Published:Updated:

பாஜகவின் LTTE உதாரணம்-அதிகரிக்கும் கொரோனா-எம்ஜிஆர் சொல்லியும் மறுத்த நம்பியார்|விகடன் ஹைலைட்ஸ்

Vikatan Highlights July 2
Listicle
Vikatan Highlights July 2

பாஜகவின் LTTE உதாரணம்-அதிகரிக்கும் கொரோனா-எம்ஜிஆர் சொல்லியும் மறுத்த நம்பியார்|விகடன் ஹைலைட்ஸ்


1
உதய்பூர் படுகொலை

உதய்பூர் கொலையாளிகளுடன் தொடர்பா? பா.ஜ.க சொல்லும் விடுதலைப்புலிகள் உதாரணம்!

பா.ஜ.க செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மாவை உச்ச நீதிமன்றம் நேற்று வெளுத்து வாங்கியதே அந்தக் கட்சிக்கு பெரிய சங்கடத்தை ஏற்படுத்தியது. நபிகள் நாயகம் பற்றி நுபுர் சர்மா, நவீன்குமார் ஜிண்டால் ஆகியோர் தெரிவித்த கருத்துக்கள், சர்ச்சையை உருவாக்கிய நிலையில், அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டது.

நுபுர் சர்மா கட்சியைவிட்டு நீக்கப்பட்டபோதிலும், காவல்துறை தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்திருந்தன. இந்த நிலையில், நாட்டின் பல்வேறு இடங்களில் தொடரப்பட்டுள்ள தன் மீதான வழக்கு அத்தனையும் டெல்லி நீதிமன்றத்திற்கு மாற்றவேண்டும் எனக் கோரி, நுபுர் சர்மா தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நுபுர் சர்மாவின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், அவரது கருத்துக்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தனர். "நுபுர் சர்மாவின் தேவையில்லாத உளறல்களால் நாடு தீக்கிரையாகியுள்ளது. தொலைக்காட்சி விவாதத்தில் நுபுர் சர்மா பேசியதை நாங்கள் கண்டோம். பேசுவதை எல்லாம் பேசிவிட்டு அவர் தன்னை ஒரு வழக்கறிஞர் என்று வேறு அடையாளப்படுத்தியுள்ளார். இது அவமானகரமானது. இதற்காக அவர் நாட்டு மக்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்" என மிக காட்டமான கருத்துகளைத் தெரிவித்தனர்.

இதையடுத்து, இத்தகைய நபரைத்தான் பா.ஜ.க தனது செய்தித் தொடர்பாளராக வைத்திருந்தது என்ற ரீதியில் விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில்,

அந்த விவகாரம் முடிவதற்குள், உதய்பூர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவருக்கு பா.ஜ.க-வுக்குத் தொடர்பு இருப்பதாக அடுத்த சர்ச்சை வெடித்துள்ளது.

உதய்பூர் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட ரியாஸ் அட்டாரிக்கும் பா.ஜ.க-வுக்கும் இடையே தொடர்பு இருப்பதாகக் கூறி சில ஊடகங்களில் செய்தி வெளியானது.

இதைக் குறிப்பிட்டு, டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தி பிரிவு தலைவர் பவன் கேரா, "கொலையாளிக்கும் பா.ஜ.க-வுக்கும் தொடர்பு உள்ளதாக வந்த கூற்றுகள் குறித்து நாங்கள் ஆய்வு செய்தோம், ராஜஸ்தான் பா.ஜ.க தலைவர்களின் பழைய ஃபேஸ்புக் பதிவுகளைக் கண்டறிந்தோம். இதை விடத் தெளிவாக என்ன சான்று இருக்க முடியும்?

