கமல் அலுவலகத்துக்கும் விஜயகாந்த் கதியா?-TNPSC குழப்பம்-அமித் ஷா கனவு சாத்தியமா?|விகடன் ஹைலைட்ஸ்

கமல் அலுவலகத்துக்கும் விஜயகாந்த் கதியா?-TNPSC குழப்பம்-அமித் ஷா கனவு சாத்தியமா?|விகடன் ஹைலைட்ஸ்

கமல் அலுவலகத்துக்கும் விஜயகாந்த் மண்டப கதியா..?
சென்னை கோயம்பேட்டில் இன்று இருக்கும் தே.மு.தி.க அலுவலகம், விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் திருமண மண்டபமாக இருந்து. அந்த இடத்தையொட்டி கட்டப்பட்ட மேம்பாலத்துக்காக, மண்டபத்தின் ஒரு பகுதி இடம் தேவைப்படுவதாக கூறி, 2007 ஆம் ஆண்டு மண்டபம் இடிக்கப்பட்டது. அரசியலில் தனது வளர்ச்சி பிடிக்காமலும், தன்னை அச்சுறுத்துவதற்காகவுமே அப்போது ஆட்சியில் இருந்த திமுக இதைச் செய்ததாக அந்த சமயத்தில் கொந்தளித்தார் விஜயகாந்த்.
இது தொடர்பாக விஜயகாந்த அப்போது விகடனுக்கு அளித்த பேட்டியின் ஒரு பகுதியைப் படித்தால், விஜயகாந்த் இந்த விஷயத்தில் எப்படி கொந்தளிப்புடன் இருந்தார் என்பது புரியும்....
" சார், இந்த மண்டப விஷயத்துல நிறைய மர்மம் இருக்கு... மண்டபம் இருக்குற இடத்துல பாலம் வரணும்னு திட்டம் போட்டீங்களே, அப்பவே கையில முழுமையான வரைபடம் இல்லாமலா வேலையை ஆரம்பிப்பீங்க... அப்ப சொன்னீங்களா, இந்த மண்டபம் போகும்னு..? இந்த மண்டபம் ஏதோ வெறும் கட்டடம் இல்லைனு அவங்களுக்குத் தெரியும்.
மண்டபத்தைத் தொட்டா, என்னை அடக்கிடலாம்னு அவங்க நினைச்சுட்டாங்க. ஆண்டாள்-அழகர் மண்டபம் இருக்குற இடம், எனக்குக் கல்யாணம் ஆகறதுக்கு முன்னால வாங்குனது. அப்ப எனக்குக் கடன் கொடுக்கக்கூட நிறைய பேர் தயங்கினாங்க. கொஞ்சங்கொஞ்சமா கஷ்டப்பட்டு, என் வியர்வை சிந்திப் பாடுபட்டுத்தான் இந்த இடத்தை வாங்கினேன். எனக்குக் கல்யாணம் ஆனபிறகு கலைஞரோட ஆட்சியிலதான் எம்.எம்.டி.ஏ-கிட்ட முறையா அனுமதி வாங்கிக் கட்டினேன்.
எங்கம்மா ஆண்டாள், நான் பிறந்த கொஞ்சகாலத்துலயே இறந்துட்டாங்க. நான் நல்லா வந்து ஜெயிக்கிறதைப் பார்க்கறதுக்கு என்னை வளர்த்து ஆளாக்குன எங்கப்பா உயிரோட இல்லை! அதனால அவங்க ஞாபகமாத்தான் இந்த மண்டபத்துக்கு ஆண்டாள்-அழகர்னு பெயர் வெச்சிருக்கேன்.
இந்த மண்டபம் வெறும் கட்டடம் கிடையாது... என்னோட உழைப்பு, என்னோட உணர்வு, சென்டி மென்ட் எல்லாம் கலந்ததுதான் இது! அதனாலதான் இதை இடிக்கப் போறாங்க அப்படின்னு நினைக்கும் போதே வருத்தமா இருக்கு. இருந்தாலும், பொதுநலனுக் காகத் தேவைனு வரும்போது, தாராளமா மண்டபத்தை அரசாங்கம் எடுத்துக்கலாம்னு நான்தான் சொன்னேன். அப்புறமா அரசாங்கம்தான் ‘மாற்றுத் திட்டம் இருந்தா கொடுக்கலாம்’னு சொன்னுது. அதன் அடிப்படையில்தான் நான் ஒரு திட்டத்தைக் கொடுத்தேன். எட்டு மாசமாச்சு, நான் திட்டத்தைக் கொடுத்து! ஆனா, உள்ளாட்சித் தேர்தல் முடியும் வரைக்கும் அமைதியா இருந்துட்டு, இப்போ பழையபடி மண்டப விவகாரத்தைக் கையில எடுக்கிறாங்க.
இவ்வளவு நாள் ஏன் சும்மா இருந்தாங்கங்கிற மர்மம் எனக்குத் தெரியாதா? எலெக்ஷனுக்கு முன்னாடி இந்த விஜயகாந்தோட மண்டபத்துல கைவச்சா, ஜனங்க ஓட்டு மூலமா அவங்களுக்கு சரியான பதிலடி கொடுத்துடுவாங்கனு பயந்து போய்தான் அப்போ அமைதியா இருந்துட்டாங்க.
நான் பேசக்கூடாதுன்னுதான் இதுவரைக்கும் இருந்தேன்... நீங்க கேட்டதால சொல்றேன்... இதே மாதிரி பாடி பகுதில ஒரு பாலம் கட்டறீங்களே... அங்கேயும் ஒரு கல்யாண மண்டபம் இருக்கு... அமெரிக்க கம்பெனி ஒண்ணும் இருக்கு... அதுக்கெல்லாம் பாதிப்பு வராமதானே பாலம் கட்டறீங்க? அதேமாதிரி, கிழக்குக் கடற்கரைச் சாலையில வாகனங்கள் போறதுக்குக்கூட கட்டணம் வசூல் பண்றீங்க. அந்த சாலை என்ன நேராவா இருக்கு. வளைஞ்சு நெளிஞ்சிதானே போகுது? விமான நிலைய விரிவாக்கத் திட்டம்னு சொல்றீங்க... அதுக்காக அப்பாவி பொதுஜனங்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகளைத்தான் கைவெப்பீங்களா? ஏன்... விமான நிலையத்துக்குப் பக்கத்துலயே எந்த குடியிருப்பு பகுதியும் இல்லாம, குன்றத்தூர் வரை காலி நிலம் இருக்கே! அதையேன் கைவைக்கலை? இங்கதாங்க இருக்கு பெரிய மர்மமே... அங்க தி.மு.க-காரங்களுக்கு நிறைய நிலம் இருப்பதுதான் காரணம்! உங்க தனிப்பட்ட நலன்களுக்காகப் பொதுமக்களோட வீடுகளை இடிப்பீங்க... எதிர்த்து அரசியல் பண்றேங்கறதுக்காக, என் மண்டபத்துல கைவெப்பீங்க.
மொத்தத்துல மார்க்கம் இருக்கு... ஆனா, அவங்களுக்கு மனசுதான் இல்லை! சினிமாவுல ஆரம்பிச்சி வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்துலயும் எதிர்நீச்சல் போட்டுத்தான் எனக்குப் பழக்கம். இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன்..." எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம், 4-வது வழிப்பாதை திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நிலம் கையகப்படுத்துதலின் ஒரு அம்சமாக, ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையிலுள்ள நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசனுக்குச் சொந்தமான நிலத்தை, பாரதிதாசன் சாலை மெட்ரோ ரயில் நிலையம் அமைப்பதற்காக தருமாறு கோரியுள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது. இதையும் விஜயகாந்த் மண்டபம் இடிக்கப்பட்டதையும் முடிச்சுப்போட்டு சர்ச்சை கிளம்பி உள்ளது.
இது தொடர்பான விரிவான தகவலையும், மெட்ரோ நிர்வாகம் மற்றும் கமல் தரப்பில் என்ன சொல்லப்படும் விளக்கம் என்ன என்பதையும் தெரிந்துகொள்ள க்ளிக் செய்க...

