிட்டார்.
இந்த நிலையில், ஜூலை 11 ல் எடப்பாடி தரப்பு கூட்டும் பொதுக்குழுக் கூட்டத்தில் ஓ.பி.எஸ்-ஸின் பதவி பறிக்கப்பட்டால், அதைத் தொடர்ந்து கட்சி மீண்டும் இரண்டாக பிளவுபடும் சாத்தியமுள்ளது. அப்படி பிளவுபட்டால் அது அ.தி.மு.க-வுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து, கட்சியின் நிறுவனரான எம்.ஜி.ஆர் மீதான விசுவாசிகள் மிக கவலை தெரிவிக்கின்றனர். இன்னொருபுறம் சசிகலாவும் அ.தி.மு.க-வில் நடப்பதையெல்லாம் உன்னிப்பாக கவனித்து வருகிறார்.
மொத்தத்தில் 'தர்மம்... தியாகம்... துரோகம்... ' என மூன்று தரப்பும் முட்டி மோதும் சூழலில் அதிமுக-வில் யார் யார் என்னென்ன செய்தார்கள், கட்சி பிளவுபட்டால், எம்.ஜி.ஆர் உயில் சொல்வது என்ன என்பது குறித்த விரிவான தகவல்களைப் படிக்க க்ளிக் செய்க...

ஓ.பி.எஸ்-க்கு கை கொடுக்குமா பாஜக... டெல்லி மேலிடத்தின் திட்டம் என்ன?
"அதிமுக-வுக்கு பல துரோகங்களை செய்தவர். ஓ.பன்னீர்செல்வம் துரோகத்தின் அடையாளம். பன்னீர்செல்வம் பொருளாளர் பதவியிலிருந்து நீக்கப்படுவாரா என்பது பொதுக்குழு முடிவு செய்யும்” என்கிறார் எடப்பாடி ஆதரவாளரான ஜெயக்குமார்.
அதே சமயம் ஜூலை 11 -ம் தேதியன்று நடைபெற உள்ள அ.தி.மு.க பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை தொடர்பாகத் தீர்மானத்தை நிறைவேற்ற எடப்பாடி பழனிசாமி தரப்பு நடவடிக்கை எடுத்தால், அதைச் சட்ட ரீதியாக எவ்வாறு அணுகுவது என்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஓ.பி.எஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும், தனக்கு பிரதமர் மோடியும், பா.ஜனதா மேலிடமும் ஆதரவளிக்கும் என ஓ.பன்னீர் செல்வம் நம்புகிறார்.

2018-ம் ஆண்டு ட்வீட்டுக்கு இப்போது நடவடிக்கை... சர்ச்சையைக் கிளப்பிய கைது!
ஆல்ட் நியூஸ் (Alt News) நிறுவனத்தின் இணை நிறுவனரும், பத்திரிகையாளருமான முகமது ஜுபைரை நேற்று (ஜூன் 27) டெல்லி காவல்துறை கைது செய்திருக்கிறது. 2018-ம் ஆண்டு, ஜுபைர் பதிவிட்ட ஒரு ட்வீட் சம்பந்தப்பட்ட வழக்கில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், மூத்த பத்திரிகையாளர்களும், எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களும், `உண்மையை வெளிக் கொண்டு வருபவர்களை ஒடுக்க நினைக்கிறது பா.ஜ.க' என்று ஜுபைருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துவருகின்றனர்.

விலக நினைத்த உத்தவ் தாக்கரே - தடுத்து நிறுத்திய சரத் பவார்!
மகாராஷ்டிராவில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடியால் சிவசேனாவின் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருக்கிறது. முக்கிய மூத்த சிவசேனா தலைவர்கள் அதிருப்தி கோஷ்டிக்குச் சென்றுவிட்டதால் சிவசேனாவுக்கு மீண்டும் எப்படி புத்துயிர் கொடுப்பது என்று தெரியாமல் உத்தவ் தாக்கரே திணறிவருகிறார். சிவசேனா எம்.எல்.ஏ-க்கள் அதிருப்தி கோஷ்டியில் சேர்ந்த பிறகு உத்தவ் தாக்கரே தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட வேண்டும் என்று நினைத்தார்.

பழநி என்ற பெயர் எப்படி வந்தது; இம்மலையின் சிறப்புகள் பற்றித் தெரியுமா?
பழநி - முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று. பஞ்சாமிர்தம், காவடிப் பிரார்த்தனை, தைப்பூசம், பங்குனித் தேரோட்டம் இவை எல்லாம் பழநி முருகன் கோயிலின் சிறப்பம்சங்கள் என்பது நமக்குத் தெரியும். இவைபோக, நாம் அறியவேண்டிய இன்னும்பல சிறப்பு விஷயங்கள் பழநிக்கு உண்டு!

தமிழ் சினிமாவும் பாலியல் தொழில் பற்றிய புரிதல்களும்!| My Vikatan
கடந்த சில தினங்களுக்கு முன்பு "18 வயது பூர்த்தியடைந்தவர்கள் தனது சுயஒப்புதலோடு பாலியல் தொழிலில் ஈடுபட்டால் அவர்களை காவல்துறையினர் தொந்தரவு செய்யக்கூடாது" என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது. அந்தக் கருத்து வரவேற்பும் விமர்சனத்தையும் சந்தித்தது. அந்தக் கருத்து நம் தமிழ் சினிமாவில் இதுவரை பாலியல் தொழிலாளிகள் எப்படி காட்டப்பட்டுள்ளார்கள் என்பதை பற்றி சிந்திக்க தூண்டியது.
இதுவரை வந்த தமிழ் சினிமாவில் பாலியல் தொழிலாளிகள் பற்றிய காட்சிகளை பார்ப்போம்...

அந்தக்கால மெட்ராஸ்!
சென்னை முத்தியால்பேட்டை பவழக்காரத் தெருவில் உள்ள கிருஷ்ணன்கோயிலில் ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் ஒன்பதாவது நாள் கொடியேற்றப்பட்டு, உற்சவம் தொடங்குமாம்.
முழுவதும் கண்ணாடியால் அமைக்கப்பட்ட இந்தப் பல்லக்கில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பல வண்ண பொம்மைகள் பதிக்கப்பட்டு இருந்ததாம்.
இந்தக் கோயிலுக்கு முகுந்த நாயுடு என்பவரால் 1925-ல் உபயமாகச் செய்து தரப்பட்ட இந்தப் பல்லக்கையும் அதன் உற்சவத்தையும் அவருக்குப் பின் அவருடைய மகன் மோகனரங்க நாயுடு நடத்தி வந்திருக்கிறார். இந்தப் பல்லக்கைத் தூக்க சுமார் 100 ஆட்களுக்குமேல் தேவைப்படுவார்களாம், பகுதிக்கு 20 ஆட்கள் வீதம் தோள் கொடுத்து இந்தப் பல்லக்கைத் தூக்கி விதி உலா வரும்போது, அழகான கல்யாணப் பெண் வீதியில் நடந்து வருவது போலிருக்கும் என்றார் பெரியவர் ஒருவர்.
அந்தக் காலத்து சென்னை எப்படி இருந்தது என்பது குறித்த சுவாரஸ்ய தகவல்களைப் படிக்க க்ளிக் செய்க...