பாஜக தலைவர்களின் நிகழ்வுகளில் ரியாஸ் அட்டாரி கலந்து கொண்டிருக்கிறார். பாஜக தலைவர்கள் அவரை 'பாய்' என்று குறிப்பிட்டுப் பதிவிட்டுள்ளனர். இந்த நாட்டில் என்ன நடக்கிறது? உச்ச நீதிமன்றம் நுபுர் ஷர்மாவுக்கு எதிராக சில கருத்துகளைத் தெரிவித்தால், அது நுபுர் ஷர்மாவுக்குமட்டுமானதல்ல. அந்த கருத்துகள் பாஜக-வுக்கானது. உதய்பூர் கொலை தொடர்பாக என்.ஐ.ஏ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டபோது, ​​நாங்கள் அதை வரவேற்றோம். ஆனால் இப்போது ரியாஸ் கட்டாரி பற்றிய இந்தத் தகவல்களை மறைக்க மத்திய அரசு அவசரமாக என்.ஐ.ஏ விசாரணைக்கு உத்தரவிட்டதா என்றக் கேள்வியை எழுப்புகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் இந்தக் குற்றச்சாட்டு பரபரப்பைக் கிளப்பிய நிலையில், இதற்கு பதிலளிக்கும் விதமாக பாஜக ஐடி விங் தலைவர் அமித் மால்வியா தனது ட்விட்டர் பக்கத்தில், "நீங்கள் பொய் செய்தியை பரப்புவதில் எனக்கு ஆச்சரியமில்லை. ஆனால், உதய்பூர் கொலையாளிகள் பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்கள் அல்ல. ராஜீவ் காந்தியைக் கொல்ல காங்கிரஸுக்குள் நுழைய முயன்ற விடுதலைப் புலிகளின் கொலையாளியின் முயற்சியைப் போன்றே அவர்களது ஊடுருவல் முயற்சி. எனவே காங்கிரஸ், பயங்கரவாதம் மற்றும் தேசப் பாதுகாப்பில் ஏமாறுவதை நிறுத்த வேண்டும்" எனக் கூறி உள்ளார்.

உதய்பூர் கொலை விவகாரத்தில் பாஜக , விடுதலைப்புலிகள் இயக்கத்தை உதாரணம் காட்டி இருப்பது இன்னொரு பரபரப்புக்கு திரி கொளுத்தியுள்ளது. முன்னதாக உதய்பூர் படுகொலை வழக்கில் கைதானவர்களில் ஒருவருக்கு பாஜக-வுடன் தொடர்பு இருப்பதாக வந்த தகவலின் முழு பின்னணியைத் தெரிந்துகொள்ள க்ளிக் செய்க...


2
கொரோனா பாதிப்பு

அதிகரிக்கும் கொரோனா... எச்சரிக்கும் மருத்துவ வல்லுநர்கள்!    

கொரோனா பேரிடர் மூன்றாம் அலைக்குப் பிறகு தமிழ்நாடு மெல்ல மெல்ல தொற்று பாதிப்பு குறைந்து இயல்புநிலைக்குத் திரும்பியது. இந்நிலையில், மூன்றாம் அலையில் அதிகமாகப் பரவிய ஒமைக்ரான் கொரோனா வைரஸின் திரிபான பி.ஏ-4, பி.ஏ-5 வகை கொரோனா வைரஸ் பரவல் தமிழ்நாட்டில் அதிகரித்திருக்கிறது.

ஜூன் மாத தொடக்கத்தில் மிகக் குறைந்த அளவில் காணப்பட்ட கொரோனா தொற்று தற்போது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

ஒரே நாளில் 2,069 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது. 1,008 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மாநிலம் முழுவதும் மொத்தம் 11,094 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக அரசுத் தரப்பு புள்ளிவிவரங்கள் தகவல் தெரிவிக்கிறன

இந்த நிலையில், தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நடத்திய ஆலோசனைக் கூட்டம், எச்சரிக்கை விடுத்துள்ள மருத்துவ வல்லுநர்கள் சொல்வது என்ன என்பதைத் தெரிந்து கொள்ள க்ளிக் செய்க...

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

3
மதுரை அண்ணா நகர் உழவர் சந்தை

ஆட்சி மாற்றம்... உழவர் சந்தைகள் இப்போது எப்படி செயல்படுகின்றன..?

மிழகத்தில் ஆட்சிகள் மாறி மாறி வந்துள்ள நிலையில் உழவர் சந்தைகள் தொடர்ந்து இயங்கி வருகின்றன. இச்சந்தைகள் மூலம் உழவர்கள் பலன் அடைந்துள்ளார்களா? எப்படி செயல்படுகிறது? என்பதை நேரில் காணச் சென்றோம்.