TNPSC:தமிழ்வழி படித்தவர்களுக்கான 20% இடஒதுக்கீட்டில் குழப்பம்..!
தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும், அவர்களுக்கு இடஒதுக்கீடு கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டுவந்தது. அதன் விளைவாக, தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு 20 சதவிகித இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் 2010-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.
அதன்படி, அரசுப் பணிக்கான அடிப்படைத் தகுதி பட்டப்படிப்பு என்றால், அதை மட்டும் தமிழ்வழியில் படித்தால் போதுமானது என்று இருந்த காரணத்தால், அந்த இடஒதுக்கீட வாய்ப்பை ஆங்கில வழியில் படித்தவர்கள் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்கிற பிரச்னை எழுந்தது.
இந்த நிலையில், இந்த விவகாரம் நீதிமன்றத்துக்குச் சென்ற பின்னர், உயர் நீதிமன்றம் சொன்ன வழிகாட்டலுக்கும், நடைமுறைக்கும் வித்தியாசம் இருப்பதாக அரசுப் பணிகளுக்கான போட்டித்தேர்வுக்கு படித்துவரும் தமிழ்வழியில் கல்வி பயின்ற இளைஞர்கள் தெரிவிக்கிறார்கள். ஏன் இந்தக் குழப்பம்?

