ஷிண்டேக்களை உருவாக்குகிறதா திமுக தலைமை?- ஸ்கெட்ச் எடப்பாடிக்கா?|கருணாமிர்த சாகரம்|விகடன் ஹைலைட்ஸ்

ஷிண்டேக்களை உருவாக்குகிறதா திமுக தலைமை?- ஸ்கெட்ச் எடப்பாடிக்கா?|கருணாமிர்த சாகரம்|விகடன் ஹைலைட்ஸ்

அறிவாலயத்தில் கதறும் உடன்பிறப்புகள்... ஷிண்டேக்களை உருவாக்குகிறதா திமுக தலைமை?
மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி, ஏக்நாத் ஷிண்டே ஆட்சியைக் கவிழ்த்தது போன்று, திமுகவிலும் ஒரு ஷிண்டே உருவாவார் எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கொளுத்திப் போட்டிருப்பது அறிவாலய வட்டாரத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்கப்படலாம் என்றும், உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகலாம் என்றும் செய்திகள் வெளியான நிலையில், திடீரென அந்த முடிவை முதல்வர் ஸ்டாலின் கைவிட்டுவிட்டதாக கூறப்பட்டது.
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரேவுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டதையும், மற்ற அமைச்சர்களின் இலாகாக்களிலும் அவரது தலையீடு இருப்பதாகவும் குற்றம் சாட்டிதான் சிவசேனாவிலிருந்து வெளியேறிய ஏக்நாத் ஷிண்டே கூறிய முக்கிய குற்றச்சாட்டு. இதை மனதில் வைத்துதான் உதயநிதியை அமைச்சராக்கும் எண்ணத்தை ஸ்டாலின் கைவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில்தான், இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துக்கொண்ட தமிழ்க பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் திமுக அரசுக்கும் அதே கதி ஏற்படும் எனக் கூறி வருகிறார். இன்னும் சொல்லப்போனால், 'திமுகவின் ஷிண்டேவாக அமைச்சர் செந்தில் பாலாஜி உருவெடுப்பார்' என்ற ரீதியிலும் சமூக வலைதளங்களில் பாஜக ஆதரவாளர்கள் பதிவிட்டு வந்தனர்.
இதற்கு திமுக தரப்பில், தங்கள் கட்சி ஒன்றும் சிவசேனா அல்ல என்றும், மகாராஷ்டிராவைப் போல திமுக ஒன்றும் கூட்டணிக் கட்சிகளின் தயவில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கவில்லை என்றும் காட்டமான பதிலடி கொடுக்கப்பட்டது. ஆனாலும், அண்ணாமலை இந்த விவகாரத்தை விடுவதாக இல்லை.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் பாஜக நேற்று உண்ணாவிரதம் போராட்டம் நடத்தியது. சென்னை, வள்ளுவர்கோட்டத்தில் போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அண்ணாமலை, " பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் கரைந்து வருகின்றன. மகாராஷ்டிர போலீஸ் பாதுகாப்போடு ஏக்நாத் ஷிண்டே சூரத்திற்கு சென்றார். ஆட்சியில் நீங்கள் இருக்கலாம். ஆனால் உங்களுக்கே என்ன நடக்கும் என்று தெரியாது. காவல்துறையே உங்கள் பக்கம் இருக்காது.
தமிழ்நாட்டிற்கு எப்போது நடக்கிறது என்று பார்ப்போம். இன்னும் ஒரு மாதம்தான். எங்களிடம் ஒரு ஏக்நாத் ஷிண்டே இல்ல. நிறைய பேர் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் தி.மு.க.,வில் இருந்து ஏக்நாத் ஷிண்டே புறப்பட தயாராக இருக்கிறார். உதயநிதியை அமைச்சராக்கினால் தி.மு.க.,வில் இருந்து ஒரு ஏக்நாத் ஷிண்டே புறப்படுவார்" என மீண்டும் கொளுத்திப் போட்டார்.
இதற்கு மிகக் கடுமையாக பதிலடி கொடுத்துள்ள திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, அண்ணாமலை பப்ளிசிட்டிக்காக பேசக்கூடியவர் என விமர்சித்துள்ளார். திமுக ஒரு கட்டுக்கோப்பான இயக்கம் என்றும், சிவசேனாவையும் திமுகவையும் ஒப்பிடத்தேவையில்லை என்றும் கூறியிருக்கிறார்.
அதே சமயம், தி.மு.க ஒன்றியச் செயலாளர்கள் நியமனத்தில், "மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள் தங்களுக்கு வேண்டியவர்களையே நியமித்துக்கொள்கிறார்கள். கட்சிக்காக உழைத்தவர்களை உதாசீனப்படுத்துகிறார்கள்" என்ற கதறலுடன் புகார் மனுக்களைக் கையில் ஏந்தியபடி, தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் வந்து குவியும் உடன்பிறப்புகளால் அறிவாலயம் திணறுகிறது.
ஆனால், " கட்சியினர் தெரிவிக்கும் புகார்களை, இதற்கென விசாரிக்க நியமிக்கப்பட்டிருக்கும் நிர்வாகிகள் குழு சரியாக விசாரிக்காமல் அலட்சியப்படுத்தி அனுப்புவதாகவும், இது கட்சியின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்றும், இதே ரீதியில் சென்றால் அண்ணாமலை சொல்வது போன்று நமது கட்சியிலும் பல ஷிண்டேக்கள்
உருவாகி விடுவார்கள்" எனக் குமுறுகிறார்கள் புகார் கொடுக்க வந்தவர்கள்.

