Published:Updated:

வில்லங்கத்தைக் கிளப்பும் சு.சுவாமி-கொரோனா 4-ம் அலை?--விசு - எஸ்.வி.சேகர் உரையாடல்|விகடன் ஹைலைட்ஸ்

Vikatan Highlights July 1
Listicle
Vikatan Highlights July 1

வில்லங்கத்தைக் கிளப்பும் சு.சுவாமி-கொரோனா 4-ம் அலை?--விசு - எஸ்.வி.சேகர் உரையாடல்|விகடன் ஹைலைட்ஸ்


1
சுப்பிரமணியன் சுவாமி

வில்லங்கத்தைக் கிளப்பும் சு.சுவாமி... திகைத்து நிற்கும் தி.மு.க!

பொதுவாக ஆளும் கட்சிக்கு எதிராக, அந்த மாநில ஆளுநரிடம் ஒரு கட்சியோ அல்லது தலைவரோ புகார் மனு கொடுத்தாலோ அல்லது அனுப்பினாலோ அது பெரும்பாலும், அந்த அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாகவோ அல்லது சட்டம் ஒழுங்கு பிரச்னை, அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்டவை குறித்தோ இருக்கும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியின்போது, தி.மு.க-விலிருந்து பிரிந்து வந்த எம்.ஜி.ஆர் கொடுத்த ஊழல் புகார் அரசியல் அரங்கில் பரபரப்பைத் தொடங்கி வைத்தது.

அதைத் தொடர்ந்து 1989 ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின்போது விடுதலைப்புலிகளுக்கு ஆதரவளிப்பதாக இப்போதைய பா.ஜ.க-வின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கிளப்பிய புகார் ஆட்சியையே கவிழ்க்க வைத்தது.

தி.மு.க ஆட்சிக்கு எதிராக அப்போதைய ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவிடம் மத்திய அரசு அறிக்கை கேட்டும், அவர் கொடுக்க மறுத்து, கடைசியில் அப்போதைய ஜனாதிபதி ஆர். வெங்கட்ராமன் மூலம் தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்டது.

அதற்குப் பிறகு, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிராக, ஆளுநரிடம் சுப்பிரமணியன் சுவாமி கொடுத்த டான்சி ஊழல் புகார் மற்றும் அது தொடர்பான வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டதும் தெரிந்த கதைதான். அப்போதிருந்தே சுப்பிரமணியன் சுவாமி என்றாலே தி.மு.க மற்றும் அ.தி.மு.க-வினருக்கு எட்டிக்காய் கசப்புதான்.

இந்த நிலையில்தான், தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசுடன், சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரத்தை முன்வைத்து மோதலைத் தொடங்கிய சுப்பிரமணியன் சுவாமி, அடுத்ததாக தி.மு.க-வின் தலைமைக் கழக செய்தித்தொடர்பு இணைச் செயலாளரும் வழக்கறிஞருமான இராஜீவ் காந்திக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி தருமாறு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதியிருக்கும் விவகாரம், அந்தக் கட்சியினரிடையே திகைப்பையும் கோபத்தையும் கிளப்பி உள்ளது.

எதற்காக சுப்பிரமணியன் சுவாமி ஆளுநருக்கு இந்தக் கடிதத்தை எழுதினார்...? தி.மு.க தரப்பில் இதற்கு அளிக்கப்படும் விளக்கம் என்ன என்பதைப் படிக்க க்ளிக் செய்யவும்...


2
கொரோனா வைரஸ்

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு... உருவாகிறதா நான்காம் அலை?

மிழகம் முழுவதும் சளி, காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு போன்ற பிரச்னைகளுக்கு ஆளாபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படாததால், கோவிட் பதிவேட்டில் இந்த எண்ணிக்கை பிரதிபலிக்கவில்லை.

தற்போது தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு சராசரியாக 1,285 கொரோனா பாதிப்புகள் பதிவாகின்றன. தொற்றுநோயியல் நிபுணர்களும் மருத்துவர்களும் இது கொரோனாவின் நான்காம் அலையாக உருப்பெற்றுவிடுமோ என்று அஞ்சுகின்றனர். உண்மை நிலை என்ன என்பதைத் தெரிந்து கொள்ள க்ளிக் செய்யவும்...

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

3
அண்ணாமலை - எடப்பாடி பழனிசாமி - பன்னீர் -அதிமுக - பாஜக

அதிமுக உடைந்தால் பாஜக-வுக்கு சாதகமா, பாதகமா?!

க்கிரமாக எரியும் அ.தி.மு.க-வின் ஒற்றைத் தலைமை விவகாரத்தில், "அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை குறித்து பாஜக எந்த கருத்தும் கூறாது", "நாங்கள் அதில் தலையிட மாட்டோம்" என்று பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பதிவு செய்து கொண்டே இருக்கிறார்.

இந்த நிலைமையில், அ.தி.மு.க உடைந்தால், அதுபாஜக-வுக்கு சாதகமா, பாதகமா என்பது குறித்த விரிவான தகவல்களைப் படிக்க க்ளிக் செய்க...