தென்னகத்தைக் குறிவைக்கும் மோடி, அமித் ஷா & கோ...தமிழகத்தில் தடம் பதிப்பது சாத்தியமா?
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சர்வதேச மாநாடு மையத்தில் பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் ஜூலை 2 தொடங்கி இரண்டு நாள்களாக நடைபெற்றது. இதில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, ஒடிசா போன்ற மாநிலங்களிலும் பா.ஜ.க. ஆட்சிக்கு வரும். இன்னும் 40 ஆண்டுகளுக்கு பா.ஜ.க.வின் சகாப்தம்தான். இந்தியா உலகுக்கு தலைமை தாங்கும் நிலை உருவாகும். பா.ஜ.க.வின் அடுத்த சுற்று வளர்ச்சி என்பது தென்மாநிலங்களிலிருந்து வரும் என்று அனைவரிடத்திலும் ஒரு நம்பிக்கையும், கண்டுபிடிப்பும் உருவாகி உள்ளது" என்றார்.
தென்னகத்தைக் குறிவைத்து பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டத்தில் மோடி, அமித் ஷாவும் பேசியது குறித்த முழுமையான தகவல்களையும், அவர்கள் சொல்லி இருப்பது போன்று தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் பாஜக தடம் பதிப்பது சாத்தியமா என்பதைத் தெரிந்துகொள்ளவும் க்ளிக் செய்க..

முதல்வர் ஸ்டாலினிடம் புகார் வாசித்த கூட்டணிக் கட்சித் தலைவர்கள்?
குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹா, தி.மு.க உள்ளிட்ட கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டுவதற்காக அண்மையில் சென்னை வந்திருந்தார். அண்ணா அறிவாலயத்தில் இது தொடர்பான சந்திப்பு நடந்தது. அப்போது தி.மு.க கூட்டணிக் கட்சித் தலைவர்கள், முதல்வர் ஸ்டாலினிடம் சில புகார்களைக் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம்: உயர் நீதிமன்ற உத்தரவால் ஓ.பி.எஸ்-ஸுக்கு பின்னடைவா?
அ.தி.மு.க செயற்குழு உறுப்பினரான சண்முகம் என்பவர், ஜூலை 11-ல் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுவதற்கு தடைவிதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். கடந்த வாரம் அவரின் மனுவை விசாரித்த நீதிபதிகள், ``பொதுக்குழுவுக்குத் தடைவிதிக்கும் கோரிக்கையை விசாரிக்க முடியாது" எனக் கூறி, அடுத்தகட்ட விசாரணையை ஜூலை 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இந்த நிலையில், இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு பன்னீர் செல்வம் தரப்புக்கு பின்னடைவை ஏற்படுத்துவதாகவே உள்ளது. நீதிமன்றம் சொன்னது என்ன என்பதைத் தெரிந்துகொள்ள க்ளிக் செய்க...

"கலைஞருக்கு ஜோஸியம் பாருங்கப்பா..!" - துரைமுருகன்
தன்கிட்ட ஜோசியம் சொல்ல வர்றவங்க கிட்ட கலைஞரின் ஜாதகத்தை கொடுப்பாராம் துரைமுருகன்.
" 'ஜோசியம், ஜாதகத்துல நம்பிக்கை உண்டா?”
" 'வருவது வரும். வருந்தி என்ன பயன்?'ங்கிற மாதிரி காரெக்டர் நான். என்கிட்டே சிலபேர் 'ஜோஸியம் சொல்றேன் சார்'ம்பாங்க... 'எனக்குப் பார்த்து என்ன ஆகப் போகுது. இதோ தலைவர் ஜாதகம் இருக்கு. அவருக்குப் பாரு.... அவர் தலையெழுத்து நல்லா இருந்தா எங்க எல்லா தலையெழுத்தும் நல்லாத்தான் இருக்கும்பேன்."
விகடனுக்காக இன்றைய தி.மு.க பொதுச்செயலாளரான துரைமுருகன், முன்பு அளித்த நேர் காணலின் முழு உரையாடல்களையும் படிக்க க்ளிக் செய்க...