ஸ்கெட்ச் வேலுமணிக்கா... எடப்பாடிக்கா? - நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளர் ரெய்டு பின்னணி
அதிமுக ஆட்சியில் பவர்புல்லாக வலம் வந்தவர் எஸ்.பி. வேலுமணி. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் வேலுமணி சம்மந்தப்பட்ட இடங்களில் இரண்டு முறை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் ரெய்டு நடத்தியது.
இந்த நிலையில், வேலுமணியின் நிழலாக வலம் வரும், நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளர் சந்திரசேகர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

"இந்து, முஸ்லிம் என இரண்டு மதங்களையுமே மம்தா சீரழிக்கிறார்" - பாஜக காட்டம்!
நாட்டில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ச்சியாக நடந்துவரும் மதம் தொடர்பான கலவரங்களுக்கு எதிராக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசைக் கடுமையாக விமர்சித்து வந்தார்.

இரண்டு முக்கிய அமைச்சர்கள் ராஜினாமா - போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் என்ன நடக்கிறது?!
பிரிட்டனின் இரண்டு மூத்த அமைச்சர்களான நிதியமைச்சர் ரிஷி சுனக், சுகாதாரச் செயலர் சஜித் ஜாவித் இருவரும் ராஜினாமா செய்துள்ளனர்.
சுகாதாரச் செயலர் சஜித் ஜாவித் தனது ராஜினாமா கடிதத்தில், "பிரதமர், தனது அரசாங்கத்தின் மூத்த உறுப்பினரின் பாலியல் முறைகேடு குற்றச்சாட்டுகளைக் கையாண்டவிதம் அதிருப்தியளித்திருக்கிறது. இனிமேலும் மனசாட்சியுடன் இந்த அரசுடன் என்னால் தொடர்ந்து பணியாற்ற முடியாது என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
ராஜினாமாவுக்கான உண்மை காரணம் இதுதானா..? போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் என்ன நடக்கிறது என்பது குறித்த முழுமையான தகவல்களைத் தெரிந்துகொள்ள க்ளிக் செய்க...

'இந்திய இசைகள் தமிழிசையில் இருந்து பிறந்தவை!': ஏ.ஆர்.ரஹ்மான், குட்டி ரேவதியின் ஆவணப்படம்!
தமிழிசையின் முன்னோடியான ஆபிரகாம் பண்டிதரின் 'கருணாமிர்த சாகரம்' நூல் குறித்த ஆவணப்படத்தை இயக்கியிருக்கிறார் கவிஞரும் ஆவணப்பட இயக்குநருமான குட்டி ரேவதி.
ஏ.ஆர்.ரஹ்மான் ஃபவுண்டேஷன் தயாரித்திருக்கும் இந்த ஆவணப்படம், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் நியூயார்க் தமிழ் விழாவில் வெளியிடப்பட்டு, திரையிடப்பட்டிருக்கிறது.

கச்சேரியா, பூஜையா..? - பாலமுரளிகிருஷ்ணா
"சிங்கீதம் என்பது பல சிற்றாறுகளால் ஜீவனுாட்டப்படும் நதியைப் போன்றது தான். நதி நெடுங்காலமாக ஒடிக் கொண்டிருந்தாலும் அதன் நீர் எப்போதும் புதிதாகவே இருக்கும். நமது சங்கீதமும் இதே போலத்தான். கூர்ந்து கவனித்தால் வெவ்வேறு தலைமுறைகளில் நிகழ்ந்திருக்கும் மாற்றங்கள் நமக்குத் தென்படும். சில நேரங்களில், போதுமா"ன அளவு புதுத் தண்ணீர் கலக்காமல் போவதால், நதியில் தேக்கம் ஏற்படுவதுண்டு. அந்தத் தேக்கத்தையே புனிதமென்று போற்றிக் கொண்டாடும் நிலைமையும் ஏற்படுகிறது. . இது சங்கீதத்துக்கும் பொருந்தும்..."
1982 ல் பாலமுரளிகிருஷ்ணா கொடுத்த முழுப் பேட்டியையும் படிக்க க்ளிக் செய்க...