4
நுபுர் ஷர்மா கருத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

"நுபுர் ஷர்மா கருத்து ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கிவிட்டது" - உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

டந்த மாதம் பாஜக-வின் செய்தித்தொடர்பாளராக இருந்த நுபுர் ஷர்மா, தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில், நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தது இந்தியா மட்டுமல்லாது, உலகம் முழுவதிலுமுள்ள இஸ்லாமியர்களிடமிருந்தும் பெரும் கண்டனத்துக்குள்ளது. இந்த விவகாரத்தில் நுபுர் ஷர்மாவைக் கைது செய்யக்கோரி டெல்லி, உத்தரப்பிரதேசம் என பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தன.

இந்த நிலையில் தான் கடந்த செவ்வாயன்று, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில், நுபுர் ஷர்மாவின் கருத்துக்கு ஆதரவாக ஃபேஸ்புக்கில் டெய்லர் ஒருவர் வீடியோ வெளியிட்டதாக, அந்த நபரை இரண்டு பேர் தலை துண்டித்துக் கொலைசெய்யப்பட்டிருப்பது தேசிய அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நுபுர் ஷர்மாவுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் இருக்கக்கூடிய வழக்குகளை டெல்லிக்கு மாற்ற வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.

அப்போது நுபுர் ஷர்மாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தெரிவித்த கடுமையான கருத்து மற்றும் வழக்கின் விவரம் உள்ளிட்டவைகளைத் தெரிந்துகொள்ள க்ளிக் செய்யவும்...


5
ஒரு கப் டீக்கு ரூ.70 கட்டணம் ( ட்விட்டர் )

ரயிலில் ஒரு கப் டீ ரூ.20, ஆனால் அதுக்கு சர்வீஸ் சார்ஜ் ரூ.50... அதிர்ந்து போன பயணி!

டந்த 28-ம் தேதி போபாலிலிருந்து டெல்லிக்கு சதாப்தி ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்த ஒருவர், 1 கப் டீ வாங்கியிருக்கிறார். அந்த டீயின் விலை ரூ.20 ஆகும். ஆனால் அதற்கு விதிக்கப்பட்டிருந்த சர்வீஸ் சார்ஜ் ரூ.50 என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆக மொத்தம் ரூ.70 பில் வந்திருக்கிறது. இதைக்கண்ட அந்த நபர் அதிர்ச்சியில் ஆழ்ந்துபோனார்.

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் சர்ச்சையானதைத் தொடர்ந்து, டீ க்கான சர்வீஸ் சார்ஜ் கட்டணமாக 50 ரூபாய் வசூலிக்கப்பட்டது ஏன் என்பது தொடர்பாக ரயில்வே அளித்துள்ள விளக்கம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள க்ளிக் செய்க...


6
Visu and S.V.Shekhar Interview

" டைரக்டர்னா படம் முடியறவரை... " - விசு - எஸ்.வி.சேகரின் சுவாரஸ்ய உரையாடல்கள்

சேகர் : சினிமாவிலே நிலைமை எப்ப. எப்படி மாறும்னே சொல்ல முடியாது...

விசு : கரெக்ட்! ஒரு படத்துக்கு ஒப்புக் கிட்ட நாளிலிருந்து படம் ரிலீஸாகும் நாள் வரை என்ன வேணுமானாலும் நடக்கலாம். நம்ம மார்க்கெட் நல்லா யிருக்கிற போது புக் பண்ணி, நடுவிலே நீங்க ரெண்டு படம் ஊத்திட்டீங்கன்னு வெச்சிக்குங்க - நான் ஊத்தியிருக்கேன் அந்த மாதிரி நிலையிலே ஜாக்பாட் சீனுவாசன் மாதிரி ஒரு தயாரிப்பாளர் எனக்குக் கிடைக்கலேன்னா இன்னிக்கு நான் இந்தத் தொழில்லே இருந்திருக்கவே மாட்டேன்.

ஏன்னா, 'கண்மணிப் பூங்கா'வும் 'ஒரு கை பார்ப்போம்' படமும் ஊத்தினதுக்கு அப்புறமும் என்னை வெச்சுப் படம் எடுத்துத் தைரியமா தியேட்டர்லே ரிலீஸ் பண்ணினார் அவர். அவர்கிட்டே, 'என் படம் நல்லா ஓடின சமயத்திலே கொடுத்த சம்பளம் கொடுங்க'ன்னு நான் போய்க் கேட்கலாமா? அதே சமயம் ஒரு படத்துக்குக் குறைந்த சம்பளத்துக்கு ஒப்புக்கிட்டு, படம் ரிலீஸாகும்போது நம்ம மார்க்கெட் உயர்ந்துட்டா, 'இப்ப என் மார்க்கெட் படி நிறைய விலைக்கு வித்திருக்கீங்க... எனக்கு அதிகச் சம்பளம் கொடுங்க'ன்னு கேட்கறதும் சரியில்லே...

1984ல் விகடனில் வெளிவந்த விசு, எஸ்.வி.சேகரின் சுவாரஸ்ய உடையாடல்களை மேலும் படிக்க க்ளிக் செய்க...