உழவர் சந்தையால் பயனுள்ளதா, வியாபாரம் எப்படி நடக்கிறது, போதிய வருவாய் கிடைக்கிறதா..? அங்கு வியாபாரம் செய்பவர்கள் சொல்வது என்ன என்பதைத் தெரிந்து கொள்ள க்ளிக் செய்க..


4
சந்தியா - ஜான் ஐசக்

கணவருக்கு வேலை இல்லை... இளைஞரிடம் ரூ.30 லட்சம் வாங்கியதால் வந்த வினை..!

ன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே சூரியகோடு முளங்குழியை பகுதியை சேர்ந்தவர் ஜான் ஐசக் (40). இவருக்கும் சந்தியா (34) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. ஜான் ஐசக் - சந்தியா தம்பதிக்கு திருமணம் ஆகி பத்து ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தை இல்லை என்பதால் இவர்கள் கவலையில் இருந்ததாக கூறப்படுகிறது. ஜான் ஐசக் முதலில் சென்னையில் வேலை செய்துவந்தார். பின்னர் சொந்த ஊரில் பிளம்பர் வேலை செய்து வந்துள்ளார். அப்போது ஜான் ஐசக் மாதக்கணக்கில் வேலைக்குச் செல்லாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் மார்த்தாண்டத்தில் ஒது தனியார் வங்கியில் வேலைக்கு சென்று வந்துள்ளார் சந்தியா. அப்போது தனது கணவன் ஜான் ஐசக்குக்கு தெரியாமல் அழகன்பாறை பகுதியைச் சேர்ந்த ஆன்றோ பிரப்ளின் என்பவரிடம் முப்பது லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாக தெரிகிறது.

இந்த நிலையில், திருமணம் செய்வதாக இளைஞரிடம் ரூ.30 லட்சம் வாங்கிய விவகாரம் வீட்டுக்குத் தெரியவந்ததால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், கணவருடன் சேர்ந்து மேற்கொண்ட முடிவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான முழுமையான செய்தியைப் படிக்க க்ளிக் செய்க...


5
சித்தரிப்பு படம்

கணவரை பெண்களுக்கு வாடகைக்கு விடும் மனைவி... இப்படியும் ஒரு காரணம்!

ங்கிலாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவரை மற்ற பெண்களுக்கு வாடகை விட முடிவு செய்துள்ளார். லாரா யங் என்ற, மூன்று குழந்தைகளின் தாய்க்கு தான், சமீபத்தில் ஒரு யோசனை தோன்றியுள்ளது.

அதாவது, வீட்டில் இருக்கும் தன் கணவர் ஜேம்ஸை மற்ற பெண்களுக்கு வாடகைக்கு விட்டு சம்பாதிப்பதுதான் அந்த யோசனை. உடனே உங்கள் கற்பனையை பலவிதமாக விரிய விடாதீர்கள். நீங்கள் நினைக்கும்படியான வேலையில்லை இது. கணவருக்கான வேலைக்கு அந்த பெண் சொல்லி இருக்கும் காரணத்தைத் தெரிந்து கொள்ள க்ளிக் செய்க...


6
My friend circle is small - Actor M.N.Nambiar

"எம்ஜிஆர் சொல்லியும் சாப்பிட மறுத்தேன்..!" - எம்.என். நம்பியாரின் சுவாரஸ்யப் பதிவு

நாங்கள் திரு.எம்.என்.நம்பியார் வீட்டிற்குப் போகும் போதே குறிப்பிட்ட நேரம் தவறிச் சென்றோம்.

"வாருங்கள்... வாருங்கள்... 'லேட்' போலிக்கிறதே! நாமெல்லோரும் இந்தியர்கள் அல்லவா?" என்ற சூடான வரவேற்பை வாரிக் கட்டிக் கொண்டோம்..."

எம்.ஜி.ஆர் தொடங்கி தனது சினிமா உலக அனுபவங்கள், நட்பு வட்டம், குடும்பம் என நம்பியார் பகிர்ந்த மேலும் பல சுவாரஸ்ய தகவல்களைப் படிக்க க்ளிக் செய்க...