Published:Updated:

அசராத எடப்பாடி- தமிழ்நாட்டைப் பிரிக்க கோரும் BJP- ஷிண்டே சொன்ன ரகசியம்- ஜெ.பேட்டி|விகடன் ஹைலைட்ஸ்

Vikatan Highlights July 5
Listicle
Vikatan Highlights July 5

அசராத எடப்பாடி- தமிழ்நாட்டைப் பிரிக்க கோரும் BJP- ஷிண்டே சொன்ன ரகசியம்- ஜெ.பேட்டி|விகடன் ஹைலைட்ஸ்


1
எடப்பாடி பழனிசாமி

அசராத எடப்பாடி... அடடே தீர்மானங்கள்... அ.தி.மு.க பொதுக்குழு அப்டேட்ஸ்!

அ.தி.மு.க-வில் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ. பன்னீர் செல்வத்துக்கும் இடையேயான ஒற்றைத் தலைமை மோதல் உச்சத்தை எட்டியிருக்கிறது.

கட்சி நிர்வாகிகள் பெரும்பாலானோர் எடப்பாடி பக்கம் நிற்கும் நிலையில், பன்னீருக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை கட்சியின் நிறுவனரான எம்ஜிஆர் வகுத்து வைத்த கட்சி விதிகள் மட்டும்தான். பொதுச் செயலாளர் பதவிக்கு கட்சி உறுப்பினர்கள் மூலம்தான் தேர்தல் நடத்தி தேர்வு செய்ய வேண்டும் என்ற ஒரே முட்டுக்கட்டைதான் எடப்பாடியை உடனடியாக பொதுச் செயலாளர் ஆக விடாமல் தடுத்து வைத்துள்ளது.

இன்னொரு புறம் தங்கள் தரப்பு வாதங்களைக் கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல், தேர்தல் ஆணையத்தில் முறையீடு என பன்னீர் தரப்பும் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறது.

இதனால் சில சட்டச்சிக்கல்களை எடப்பாடி தரப்பு எதிர்கொள்ள வேண்டியதுள்ளது. ஆனாலும், எடப்பாடி அதற்கெல்லாம் அசருவதாக இல்லை. நீதிமன்றத்தில் அழுத்தமான வாதங்களை முன்வைத்து, இம்மாதம் 11-ம் தேதி மீண்டும் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட அடுத்தப் பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை இல்லை என்ற தீர்ப்பை பெற்று விட்டார்.

இன்னொரு புறம் பன்னீர் தரப்பை பலவீனப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதில் தீவிரமாக உள்ளார். பன்னீரிடம் இருக்கும் கொஞ்சம் நஞ்சம் ஆதரவாளர்களையும் எடப்பாடி பக்கம் இழுப்பதற்கான நடவடிக்கைகள் இன்னும் தொடரத்தான் செய்கின்றன.

அதே சமயம், பொதுக்குழுவில் தன்னை ஒற்றைத் தலைமையாக நிறுவிக்கொள்ள உச்சபட்சமாக எந்த முடிவுக்கும் செல்லலாம் என எடப்பாடி தரப்பில் முடிவு செய்யப்பட்டிருப்பதாக வெளியாகும் தகவல்கள்தான் தற்போது அ.தி.மு.க வட்டாரத்தில் பேசுபொருளாக இருக்கின்றன.

வருகிற 11-ம் தேதி நடைபெற உள்ள அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்ககப்படலாம் என்றும், அதற்கேற்ற வகையில் பொதுக்குழு தீர்மானங்களும் தயாராகி விட்டன என்றும் அவரது ஆதரவாளர்கள் கூறும் நிலையில், இது தொடர்பான முழுமையான தகவல்களைப் படிக்க க்ளிக் செய்க...


2
நயினார் நாகேந்திரன்

"தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க முடியாது என நினைக்க வேண்டாம்..!" - பாஜக அதிரடி

மிழகத்தை இரண்டாக பிரித்து 'கொங்கு நாடு என்ற யூனியன் பிரதேசத்தை உருவாக்கலாம் எனக் கடந்த ஆண்டே பா.ஜ.க தரப்பில் யோசனை தெரிவிக்கப்பட்டது. இது அப்போது கடும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் வலுவாக இருப்பதால், மற்ற கட்சிகளால் பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை. எனவே அந்த ஆதரவு தளத்தை உடைக்க வேண்டுமானால், மாநிலத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்பது பா.ஜ.க-வின் திட்டமாக உள்ளது.

கடந்த 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் கொங்கு மண்டலத்தில் தி.மு.க பெரிய அளவில் வெற்றி பெற முடியாமல் போனது. இந்தப் பகுதியில் அ.தி.மு.கவுக்கு அதிக ஆதரவு இருப்பதை வைத்து, கொங்கு மண்டலம் தனியாக பிரிக்கப்பட்டால், புதுச்சேரியைப் போன்று தாங்கள் ஆட்சியமைத்து விடலாம் என்ற ஆசை பா.ஜ.க-வினரிடையே உள்ளது.

ஆனால் அது நடைமுறையில் அத்தனை சாத்தியமில்லை. ஆளும் கட்சியாக தி.மு.க உள்ள நிலையில், மாநில சட்டமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் மாநில பிரிப்பு என்ற பேச்சுக்கே சாத்தியமில்லை என சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆனால், நாங்கள் நினைத்தால் தமிழ்நாட்டை இரண்டாகப் பிரித்துக் காட்டுவோம்’ என்ற ரீதியில் தமிழ்நாடு சட்டமன்றக் குழுத்தலைவரான நயினார் நாகேந்திரன் அதிரடியாக பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான முழுமையான விவரங்களைத் தெரிந்துகொள்ள க்ளிக் செய்யவும்...

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

3
ஷிண்டே - பட்னாவிஸ்

மகாராஷ்டிரா: எம்.எல்.ஏ-க்கள் உறங்கிய பிறகு நடந்த ஆட்சி கவிழ்ப்பு திட்டம்!    

காராஷ்டிராவில் சிவசேனா ஆட்சியை கவிழ்ப்பதில் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் முன்னின்று செயல்பட்டாலும், அதனை வெளியில் காட்டிக்கொள்ளாமல் கடைசி வரை இருந்தார். பட்னாவிஸ் முதல்வர் பதவிக்காக அலைகிறார் என்று அனைத்து தரப்பினரும் குற்றம்சாட்டியதால், இம்முறை மறைமுகமாக இருந்து ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார்.

ஆனாலும் இந்த ஆட்சி கவிழ்ப்பு அனைத்திற்கு முழுக்காரணம் தேவேந்திர பட்னாவிஸ் என்ற உண்மையை ஏக்நாத் ஷிண்டே போட்டு உடைத்துவிட்டார். இது தொடர்பாக அவர் தெரிவித்த முழுமையான பின்னணி தகவல்களைப் படிக்க க்ளிக் செய்யவும்...


4
மஹுவா மொய்த்ரா

"இறைச்சி, மதுவை ஏற்றுக்கொள்ளும் தெய்வம்தான் காளி..!" - மஹுவா மொய்த்ரா

விஞராகவும், ஆவணப்பட இயக்குநராகவும் அறியப்படும் லீனா மணிமேகலை பல ஆவணப்படங்களை இயக்கியிருக்கிறார். அவர் தற்போது காளி என்ற டெலி ஃபிலிம் இயக்கியிருக்கிறார். அதன் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அந்த போஸ்டரில் காளி வேடமணிந்த பெண் ஒருவர் வாயில் சிகரெட் வைத்துக்கொண்டு, கையில் LGBTQ+ சமூகத்தின் பிரைட் கொடியைப் பிடித்திருப்பதாக இருந்தது.

சர்ச்சையை கிளப்பி உள்ள இந்த காளி பட போஸ்டர் குறித்து, பல்வேறு தரப்பில் எதிர்ப்பும் ஆதரவும் எழுந்துள்ள நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ள கருத்து இன்னொரு சர்ச்சையைக் கிளப்பும் வகையில் உள்ளது. அவர் சொன்னதைத் தெரிந்துகொள்ள க்ளிக் செய்க...


5
இயக்குநர் ஹரி

Yaanai: "எனக்கு பிடிக்காதவங்களை மனசுல வச்சுதான் வில்லனுக்கு வசனம் எழுதுவேன்" - ஹரி

ரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘யானை’ திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அத்திரைப்படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்கள் நம்மிடையே பகிர்ந்து கொண்டிருக்கிறார் இயக்குநர் ஹரி.

நேர்காணலில், சாமி படத்தின் இரண்டாம் பாகம் தாமதம் ஏன், பிரகாஷ் ராஜ் நடிப்பு, வடிவேலு காமெடி, வில்லனுக்கு வசனம் எழுதுவது ஏன் என்பது உள்ளிட்ட ஹரியின் சுவாரஸ்ய பகிர்தலைப் படிக்க க்ளிக் செய்க...


6
Six questions for Ammu - Jayalalithaa

அம்முவிடம் 6 கேள்விகள்...

''உங்களுக்கு 'குஷி' பிறந்துவிட்டால் என்ன செய்வீர்கள்?''

'என் மனம் குதூகலம் அடையும்போது, நான் என்னையே அறியாமல் வாயால் விசில் அடிக்கத் தொடங்கிவிடுவேன். இந்த வழக்கத்தை விட்டொழிக்க நான் பல முறை நினைத்தது உண்டு. ஆனால், முடியவில்லை.

ஒரு சமயம் மைசூர் பிருந்தாவனத்துக்கு என் தோழியுடன் சென்றிருந்தேன்.பிருந்தாவனத்தின் இயற்கை எழில் என் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கவைத்தது. என்னையும் அறியாமல் விசில் அடிக்கத் தொடங்கிவிட்டேன். அப்படியே விசில் அடித்துக்கொண்டே எவ்வளவு தூரம் நடந்திருப்பேனோ தெரியவில்லை. ஏதோ சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். என்ன ஆச்சர்யம்... ஒரு மாணவர் கூட்டமே என் பின்னால் என்னைக் கேலி செய்யத் தயாராக வந்துகொண்டு இருந்தது. திடுக்கிட்டவாறே வெட்கத்துடன் என் தோழியை அழைத்துக்கொண்டு ஓடிப் போய் காரில் அமர்ந்துகொண்டேன். இதை இன்று நினைத்தாலும் வெட்கமாகத்தான் இருக் கிறது.

சமீபத்தில் 'எங்கிருந்தோ வந்தாள்' படத்தில் நான் சகுந்தலையாக நடித்துக்கொண்டு இருந்தேன். அருகில் சிவாஜி கணேசன் துஷ்யந்தன் வேடத்தில் அமர்ந்து இருந்தார். நான் சகுந்தலை வேடத்தில் இருப்பதைக்கூட மறந்து விசில் அடித்துப் பாட ஆரம்பித்துவிட்டேன். சிவாஜி கணேசன் என்னை..."

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த காலத்தில் விகடனுக்கு அளித்த பேட்டியில் 'அம்மு' என்ற பெயர் எப்படி வந்தது என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு அளித்த பேட்டியின் சுவாரஸ்யமான பகிர்வுகளைப் படிக்க க்ளிக் செய்க...